சிந்து ஆற்றின் வடிநிலம்
Designations | |
---|---|
Invalid designation | |
அலுவல் பெயர் | சிந்து ஆற்றின் வடிநிலம் |
தெரியப்பட்டது | 5 நவம்பர் 2002 |
உசாவு எண் | 1284[1] |
சிந்து ஆற்றின் வடிநிலம் (Indus River Delta), பாகிஸ்தான் நாட்டின் பாயும் சிந்து ஆறு அரபிக் கடலில் கலக்குமிடத்தில் உண்டான வடிநிலம் ஆகும். இந்த வடிநிலத்தின் ஒரு பகுதியானது இந்தியாவின் குஜராத் மாநிலத்தின் கட்சு மாவட்டத்தில் அமைந்துள்ளது. இவ்வடிநிலத்தின் பரப்பளவு 41,440 km2 (16,000 sq mi) மற்றும் சிந்து ஆறு அரபிக் கடலில் கலக்குமிடத்தில் பரப்பளவு 210 km (130 mi) ஆக உள்ளது. இவ்வடிநிலத்தின் செயற்பாட்டில் உள்ள பரப்ப்பளவு 6,000 km2 in area (2,300 sq mi). ஆகும். இவ்வடிநிலப் பகுதியின் சராசரி ஆண்டு மழைப்பொழிவு 25 மற்றும் 50 சென்டிமீட்டர்கள் (9.8 மற்றும் 19.7 அங்) ஆகும். இந்த வடிநிலத்தில் உலகின் பெரிய சதுப்பு நிலக் காடுகள், பறவைகள், மீன்கள் மற்றும் சிந்து டால்பின்களைக் கொண்டுள்ளது.
2003ஆம் ஆண்டின் சிந்து வடிநிலத்தின் மக்கல் தொகை 9,00,000 ஆக மதிப்பிடப்பட்டது. இருந்தது..[2]பெரும்பாலான சிந்து வடிநில மக்கள் வேளாண்மை மற்றும் மீன் பிடித்தொழிலை மட்டும் நம்பியுள்ளனர். இங்குள்ள சதுப்பு நிலக் காடுகள் எரிப்பதற்காக மரங்களை தருகிறது. பஞ்சாப் மாகாணத்தவர் அதிகப்படியான சிந்து ஆற்றின் நீரை வேளாண்மைக்கு பயன்படுத்துவதால், சிந்து வடிநிலப் பகுதியில் நீர் வரத்து குறைந்து கொண்டே செல்கிறது.
புவியியல்
[தொகு]சிந்து வடிநிலத்தில் அரபுக் கடல் கடற்கரையின் நீளம் 210 km (130 mi)[3] 220 km,[4], 240 km (150 mi).[5][6] ஆகும். இதன் பரப்பளவு 29,524 km2 (11,399 sq mi)[6] 30,000 km2 (12,000 sq mi)[4], 41,440 km2 (16,000 sq mi) ஆகும்.[3] சிந்து ஆறு அரபுக் கடலில் கலக்குமிடத்தில் 17 பெரிய கடற்கழிகள் உள்ளன.[2]
சிந்து ஆற்றின் 180 பில்லியன் கன சதுர மீட்டர்கள் (240 பில்லியன் cubic yards) அளவு நீர் இவ்வடிநிலத்தின் வழியாக அரபுக் கடலில் கலக்கிறது.[2] சிந்து ஆற்றின் நீரில் அதிகப்படியான அளவு பஞ்சாப் மாகாணத்தவர் வேளாண்மைக்கு பயன்படுத்துவதால், சிந்து வடிநிலத்தில் வரும் நீர் 1994ஆம் ஆண்டு முதல் குறைந்து வருகிறது.
சிந்து நதி வடிநிலப்பகுதியின் ஆண்டின் சராசரி மழைப்பொழிவு 250–500 mm (9.8–19.7 அங்) ஆகும். சூலை மாத சராசரி வெப்பம் 21 முதல் 30 °C (70 முதல் 86 °F) ஆகும். சனவரி மாதத்தில் சராசரி வெப்பம் 10–21 °C (50–70 °F) ஆகும்.[7]
தென்மேற்கு பருவ மழைக் காலத்தின் போது, இந்த வடிநிலத்தின் பெரும்பாலான பகுதிகள் கடல் நீரால் சூழப்பட்டிருக்கும். இதனால் சிந்து வடிநிலத்தில் உப்பு படிந்து காணப்படும்.
தாவரங்கள்
[தொகு]சிந்து வடிநிலம் உலகின் பெரிய சதுப்பு நிலக்காடுகளைக் கொண்டுள்ளது. இந்த சதுப்பு நிலக்காடுகள் 1980ஆம் ஆண்டில் 600,000 எக்டேர்கள் (1,500,000 ஏக்கர்கள்) பரப்பளவில் இருந்த சதுப்பு நிலக் காடுகள், மக்கள் தொகை பெருக்கத்தால், தற்போது சிறிது சிறிதாக அழிந்து கொண்டு வருகிறது. தற்போது சதுப்பு நிலக்காடுகளை கீழ்கண்ட 3 நிறுவனங்கள் கட்டுப்படுத்துகிறது. - சிந்து மாகாண அரசின் வனத்துறை (280, 470 எக்டேர்) - காசிம் துறைமுக நிறுவனம் 64, 400 எக்டேர்) - சிந்து மாகாண அரசின் வருவாய்த் துறை (255, 130 எக்டேர்)[8]
விலங்கினங்கள்
[தொகு]குளிர்காலங்களில் சிந்து வடிநிலப் பகுதியில் வெளிநாட்டுப் பறவைகள் வலசை வருகிறது. மேலும் இவ்வடிநிலத்தில் மீன்கள் மற்றும் சிந்து டால்பின்களைக் கொண்டுள்ளது.
மக்கள் தொகை
[தொகு]சிந்து ஆற்றின் வடிநிலத்த்தின் மொத்த மக்கள் தொகை 2003ஆம் ஆண்டில் 9 இலட்சம் ஆகும். 75% மக்கள் சிந்து வடிநிலத்தின் சதுப்பு நிலக்காடுகளில் மீன் பிடி தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.[2] இவ்வடிநிலத்தின் கீழ் பகுதியில் மல்லா, மோகனா, சூம்ரோ, சம்மா, சிந்தி ஜாட் மக்கள் வாழ்கின்றனர். இங்கு வாழும் மக்களில் பெரும்பாலும் சிந்தி மொழி பேசி, இசுலாம் சமயத்தை தழுவி வாழ்கின்றனர்.
பொருளாதாரம்
[தொகு]சிந்து வடிநிலத்தின் முதன்மை பொருளாதாரம் வேளாண்மை மற்றும் மீன் பிடித்தொழில் ஆகும்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Indus Delta". Ramsar Convention Sites Information Service. பார்க்கப்பட்ட நாள் 25 April 2018.
- ↑ 2.0 2.1 2.2 2.3 "Indus Delta, Pakistan: economic costs of reduction in freshwater flow". International Union for Conservation of Nature. May 2003 இம் மூலத்தில் இருந்து 2011-11-16 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20111116084702/http://cmsdata.iucn.org/downloads/casestudy05indus.pdf.
- ↑ 3.0 3.1 "Indus Delta, Pakistan". wwf.panda.org (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-04-09.
- ↑ 4.0 4.1 Altaf A. Memon(May 14–19, 2005). "Devastation of the Indus River Delta". {{{booktitle}}}, Anchorage, Alaska:American Society of Civil Engineers.
- ↑ Haq, Saifullah, 1997, p.333-336
- ↑ 6.0 6.1 Coleman, James M.; Huh, Oscar K.; Braud, DeWitte (2008). "Wetland Loss in World Deltas". Journal of Coastal Research 24: 1–14. doi:10.2112/05-0607.1. http://www.deltas2010.com/DeltaLossLSU.pdf.
- ↑ "Indus River Delta". World Wildlife Fund. Archived from the original on 2012-01-23.
- ↑ "Mangroves". Sindh Forest Department. பார்க்கப்பட்ட நாள் 30 March 2020.
ஆதார நூல்கள்
[தொகு]- Haig, Malcolm Robert (1894). The Indus Delta country: a memoir, chiefly on its ancient geography and history. K. Paul, Trench, Trübner & Co., ltd.
- Haq, Bilal U. (1997). "Regional and Oceanographic, Climatic and Geological Factors in Coastal Zone Planning". Coastal zone management imperative for maritime developing nations. Springer. pp. 55–74. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-7923-4765-1.
- Gupta, Avijit, ed. (2008). "The Geographic, Geological and Oceanographic setting of the Indus river". Large Rivers: Geomorphology and Management. John Wiley & Sons. pp. 333–346. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-470-72371-5.
- Mimura, Nobuo, ed. (2008). "The State of Environment of the Pakistan Coast". Asia-Pacific coasts and their management: states of environment. Springer. pp. 301–311. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-4020-3626-2.