விமர்சனம்
விமர்சனம் என்பது ஒரு கருத்தை, செயலாக்கத்தை, படைப்பை, நபரை, அல்லது அமைப்பை மதிப்பீடு செய்து முன்வைக்கப்படும் கருத்துக்கள் ஆகும். விமர்சனம் ஒன்றின் பயன் விலை, நன்மை தீமை, படைப்பின் தரம் அல்லது பிற மதிப்பீடுகளை முன்வைக்கிறது. விமர்சனம் என்ற சொல் ஒரு எதிர்ம மதிப்பீட்டை பொதுவாக சுட்டுகிறது.
விமர்சனத்தின் நோக்கம்
[தொகு]விமர்சனம் ஒரு தரப்பினரை அழிக்கும், அல்லது பாதிக்கும் நோக்குடன் செய்யப்படுவதுண்டு. ஒரு போரில் எதிரியை அழிக்கும் நோக்கில் செய்யப்படும் விமர்சனம் இத்தகைகையாகும்.
விமர்சனம் ஒரு தரப்பின் குறைகளைச் சுட்டிக்காட்டி, திருத்தி, மாற்றத்தை கொண்டுவருவதற்கான நோக்குடன், ஆக்கபூர்வமான நோக்கைக் கொண்டிருக்கலாம்.
விமர்சனத்தின் பொருள்
[தொகு]அரசியல் கொள்கை, திட்டம், தலைமைத்துவம், கலைப் படைப்புகள், சமூகக் கட்டமைப்பு, சமூக நிலைமைகள், சமயம், கோட்பாடுகள், தொழில்நுட்ப நுணுக்கங்கள் என பல தரப்பட்டவை நோக்கி விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன. பொதுவாக, வாழ்க்கையின் எல்லா அம்சங்களையும் விமர்சனத்தின் வீச்சுக்குள் கொண்டு வர இயலும்.
சமூக விமர்சனம்
[தொகு]இலக்கிய விமர்சனம்
[தொகு]விமர்சனம் நோக்கி விமர்சனங்கள்
[தொகு]விமர்சனம் குறைகளை எது வேலை செய்யவில்லை என்பது பற்றி நிறையை உரையாடல்களை முன்வைக்கிறது. ஆனால் அது தீர்வுகளை முன்வைப்பதில்லை. இதனால் தீர்வுகளுக்கு செலுத்தப்படக்கூடிய வளங்கள் விமர்சனத்தில் வீணடிக்கப்படுகிறது.
அக்கறை உள்ள ஒன்றைப் பற்றி விமர்சனம் செய்யும் போது, அதை மேலும் பாதிப்படைய, அல்லது பலவீனமடையச் செய்துவிடும் அபாயம் உள்ளது.
சுய விமர்சனம்
[தொகு]பிறரைப் பற்றியே குறைகூறிக் கொண்டிருக்காமல், 'தன்னிடம் ஏதாவது குறையுள்ளதா?' என்று ஆய்வது சுய விமர்சனம் ஆகும். இதிலும், குறைகளும் நிறைகளும் சுட்டிக் காட்டப்படலாம்.
மேலும், தனி மனிதர் மட்டுமே சுய விமர்சனத்தின் தளமாக இருப்பதில்லை. குழுக்களும் குமுகங்களும் தம்மைச் சுய விமர்சனம் செய்து ஆக்கப்பூர்வமான திட்டங்கள் வகுத்து முன்னேற முடியும்.
இவற்றையும் பார்க்க
[தொகு]- அங்கதம்
- கட்டுடைத்தல் - Deconstruction
- Critical theory
- Critical thinking
- பிற்போக்கு, முற்போக்கு, நற்போக்கு
- பகுப்பு:தமிழ் விமர்சகர்கள்