உள்ளடக்கத்துக்குச் செல்

நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி
நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி
வழங்கல்சூர்யா (1)
பிரகாஷ் ராஜ் (2)
அரவிந்த்சாமி (3)
நாடுஇந்தியா
மொழிதமிழ்
தயாரிப்பு
ஓட்டம்90 நிமிடங்கள்
ஒளிபரப்பு
அலைவரிசைவிஜய் தொலைக்காட்சி
ஒளிபரப்பான காலம்பெப்ரவரி 7, 2012 (2012-02-07) –
19 நவம்பர் 2016 (2016-11-19)
வெளியிணைப்புகள்
இணையதளம்

நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி என்பது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான தமிழ் தொலைக்காட்சி விளையாட்டு நிகழ்ச்சி ஆகும்.[1] ஊ வாண்ட்சு டு பி எ மில்லியனர்? என்ற பிரித்தானிய நிகழ்ச்சியை அடிப்படையாகக் கொண்ட கோன் பனேங்கா கரோர்பதி என்ற நிகழ்ச்சியின் தமிழ் வடிவமே இந்நிகழ்ச்சியாகும்.[2] இந்த நிகழ்ச்சியின் முதல் பகுதியை நடிகர் சூர்யா, இரண்டாவது பகுதியை நடிகர் பிரகாஷ் ராஜ் மற்றும் மூன்றாவது பகுதியை நடிகர் அரவிந்த்சாமி தொகுத்து வழங்கியுள்ளார்கள். [3] இந்த நிகழ்ச்சி ஹிந்தி, ஆங்கிலம், மலையாளம், கன்னடம், போச்புரி, வங்காளம் ஆகிய மொழிகளிலும் ஒளிபரப்பப்பட்டு வருகின்றது.

ஏனைய மொழிகள்

[தொகு]

இந்நிகழ்ச்சி வேறு சில இந்திய மொழிகளிலும் ஒளிபரப்பப்பட்டு வருகின்றது.

தலைப்பு மொழி நிகழ்ச்சியை நடத்துபவர் தொடங்கிய திகதி
கோன் பனேங்கா கரோர்பதி ஹிந்தி அமிதாப் பச்சன் 2000 சூலை 3[4]
கன்னடட கோட்யடிபதி கன்னடம் புனீத் ராஜ்குமார் 2012 மார்ச் 12[5]
கே ஹோபே பங்களர் கோடிபோடி வங்காளம் சௌரவ் கங்குலி 2011 சூன் 4[6]
கே பானி குரோர்பதி போச்புரி சத்ருகன் சின்ஹா 2011 சூன் 6[7]
நிங்கள்க்கும் ஆகாம் கோடீஷ்வரன் மலையாளம் சுரேஷ் கோபி 2012 ஏப்ரல்[8]
கோடீஸ்வரி தமிழ் ராதிகா சரத்குமார் 2019 டிசம்பர் 23

இவற்றை பார்க்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]