கோவார் மொழி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கோவார் மொழி
Default
மொழிக் குறியீடுகள்
ISO 639-2ine
ISO 639-3khw

கோவார் மொழி, பாகிஸ்தானின் வடமேற்கு முன்னரங்க மாகாணத்திலுள்ள சித்ரால் மாவட்டத்தின் யாசின் பள்ளத்தாக்கு, கில்கிட் பகுதியிலுள்ள குப்பிஸ், மேல் சுவாத் பகுதியின் சில இடங்கள் ஆகியவற்றில் பேசப்படும் ஒரு மொழியாகும். அத்துடன் இம் மொழி கில்கிட், குன்சா பகுதிகளின் பிற மொழி பேசும் இடங்களில் இரண்டாம் மொழியாகவும் பயன்பட்டு வருகிறது. ஆப்கானிஸ்தான், சீனா, இந்தியா, தாஜிக்கிஸ்தான் போன்ற நாடுகளிலும், துருக்கியின் இஸ்தான்புல் நகரிலும் இம்மொழி பேசுவோர் குறைந்த அளவில் இருப்பதாகச் சொல்லப்படுகிறது. இது இந்திய-ஆரிய மொழிக் குடும்பத்தின், இந்திய-ஈரானிய மொழித் துணைக் குடும்பத்தில் உள்ள இந்திய-ஆரிய மொழிப் பிரிவைச் சேர்ந்தது. இம் மொழி தார்டிக் மொழிகளுள் ஒன்றாக வகைப்படுத்தப்பட்டு உள்ளது.

கோவார் மொழியில், பிற தார்டிக் மொழிகளுடன் ஒப்பிடும்போது கூடுதலான ஈரானிய மொழிகளின் செல்வாக்கு உள்ளது. ஷினா, கோஹிஸ்தானி என்பவை போலன்றிக் குறைந்த அளவு சமஸ்கிருதச் செல்வாக்கே கோவார் மொழியில் காணப்படுகின்றது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=கோவார்_மொழி&oldid=2766388" இலிருந்து மீள்விக்கப்பட்டது