ஈரோடு மாவட்டக் காவல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

ஈரோடு மாவட்டக் காவல் என்பது தமிழ்நாடு காவல்துறையின் ஈரோடு மாவட்டக் காவல் பிரிவு ஆகும். இது ஈரோடு மாவட்ட எல்லைகளை தன் செயல் எல்லையாகக் கொண்டு செயல்படம் மாவட்டக் காவல்துறை அமைப்பு ஆகும். இதற்கு தலைமையாக இந்திய காவல் பணியின் மூலம் காவல் கண்காணிப்பாளர் நியமிக்கப்படுகிறார்.

இதன் தலைமையகமான காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் பன்னீர்செல்வம் பூங்கா அருகே செயல்படுகிறது.

மாநகரக் காவல்[தொகு]

ஈரோடு மாவட்டத்தின் தலைநகரான ஈரோடு நகரம் 2008 லிருந்து மாநகராட்சியாகத் தரம் உயர்த்தப்பட்டுள்ள போதும், ஈரோடு நகருக்கான மாநகரக் காவல் ஆணையரகம் உருவாக்கும் கருத்துரு இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படாமல் பரிசீலனையில் உள்ளது.

காவல் உட்கோட்டங்கள்[தொகு]

இந்த அமைப்பின் கட்டுப்பாட்டில் ஐந்து காவல் உட்கோட்டங்கள் உள்ளன.[1] ஒவ்வொரு உட்கோட்டத்திற்கும் ஒரு காவல் துணைக் கண்காணிப்பாளர் நியமிக்கப்பட்டு செயல்படுகிறது.

காவல் நிலையங்கள்[தொகு]

ஈரோடு மாவட்டக் காவல் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள காவல் நிலையங்கள்.[2]

வ.எண் உட்கோட்டம் நிலையங்கள் வ.எண் உட்கோட்டம் நிலையங்கள்
1 ஈரோடு நகர உட்கோட்டம்

(சட்டம் - ஒழுங்கு)

ஈரோடு நகரம் (கடைவீதி) 27 பவானி உட்கோட்டம் பவானி
2 ஈரோடு வடக்கு (வீரப்பன்சத்திரம்) 28 சித்தோடு
3 ஈரோடு தெற்கு (சூரம்பட்டி) 29 அந்தியூர்
4 ஈரோடு அரசு தலைமை மருத்துவமனை 30 அம்மாப்பேட்டை
5 ஈரோடு தாலுகா (ரங்கம்பாளையம்) 31 வெள்ளித்திருப்பூர்
6 கருங்கல்பாளையம் (பி.பெ.அக்ரஹாரம்) 32 ஆப்பக்கூடல்
7 மொடக்குறிச்சி 33 பர்கூர்
8 அனைத்து மகளிர் (பன்னீர்செல்வம் பூங்கா) 34 பவானி அனைத்து மகளிர் & போக்குவரத்து
9 ஈரோடு மாநகர போக்குவரத்துக் காவல் மாநகர் வடக்கு போக்குவரத்து (மத்திய பேருந்து நிலையம், ஈரோடு) 35 கோபிசெட்டிபாளையம் உட்கோட்டம் கோபிசெட்டிபாளையம்
10 மாநகர் தெற்கு போக்குவரத்து 36 கவுந்தப்பாடி
11 ஈரோடு குற்றப் புலனாய்வு பிரிவு குற்றப் புலனாய்வு பிரிவு (ரங்கம்பாளையம்) 37 திங்களூர்
12 ஈரோடு மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு நகர் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (லக்காபுரம்) 38 சிறுவலூர்
13 ஈரோடு பொருளாதாரக் குற்றப் பிரிவு பொருளாதாரக் குற்றப் பிரிவு-I (பன்னீர்செல்வம் பூங்கா) 39 வரப்பாளையம்
14 பொருளாதாரக் குற்றப் பிரிவு-II 40 நம்பியூர்
15 ஈரோடு வணிக குற்றப் புலனாய்வுப் பிரிவு வணிக குற்றப் புலனாய்வுப் பிரிவு (பன்னீர்செல்வம் பூங்கா) 41 கடத்தூர்
16 ஈரோடு சைபர் கிரைம் ஈரோடு சைபர் கிரைம் 42 கோபிசெட்டிபாளையம் அனைத்து மகளிர்
17 ஈரோடு ஊரக உட்கோட்டம் (பெருந்துறை) பெருந்துறை 43 கோபிசெட்டிபாளையம் போக்குவரத்துக் காவல்
18 வெள்ளோடு 44 சத்தியமங்கலம் உட்கோட்டம் சத்தியமங்கலம்
19 சென்னிமலை 45 பங்களாப்புதூர்
20 காஞ்சிகோயில் 46 புளியம்பட்டி
21 சிவகிரி 47 பவானிசாகர்
22 அரச்சலூர் 48 கடம்பூர்
23 மலையம்பாளையம் 49 ஹாசனூர்
24 கொடுமுடி 50 தாளவாடி
25 பெருந்துறை போக்குவரத்துக் காவல் 51 சத்தியமங்கலம் அனைத்து மகளிர்
26 பவானி தேசிய நெடுஞ்சாலை போக்குவரத்து பிரிவு தேசிய நெடுஞ்சாலை போக்குவரத்துக் காவல் (நசியனூர்) 52 சத்தியமங்கலம் போக்குவரத்துக் காவல்

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஈரோடு_மாவட்டக்_காவல்&oldid=3139895" இருந்து மீள்விக்கப்பட்டது