36 வயதினிலே

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
36 வயதினிலே
இயக்கம்ரோசன் ஆண்ட்ரூஸ்
தயாரிப்புசூர்யா
இசைசந்தோஷ் நாராயணன்
நடிப்புஜோதிகா
ரகுமான்
அபிராமி
நாசர்
ஒளிப்பதிவுஆர். திவாகரன்
படத்தொகுப்புமகேசு நாராயணன்
வெளியீடு15 மே 2015 (2015-05-15)
ஓட்டம்115
நாடுஇந்தியா
மொழிதமிழ்
ஆக்கச்செலவு3 கோடி (US$470,000 )

36 வயதினிலே (36 Vayadhinile) ரோசன் ஆண்ட்ரூஸ் இயக்கத்திலும், சூர்யா, தயாரிப்பிலும் வெளியாகியுள்ள தமிழ்த்திரைப்படம். இத்திரைப்படத்தில் ஜோதிகா, ரகுமான், அபிராமி, நாசர்ஆகியோர் முன்னணி கதைப்பாத்திரங்களில் நடித்துள்ளனர்.[1] இத்திரைப்படம் சந்தோஷ் நாராயணனின் இசையிலும், ஆர். திவாகரனின் படத்தொகுப்பிலும் மே 2015இல் திரையரங்குகளில் வெளியான தமிழ்த்திரைப்படம்.[2]

நடிப்பு[தொகு]

  • ஜோதிகா - வசந்தி தமிழ்ச்செல்வனாக
  • ரகுமான் - தமிழ்ச்செல்வனாக
  • நாசர் - ஆணையர் இராஜனாக
  • இளவரசு - காய்கறி வணிகராக
  • சித்தார்த்த பாசு - இந்திய குடியரசுத்தலைவராக
  • அபிராமி (நடிகை) - சூசன் டேவிட்டாக
  • அம்ரிதா அணில் - மிதிலா தமிழ்ச்செல்வனாக
  • சேது இலக்சுமி - துளசியாக
  • டெல்லி கணேஷ் - வசந்தியின் மாமனாராக
  • ஜெயப்பிரகாசு
  • எம். எசு. பாசுகர் -ஸ்டீபனாக
  • போஸ் வெங்கட் - காவல் அலுவலராக
  • பிரேம் -ஜெயச்சந்திரனாக
  • கலாரஞ்சனி - வசந்தியின் மாமியாராக
  • தேவதர்சினி - கிரிஜா சீனிவாசனாக
  • சுஜாதா சிவகுமார் - இராணியாக
  • மோகன் ராமன் - நளபாகம் செல்லூர் பிச்சை
  • முத்துராமன் வசந்தியின் மேலதிகாரியாக
  • பயில்வான் இரங்கநாதன் - பயில்வான் இரங்கநாதன்
  • சிசர் மனோகர் - தானி ஓட்டுநராக
  • காலிது உசைன் - தோட்டக்கலை அலுவலராக
  • சிவகுமார்- இந்திய குடியரசுத்தலைவராக (குரல் மட்டும்)

கதை[தொகு]

குடும்பத்தின் பொருட்டு தன் கனவுகளையும் அடையாளத்தையும் இழந்துவிடும் மகளிர், குடும்ப வட்டத்தில் பொறியில் சிக்கியது போன்ற வாழ்விற்கு தள்ளப்படுகிறார்கள். குடும்பத்துக்காகவே பலவற்றையும் இழக்கிறார்கள்.[3] தன்னை இழந்து கணவன் குழந்தை என குடும்பத்துக்காக வாழும் ஒரு பெண். அவள் தன் குழந்தையாலும், கணவனாலும் ஒதுக்கி வைக்கப்படும் ஒரு நிலை. இச்சூழலில் அவள் எப்படி தன்னை அறிந்து, உணர்ந்து ஒரு பெரும் மதிப்பைப் அடைகிறாள் என்பதே இத்திரைப்படத்தின் கதை. [4] கல்லூரியில் படிக்கும் காலத்தில் எதையும் எதிர்கொண்டு எதிர்த்துப் போராடுகிற பெண், ஒரு நிலையில் தன்னை இழந்துவிட்டதை நன்கு உணரும் அவள் தன் 36ஆம் அகவையில் தன்னைக் மீளவும் காண்கிறாள்.[5]

இசை[தொகு]

இத்திரைப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இத்திரைப்படத்தின் அனைத்துப்பாடல்களையும் விவேக் எழுதியுள்ளார்.

சான்றுகள்[தொகு]

  1. "Jyothika to return in how old are you tamil remake". PrimeGlitz Media. Archived from the original on 14 ஏப்ரல் 2015. பார்க்கப்பட்ட நாள் 3 April 2015. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  2. https://spicyonion.com/tamil/movie/kadugu/
  3. http://tamil.thehindu.com/cinema/cinema-others/திரை-விமர்சனம்-36-வயதினிலே/article7222434.ece
  4. https://tamil.filmibeat.com/reviews/36-vayathinile-review-034588.html
  5. https://cinema.vikatan.com/movie-review/46567.html[தொடர்பிழந்த இணைப்பு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=36_வயதினிலே&oldid=3709267" இலிருந்து மீள்விக்கப்பட்டது