எஸ். முத்துசாமி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
எஸ். முத்துசாமி
போக்குவரத்துத் துறை அமைச்சர்
பதவியில்
1980–1987
முதலமைச்சர் எம். ஜி. இராமச்சந்திரன்
சுகாராரத்துறை அமைச்சர்
பதவியில்
1991–1996
முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதா
தனிநபர் தகவல்
பிறப்பு நெடுங்குளம், தமிழ்நாடு, இந்தியா
அரசியல் கட்சி திராவிட முன்னேற்றக் கழகம்

எஸ். முத்துசாமி (S. Muthusamy) என்பவர் ஒரு தமிழக அரசியல்வாதி மற்றும் மற்றும் தமிழக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மற்றும், அமைச்சர் ஆவார். இவர் தமிழக சட்டமன்றத்துக்கு அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் ஈரோடு தொகுதியில் இருந்து 1977, 1980, 1984 தேர்தல்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2][3] மேலும் பவானி தொகுதியில் இருந்து 1991 தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[4] இவர் எம். ஜி. இராமச்சந்திரனின் அமைச்சரவையில் எட்டு ஆண்டுகள் போக்குவரத்து அமைச்சராகவும், 1991 தேர்தலுக்குப்பின் ஜெயலலிதா அமைச்சரவையில் சுகாதாரத்துறை அமைச்சராகவும் இருந்தார்.

பணிகள்[தொகு]

ஈரோட்டில் செயல்பட்ட அரசியல்வாதிகளில் ஈரோட்டின் வளர்ச்சிக்கு பங்காற்றியவர்களில் முதன்மையானவர் முத்துசாமி ஆவார். மேலும் ஈரோட்டின் அடிப்படை உள்கட்டமைப்பு வசதிகள் பல செயல்படுத்தியும், கொங்கு நாட்டில் குறிப்பிடத்தக்க அளவிற்கு போக்குவரத்து துறையை வளர்த்தவரும் ஆவார். முத்துசாமி பல புதிய திட்டங்களை கொங்கு நாட்டுக்கு கொண்டுவந்தவர். மாவட்ட ஆட்சியர் அலுவலகம், ஈரோடு பேருந்து நிலையம், IRTT தொழில்நுட்பக் கல்லூரி (IRTT), ஈரோடு, ஐ. ஆர். டி.டி மருத்துவ கல்லூரி, பவானி-ஈரோடு சாலையில் புதிய பாலம் போன்றவை இவரால் பெற்றவையாகும். முத்துசாமி 2010 ல் திமுகவில் இணைந்து திமுக தலைமை செயற்குழு உறுப்பினராக இருந்த இவர்[5] தற்போது, திமுகவின் ஈரோடு தெற்கு மாவட்ட செயலாளராக உள்ளார்.[6]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=எஸ்._முத்துசாமி&oldid=2719283" இருந்து மீள்விக்கப்பட்டது