சின்ன வாத்தியார்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
சின்ன வாத்தியார்
தயாரிப்புஅலமேலு சுப்ரமணியன்
இசைஇளையராஜா
ஒளிப்பதிவுபி.எஸ்.லோக்நாத்
படத்தொகுப்புஎன்.ஆர்.கிட்டு
விநியோகம்= ஸ்வாதி சித்ரா இன்டர்நேஷனல்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

சின்ன வாத்தியார் சிங்கீதம் சீனிவாசராவ் இயக்கத்தில் பிரபு{ இரு வேடம்}, குஷ்பு, ரஞ்சிதா, நிழல்கள் ரவி, கவுண்டமணி, செந்தில் ஆகியோர் நடித்து 1995-ல் வெளிவந்த நகைச்சுவைத் தமிழ் திரைப்படமாகும். இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்தார். இப்படம் 1984ல் தெலுங்கு மொழியில் வெளிவந்து வெற்றிகரமாக ஓடிய ஒரு படத்தின் மறு ஆக்கமாகும்.[1][2]

கதைச் சுருக்கம்[தொகு]

இப்படத்தில் பிரபு இரு வேடங்களில் நடித்துள்ளார். ஒரு உடலிருந்து மற்றொரு உடலுக்கு ஆன்மாவைக் கடத்தும் ஆரய்ச்சியில் ஈடுபட்டு வரும் பேராசிரியர் சந்திரமெளலி என்பவரைப் பற்றிச் சொல்லும் கதையாகும்.சந்திரமெளலி ஜானகி என்பவரை(குஷ்பு) திருமணம் செய்து கொண்டு அரவிந்த்{ இன்னொரு பிரபு }என்ற மாணவனின் உதவியுடன் ஆராய்ச்சியை நடத்தி வருகிறார்.பேராசிரியர் மற்றும் அரவிந்த் ஆகியோர்களின் ஆத்மாக்களும் இடமாற்றம் செய்யப்பட்டதால், அவர்களின் மனைவிகளுக்குள் ஏற்படும் சங்கடங்களைக் கொண்டு கதை தொடங்குகிறது.

இதற்கிடையில், பாபா என்ற போக்கிரி (நிழல்கள் ரவி) பேராசிரியரின் ஆராய்ச்சி மாணவியை கடத்தி ஒரு போக்கிரி கும்பலுக்கு விற்றுவிடுகிறான். இதை கேள்விப்பட்ட பேராசிரியர் அரவிந்தனுக்குள் தன் ஆன்மாவை நுழைத்து அம்மாணவியை காப்பாற்றுகிறார்.போலீஸில் மாட்டிக்கொண்ட பாபா அங்கிருந்து தப்பி விடுகிறான். ஆன்மா மாறிவிட்ட பேராசிரியரும், அரவிந்தனும் அவர்களது ஆன்மாக்களை பழையபடி மாற்றியமைக்க ஒரு கல்லறைக்கு வருகின்றனர்.

அங்கே வந்த பாபா இந்த அதிசய வித்தையை மறைந்திருந்து பார்க்கிறான்.அங்கே பேராசிரியரின் ஆன்மா மீண்டும் அவரது உடலுக்குள் சென்றுவிடுகிறது. ஆனால் அரவிந்தனுடைய ஆன்மா அங்கு கிடந்த பூனையின் உடலுக்குள் சென்றுவிடுகிறது. மறைந்திருந்த பாபா விரைவாக வந்து பேராசிரியராக தாக்கிவிட்டு,தனது ஆன்மாவை அரவிந்தின் உடலுக்கு மாற்றிக்கொள்கிறான்.அரவிந்தனின் ஆத்மாவுடன் உள்ள பூனையை அருகிலுள்ள ஒரு கிணற்றில் போட்டுவிட்டு, அதிசய மருந்துடன் தப்பி ஓடிவிடுகிறான்.

அரவிந்தனுக்குள் புகுந்த பாபா மிகவும் வித்தியாசமாக நடந்துகொண்டு பல கெட்ட செயல்களில் ஈடுபட்டிருக்கிறான்.இறுதியாக,மயக்கம் தெளிந்த பேராசிரியர் நடந்ததைப்பற்றி அறிந்து புதரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த அந்த அதிசய மருந்தினை கண்டுபிடித்து விடுகிறார்.இறுதிகாட்சியில் நடக்கும் சில நிகழ்வுகளுக்குப் பின்னர் கடைசியாக அரவிந்தனின் ஆன்மா பூனைவிடமிருந்து விடுதலை செய்யப்பட்டு மீண்டும் பழைய நிலைக்கு வருகிறது, முடிவாக பாபாவின் ஆன்மா கோழிக்குள் சிக்கிக் கொள்கிறது.இவ்வாறு கதை முடிகிறது.

இப்படத்தின் இடையில் கவுண்டமணியின் இருதார திருமணத்தை வைத்து, செந்தில் மற்றும் கோவை சரளா ஆகியோருடன் சில நகைச்சுவை காட்சிகளும் இடம் பெற்றுள்ளன.இதுவே மாது +2 போன்ற மேடை நாடகங்களை எழுதிய கிரேஸி மோகனால் எழுதப்பட்ட சுருக்கமான திரைக்கதையாகும்.

நடிப்பு[தொகு]

இசை[தொகு]

இப்படத்தின் அனைத்துப் பாடல்களும் வாலி எழுதி இளையராஜாவால் இசையமைக்கப்பட்டு 1995 இல் வெளிவந்தது. [3]

தயாரிப்பு[தொகு]

ஆரம்பத்தில் இப்படத்திற்கு "புரபசர்" என ஆங்கிலத்தில் பெயரிட்டு பின்னர் ரசிகர்களின் வேண்டுகோளுக்கிணங்க சின்ன வாத்தியார் எனப் பெயரிடப்பட்டது..[4]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Chinna Vathiyar". cinesouth. பார்த்த நாள் 2012-06-16.
  2. "Tamil Movie News--1995 Review(Cont.)". groups.google.com (1996-01-09). பார்த்த நாள் 2016-10-07.
  3. "Chinna Vathiyar Songs". youtube.com.
  4. https://groups.google.com/forum/#!searchin/soc.culture.tamil/tamil$20movie$20news/soc.culture.tamil/X_3KQ2yl6cE/byePwmRXyc8J
"https://ta.wikipedia.org/w/index.php?title=சின்ன_வாத்தியார்&oldid=3087709" இருந்து மீள்விக்கப்பட்டது