தர்மம் வெல்லும்
தோற்றம்
| தர்மம் வெல்லும் | |
|---|---|
![]() | |
| இயக்கம் | கே. ரங்கராஜன் |
| தயாரிப்பு | கே. ரங்கராஜன் |
| இசை | இளையராஜா |
| நடிப்பு | விஜயகாந்த் கவுதமி டெல்லி கணேஷ் சின்னி ஜெயந்த் செந்தில் ஸ்ரீகாந்த் டி. எஸ். ராகவேந்திரன் விஜயசந்தர் சுஜாதா கோவை சரளா |
| வெளியீடு | 1989 |
| நாடு | இந்தியா |
| மொழி | தமிழ் |
தர்மம் வெல்லும் (Dharmam vellum) 1989-இல் வெளிவந்த இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். விஜயகாந்த் நடித்த இப்படத்தை கே. ரங்கராஜன் இயக்கினார்.
நடிகர், நடிகையர்
[தொகு]- விசயகாந்து - ஆய்வாளர் கே. ஜெகநாத் /விஜய்
- சுஜாதா - சாரதா
- கௌதமி - இலதா
- ரோகிணி - கீதா
- விஜயசந்தர் - கங்காதரன்
- எஸ். எஸ். சந்திரன் - சேது
- செந்தில் - கெத்து
- கோவை சரளா - ஜிம்மி
- சின்னி ஜெயந்த் - சிப்பராஜ்
- எல். ஐ. சி. நரசிம்மன் - மருத்துவர்
- ஸ்ரீகாந்த் - ஜாகர் (விருந்தினர் தோற்றம்)
- டெல்லி கணேஷ் - ராபர்ட் (விருந்தினர் தோற்றம்)
- விஜய் கிருஷ்ணராஜ் - விஸ்வநாத்(விருந்தினர் தோற்றம்)
பாடல்கள்
[தொகு]திரைப்படத்தின் பாடல்கள், பின்னணி இசை ஆகியவற்றிற்கு இளையராஜா இசையமைத்திருந்தார். "தேவி தேவி" என்ற பாடலில் இரண்டு பதிப்புகள் உள்ளன; இசைத்தட்டில் எஸ். பி. பாலசுப்பிரமணியம், சித்ரா குரலில் அமைந்த பாடல் வெளியிடப்பட்டது. திரைப்படத்தில் கங்கை அமரன், சித்ரா குரலில் அமைந்த பாடல் இடம்பெற்றது.[1]
| பாடல் | பாடியோர் | வரிகள் |
|---|---|---|
| "தேவி தேவி" | எஸ். பி. பாலசுப்பிரமணியம், சித்ரா | கங்கை அமரன் |
| "என்னத்துக்கு என்ன பெத்த" | மலேசியா வாசுதேவன் | வாலி |
| "ஹே மாப்ளே செல்ல மாப்ளே" | கே. எஸ். சித்ரா | கங்கை அமரன் |
| "பூவோடு காத்து வந்து" | இளையராஜா, ஜிக்கி |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Paadu Nilave- Dharmam Vellum Tamil Film LP VInyl Record by Ilayaraaja". Mossymart. Archived from the original on 6 January 2023. Retrieved 6 January 2023.
