பெரியசேமூர் பேருந்து நிலையம், ஈரோடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பெரியசேமூர் பேருந்து நிலையம் ஆனது ஈரோடு மாநகரத்தில் அமையப்பெரும் ஒரு புதிய புறநகர் பேருந்து நிலையம் ஆகும்.

ஈரோடு மாநகரின் மையப்பகுதியில் அமையப்பெற்றுள்ள சுதந்திரதின வெள்ளிவிழா மத்திய பேருந்து நிலையத்தை பிரித்து கரூர் சாலையில் உள்ள சோலார் மற்றும் சத்தி சாலையில் உள்ள பெரியசேமூர் ஆகிய இரண்டு இடங்களில் புறநகர் பேருந்து நிலையங்கள் உருவாக்கப்பட்டது.


அமைவிடம்

இது ஈரோட்டிலிருந்து சத்தியமங்கலம் செல்லும் பிரதான சாலையையொட்டி பெரியசேமூர் பகுதியில் அமைந்துள்ளது. மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள சுவஸ்திக் சந்திப்பிலிருந்து 3 கி.மீ. தொலைவில் கனிராவுத்தர்குளம் எதிரில் அமைந்துள்ளது.

இது ஈரோடு சந்திப்பு தொடருந்து நிலையம் சுமார் 6 கி. மீ தொலைவிலும் சித்தோட்டிலிருந்து சுமார் 5 கி.மீ தொலைவிலும் அமைந்துள்ளது.

சுமார் 14 ஏக்கர் நிலப்பரப்பில் சத்தி சாலைக்கும் அக்ரஹாரம் இணைப்பு சாலைக்கும் இடைப்பட்ட பகுதியில் சுமார் 130 கோடி மதிப்பீட்டில் இந்தப் பேருந்து நிலையம் அமைகிறது.


இந்தப் பேருந்து நிலையத்திலிருந்து கோபி, சத்தி, அந்தியூர், மேட்டூர், தாளவாடி, மைசூர், பெங்களூரு, கோவை, திருப்பூர் போன்ற பகுதிகளுக்கான பேருந்துகள் இயக்கப்படவுள்ளது.

மேலும் பார்க்க