நிதின் போஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
நிதின் போசு
Nitin Bose 2013 stamp of India.jpg
நிதின் போசு 2013 அஞ்சல் முத்திரையில்
பிறப்புஏப்ரல் 26, 1897(1897-04-26)
கொல்கத்தா, இந்தியா
இறப்பு14 ஏப்ரல் 1986(1986-04-14) (அகவை 88)
கொல்கத்தா, இந்தியா
பணிதிரைப்பட இயக்குநர், ஒளிப்பதிவாளர், திரைக்கதை எழுத்தாளர்

நிதின் போசு (Nitin Bose) (பிறப்பு: 1897 ஏப்ரல் 26 - இறப்பு: 1986 ஏப்ரல் 14) இவர் ஓர் இந்தியத் திரைப்பட இயக்குனரும், ஒளிப்பதிவாளரும் மற்றும் இந்தியத் திரைப்படத்துறையில் திரைக்கதை எழுத்தாளரும் ஆவார். கொல்கத்தாவில் பிறந்து அங்கேயே இறந்தார். 1930கள் மற்றும் 1940 களின் முற்பகுதியில், வர் நியூ தியேட்டர்சில் பணிபுரிந்தார். இவர் வங்காளம் மற்றும் இந்தி இரண்டிலும் இருமொழி திரைப்படங்களை உருவாக்கினார். பின்னர், இவர் மும்பைக்குச் சென்று பம்பாய் டாக்கீஸ் மற்றும் பிலிமிஸ்தான் என்ற படப்பிடிப்பு நிறுவனங்களில் கீழ் திரைப்படங்களை இயக்கியுள்ளார்.

இந்தியப் படங்களில் பின்னணி பாடலின் முதல் பயன்பாடு 1935இல் போஸ் இயக்கிய படங்களில் நிகழ்ந்தது: முதலில் பாக்யா சக்ரா, என்ற வங்காளத் திரைப்படம், அதே ஆண்டு அதன் இந்தி மறு ஆக்கமான தூப் சாவோன் ஆகியவற்றில் இடம் பெற்றது. இவரது மிகவும் புகழ்பெற்ற படைப்பு கங்கா ஜமுனா என்ற திரைப்படமாகும்.

இளமைக் காலம்[தொகு]

நிதின் போசு வங்காளத் தொழிலதிபர் ஹேமேந்திர மோகன் போஸ் மற்றும் மிருணாளினி ஆகியோருக்கு மகனாவார்.

போசுக்கு சிறுவயதிலிருந்தே புகைப்படம் எடுப்பதில் மிகுந்த ஆர்வம் இருந்தது. ஒரு தீவிர புகைப்படக் கலைஞராக இருந்த இவரது தந்தை, தனது மகனின் ஆர்வத்தையும் வளர்த்தார். [1]

தொழில்[தொகு]

திரைப்பட இயக்கத்தில் போசின் முதல் முயற்சி பெல்ஜிய பேரரசரின் இந்திய வருகை (1921) குறித்த ஆவணப்படமாகும்.

போசு 1926 இல் புனர்ஜான்மா என்றத் திரைப்படத்தில் ஒளிப்பதிவாளராக தனது திரைப்பட வாழ்க்கையைத் தொடங்கினார். [2] நியூ தியேட்டர்ஸ் தயாரிப்பின் கீழ் தேவதாசு (1928) என்றத் திரைப்படத்தில் ஒளிப்பதிவாளராக அறிமுகமானார். நடன-நாடகத்தை அடிப்படையாகக் கொண்டு ரவீந்திரநாத் தாகூர் இசையமைத்து இயக்கிய நதிர் பூஜா (1932) என்ற ஒரே படத்தின் ஒளிப்பதிவாளராக இருந்தார்.

விருதுகள்[தொகு]

குறிப்புகள்[தொகு]

  1. Gulzar; Nihalani, Govind and Chatterjee, Saibal eds. (2003) Encyclopaedia of Hindi Cinema. Encyclopaedia Britannica (India). pp. 262–264. ISBN 81-7991-066-0
  2. An article on 'History of Bengali Cinema' from BFJA site பரணிடப்பட்டது 24 செப்டம்பர் 2005 at the வந்தவழி இயந்திரம்
  3. "9th National Film Awards". இந்திய சர்வதேச திரைப்பட விழா. மூல முகவரியிலிருந்து 2 December 2016 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 8 September 2011.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=நிதின்_போஸ்&oldid=2963711" இருந்து மீள்விக்கப்பட்டது