சோலார்
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
சோலார் என்பது ஈரோடு மாநகரத்திலிருந்து தென்கிழக்கில் 6 வது கி.மீ. தொலைவில் உள்ள ஒரு புறநகர்ப் பகுதியாகும். இது ஈரோடு மாநகராட்சி மண்டலம் நான்கில் அமைந்துள்ளது. இது கரூர் மற்றும் முத்தூர் சாலையின் மையமாக உள்ளது. இதன் அருகில் உள்ள ஊர்கள் லக்காபுரம், போக்குவரத்து நகர், கொக்கராயன்பேட்டை, ஆகியன. ஈரோடு - கரூர் ரயில் பாதை இவ்வூர் வழியாக செல்கிறது. இவ்வூரில், புகழ் பெற்ற தன்னாசி முனியப்பன் கோவில் உள்ளது. இவ்வூரில் இந்தியன் வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, ஈரோடு மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி ஆகியன செயல்பட்டு வருகின்றன. மையப்பகுதியில் ரவுண்டானா ஒன்று உள்ளது. இது ஈரோடு மேற்கு சட்டமன்ற தொகுதியில் அமையப்பெற்றுள்ளது. இவ்வூரில் மணல் விற்பனை நடைபெற்று வருகிறது. ஈரோடு நகரில் இருந்து நாமக்கல் மாவட்டம் செல்லும் சுற்றுச்சாலை இங்கு அமைந்துள்ளது.