சூரரைப் போற்று (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
சூரரைப் போற்று
சுவரொட்டி
இயக்கம்சுதா கொங்கரா
தயாரிப்புசூர்யா
கதைவிஜய் குமார்
மூலக்கதைஉண்மை கதையை மையமாக கொண்டு எடுக்கப்பட்டது
திரைக்கதைசுதா கொங்கரா
சாலினி
இசைஜி . வி. பிரகாஷ் குமார்
நடிப்புசூர்யா
அபர்ணா பாலமுரளி
ஊர்வசி
கலையகம்2டி என்டர்டென்மேன்ட்
விநியோகம்அமேசான் பிரைம் வீடியோ
வெளியீடு12 நவம்பர் 2020
நாடுஇந்தியா
மொழிதமிழ்

சூரரைப் போற்று (Soorarai Pottru) 2020 ஆம் ஆண்டு வெளியான ஒரு அதிரடி தமிழ் திரைப்படம் ஆகும். இந்த திரைப்படத்தை பெண் இயக்குனர் சுதா கொங்கரா இயக்கி உள்ளார்.[1]. இத்திரைப்படத்தை சூர்யா தயாரித்துள்ளார். திரைப்படத்தில் முக்கிய கதாபத்திரங்களாக சூர்யா மற்றும் அபர்ணா பாலமுரளி ஆகியோரும் ஊர்வசி, மோகன் பாபு மற்றும் கருணாஸ் ஆகியோர் துணை கதாப்பத்திரங்களிலும் நடித்துள்ளனர். இப்படத்தின் கதையானது ஏர் டெக்கான் வானூர்தி நிறுவனத்தைத் துவக்கியவரான கோ. ரா. கோபிநாத்த்தின் கதையை தழுவியது ஆகும். 12 நவம்பர் 2020 அன்று, அமேசான் பிரைம் வீடியோ இணையதளத்தில் திரைப்படம் வெளியிடப்பட்டது.[2]

கதைச் சுருக்கம்[தொகு]

சூர்யா (நெடுமாறன் ராஜாங்கம்) ஓர் ஆசிரியரின் மகன். இவரின் தந்தை சட்ட ரீதியாக தனது கிராமத்தில் வாழும் மக்களுக்காக பல நன்மைகளை செய்து வருகிறார். ஆனால் சில முயற்சிகளில் தந்தையின் அகிம்சை வழி எடுபடாததால் வன்முறையை கையில் எடுக்கிறார் சூர்யா. இதனால் தந்தை மகனுக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்படுகிறது. சூர்யா இந்திய அரசின் முப்படைகளின் ஒன்றான இராணுவ விமான படையில் ஓர் அதிகாரியாக நியமிக்கப்படுகிறார். பின் பல தேர்வுகளில் தேர்ச்சி பெற்று இராணுவ விமானத்தை ஓட்டும் ஒரு விமான அதிகாரியாக பதவி உயர்கிறார். தனது தந்தை உடல்நல குறைவு காரணமாக வாழ்வின் இறுதி பயணத்தில் உள்ளதை அறியும் சூர்யா, விமானம் மூலம் தனது சொந்த ஊருக்கு பயணம் செல்ல முயற்சி செய்கிறார். ஆனால் விமானத்தில் பயணிக்க போதிய பணம் இல்லாததால் விமான நிலையத்தில் இருந்து வெளியேற்றப்படுகிறார். இதனால் சூர்யா சொந்த ஊருக்கு வருவதில் தாமதம் ஏற்படுகிறது. மகனை தன் இறுதி நேரத்தில் கூட பார்க்க முடியாமல் சூர்யாவின் தந்தை உயிரிழக்கிறார். இந்த நிகழ்வு சூர்யாவின் மனதில் ஒரு முக்கிய பாதிப்பை உண்டாக்குகிறது. பணக்கார மக்களுக்கு மட்டும் தான் இந்த விமான சேவை என்னும் வழக்கத்தை மாற்றி அமைக்க சூர்யா போராடுகிறார். "டெக்கான் ஏர்லைன்சு" என்னும் ஒரு விமான நிறுவனத்தை இந்தியாவில் உருவாக்க பல முயற்சிகள் செய்து போராடுகிறார். இறுதியில் பல முயற்சிகளுக்கு பின்னர் இவருக்கு சில வாய்ப்புகள் கிடைக்கின்றன. அதன் அடிப்படையில் தனது சொந்த வீடு, நிலம் என அனைத்தையும் விற்று முதலீடு செய்து ஒரு விமான நிறுவனத்தை உருவாகிறார். ஆனால் சில பணக்கார நிறுவனத்தின் உரிமையாளர்களின் வியாபார தந்திரத்தால் தனது நிறுவனம், வீடு, சொத்து என அனைத்தையும் இழக்கிறார். பின்னர் எவ்வாறு அந்த சதி வலையில் இருந்து மீள்கிறார், விமான நிறுவனத்தை உருவாக்க முடிந்ததா என்பதே இந்த படத்தின் கதையாகும்.

நடிகர்கள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

வெளியினைப்பு[தொகு]