உள் வட்டச் சாலை, ஈரோடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
உள் வட்டச்சாலை, ஈரோடு
வழித்தட தகவல்கள்
நீளம்:9.6 km (6.0 mi)
முக்கிய சந்திப்புகள்
தொடக்கம்:திண்டல்
To:பி.பெ.அக்ரஹாரம்
அமைவிடம்
முக்கிய நகரங்கள்:ஈரோடு
நெடுஞ்சாலை அமைப்பு

ஈரோடு உள் வட்டச்சாலையானது (Inner Ring Road) (MDR-62), தமிழ்நாடு மாநிலத்திலுள்ள ஈரோடு மாவட்டத்தில், ஈரோடு மாநகரினூடாகச் செல்லும் இணைப்புச்சாலைத் திட்டமாகும். [1]இது ஈரோட்டின் ஆரச் சாலைகளின் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க உருவாக்கப்பட்டது.

இது திண்டல்-வில்லரசம்பட்டி-பெரியசேமூர்-பி.பெ.அக்ரஹாரம் இணைப்பு சாலை என்றும் அழைக்கப்படுகிறது. இது வெளி வட்டச்சாலை திட்டத்திற்கு முன்பாகவே உருவாக்கப்பட்ட சாலையாகும்.

பகுதி-I: திண்டல் - பி.பெ.அக்ரஹாரம் இணைப்பு[தொகு]

இது திண்டல் - வில்லரசம்பட்டி - பெரியசேமூர் வழியாக பி.பெ.அக்ரஹாரம் பகுதியை இணைக்கும் இச்சாலை தற்போது பயன்பாட்டில் மாவட்ட முக்கிய சாலை-62 என வழங்கப்படுகிறது. இந்த இணைப்பு சாலை பெருந்துறை சாலையிலிருந்தது நசியனூர் சாலை, சத்தி சாலை வழியாக பவானி சாலையை இணைக்கிறது.

இந்த சாலை தற்போது மாநில அரசின் மூலம் 11மீ அகலத்தில் மையத்தடுப்புடன் கூடிய பல்வழித்தடத்திலான சாலையாக விரிவுபடுத்தும் பணிகள் நடைபெற்றுவருக்கின்றன.[2] [3]

மூலப்பாளையம் - சோலார் - ஓடப்பள்ளி இணைப்பு[தொகு]

இந்தப்பகுதி, மூலப்பாளையம் பகுதியில் தாராபுரம் சாலையில் துவங்கி கொல்லம்பாளையம் புறவழிச்சாலை வழியாக சோலார் அருகே பழைய கரூர் சாலையை இணைத்து அங்கிருந்து வெண்டிபாளையம் கதவணை இணைப்பு சாலை மூலமாக நாமக்கல் மாவட்டம் ஓடப்பள்ளயில் பரமத்திவேலூர் சாலையுடன் இணைக்கிறது.

மூலப்பாளையம் - அணைக்கட்டு - செங்கோடம்பள்ளம் இணைப்பு[தொகு]

தாராபுரம் சாலையில் மூலப்பாளையம் பகுதியில் துவங்கி நஞ்சை ஊத்துக்குளி கால்வாய் கரையில் சென்று ஐ.டி.ஐ அருகில் சென்னிமலை சாலையைக் கடந்து பெரும்பள்ளம் அணைக்கட்டு மற்றும் கால்வாய் வழியாக செங்கோடம்பள்ளம் பகுதியில் பெருந்துறை சாலையை இணைக்கிறது.

இது மூலப்பாளையம்-ஐ.டி.ஐ-பெரும்பள்ளம் அணைக்கட்டு-பழையபாளையம்-செங்கோடம்பள்ளத்தை இணைக்கும் விதமாக உள்ள நஞ்சை ஊத்துக்குளி கால்வாய் மற்றும் பெரும்பள்ளம் கால்வாயின் கரைகளை பலப்படுத்தி அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ள சாலையாகும்.

இந்தச் சாலை அமைக்கப்பட்டால் ஈரோடு நகரில் முழுமையான உள்வட்ட இணைப்பு சாலை பயன்பாட்டுக்கு வரும்.

மேலும் பார்க்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. https://www.tnhighways.gov.in/index.php/en/list-of-roads/majordistrictroads
  2. https://www.thehindu.com/news/cities/Coimbatore/cm-announces-road-widening-projects-for-erode-district/article29214567.ece
  3. https://www.nationaltenders.com/tender/widening-and-improving-the-road-to-multi-mettupalayam-tenders-21411898