வாணியம்பாடி வட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

வாணியம்பாடி வட்டம் , தமிழ்நாட்டின் வேலூர் மாவட்டத்தில் உள்ள 13 வட்டங்களில் ஒன்றாகும்.[1] இந்த வட்டத்தின் தலைமையகமாக வாணியம்பாடி நகரம் உள்ளது. இந்த வட்டத்தின் கீழ் வாணியம்பாடி, ஆண்டியப்பனூர், ஆலங்காயம், ஆம்பலூர் என 4 உள்வட்டங்களும், 48 வருவாய் கிராமங்கள் உள்ளன.[2]

இவ்வட்டத்தில் ஆலங்காயம் ஊராட்சி ஒன்றியம் உள்ளது.

மக்கள்தொகை பரம்பல்[தொகு]

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இவ்வட்டத்தின் மக்கள்தொகை 336,548 ஆகும். அதில் 168,996 ஆண்களும், 167,552 பெண்களும் உள்ளனர். 77,178 குடும்பங்கள் கொண்ட இவ்வட்ட மக்கள்தொகையில் 59.4% கிராமப்புறங்களில் வாழ்கின்றனர். இவ்வட்டத்தின் எழுத்தறிவு 75.59% மற்றும்பாலின விகிதம் 1,000 ஆண்களுக்கு, 991 பெண்கள் வீதம் உள்ளனர். 6 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 40821 ஆகவுள்ளது. குழந்தைகள் பாலின விகிதம், 1000 ஆண் குழந்தைகளுக்கு, 919 பெண் குழந்தைகள் வீதம் உள்ளனர். பட்டியல் சமூகத்தினரும், பட்டியல் பழங்குடியினரும் முறையே 60,711 மற்றும் 3,659 ஆகவுள்ளனர். மக்கள்தொகையில் இந்துக்கள் 79.36%, இசுலாமியர்கள் 19.31%, கிறித்தவர்கள் 1.02% மற்றும் பிறர் 0.32% ஆகவுள்ளனர்.[3]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=வாணியம்பாடி_வட்டம்&oldid=2727790" இருந்து மீள்விக்கப்பட்டது