உள்ளடக்கத்துக்குச் செல்

பூமழை பொழியுது

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பூமழை பொழியுது
இயக்கம்வி. அழகப்பன்
கதைவி. அழகப்பன்
இசைராகுல் தேவ் பர்மன்
நடிப்புவிசயகாந்து
நதியா
சுரேஷ்
கலையகம்ரீ ராஜகாளி அம்மன் மூவிஸ்[1]
வெளியீடு19 பெப்ரவரி 1987[2]
நாடுஇந்தியா
மொழிதமிழ்

பூமழை பொழியுது (Poo Mazhai Pozhiyuthu) என்பது 1987 ஆம் ஆண்டய தமிழ் காதல் நாடக திரைப்படம் ஆகும். வி. அழகப்பன் எழுதி இயக்கிய இப்படத்தில் விசயகாந்து, நதியா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க, ராஜீவ், செந்தில், சுரேஷ் ஆகியோர் துணை வேடங்களில் நடித்துள்ளனர். படத்திற்கான இசையை ராகுல் தேவ் பர்மன் மேற்கொண்டார். இந்த வெளிவந்து சராசரியாக வசூல் ஈட்டியது.

கதை

[தொகு]

சிங்கப்பூரில் குடியேறிய ஒரு நபர் (ராஜீவ்) தனது சொந்த கிராமத்திற்கு வருகிறார். அவரது அத்தை குடும்ப பிணைப்பை பலப்படுத்த முயற்சிக்கிறார். அதன் ஒரு பகுதியாக ராஜீவின் தங்கையை (நதியா) தனது மகனுக்கு (விசயகாந்து) மணம்முடிக்க விரும்புகிறார். ராஜீவிடம் இந்த யோசனையைக் கூறுகிறார். ராஜீவ் அந்த யோசனையை நிராகரித்து அத்தையை அவமதிக்கிறார். விஜயகாந்த் நதியாவை திருமணம் செய்து கொள்வதாக சபதம் செய்தார். இது ஒருபோதும் நடக்காது என்று ராஜீவ் சபதம் செய்கிறார்.

சிங்கப்பூருக்கு நதியாவைக் காண விஜயகாந்த் செல்கிறார். அவருடன் பேச விரும்பாத நதியா முதலில் அவரை தனது காரில் தட்டிச் செல்ல முயற்சிக்கிறார். பின்னர் அவரை தனது மோட்டார் படகு சாகசத்தில் மூழ்கடிக்க முயற்சிக்கிறார். ஆனால் இறுதியில் மன மாற்றத்திற்கு ஆளாகி அவர் ஊட்ட சாப்பிடும் அளவுக்கு நெருக்கமாகிறார். ஆனால் மீண்டும் ஏற்படும் தவறான புரிதல்கள் இருவர் உறவை சீர்குலைக்கின்றன. மீண்டும் உறவு சரியாகும் போது ராஜீவ் தனது நயவஞ்சக தந்திரங்களில் இன்னொருவரை கருவியாக்கி (சுரேஷ்) விளையாடுகிறார்.

நடிகர்கள்

[தொகு]

தயாரிப்பு

[தொகு]

இப்படம் முதன்மையாக சிங்கப்பூரிலும், ஜப்பானிலும் படமாக்கப்பட்டது.[3]

இசை

[தொகு]

படத்திற்கான பாடல்களை ஆர். டி. பர்மன் இசையமைத்தார். பின்னணி இசையை ஷியாம் என்கிற சாமுவேல் ஜோசப் மேற்கொண்டார்.[4]

  • ஏய் பூங்கொடி - எஸ். பி. பாலசுப்பிரமணியம்
  • நதியா நதியா - எஸ். பி. பாலசுப்பிரமணியம், சித்ரா
  • ஏமாமா - எஸ்.பி.பி., சித்ரா
  • எல்லாரும் பைத்தியம் - சித்ரா
  • மை நேம் ஈஸ் ஆஷா - எஸ். பி. பாலசுப்பிரமணியம், சித்ரா

வரவேற்பு

[தொகு]

இந்தியன் எக்சுபிரசில் 20, பிப்ரவரி, 1987 அன்று எழுதிய என். கிருஷ்ணசாமி படம் குறித்து "pretty run-of-the-mill stuff" என்று குறிப்பிட்டார். இருப்பினும் அவர் இசை, படம்பிடிக்கப்பட்ட இடங்கள், ஒளிப்பதிவு போன்றவற்றைப் பாராட்டினார்.[3]

குறிப்புகள்

[தொகு]
  1. "List of Tamil Films Released In 1987-Producers". Lakshmi Sruthi. Archived from the original on 29 மே 2011. பார்க்கப்பட்ட நாள் 3 April 2019.
  2. "பூ மழை பொழியுது". Vellithirai.com. Archived from the original on 3 ஏப்ரல் 2019. பார்க்கப்பட்ட நாள் 3 April 2019. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  3. 3.0 3.1 3.2 Krishnaswamy, N. (20 February 1987). "Love again". The Indian Express: p. 14. https://news.google.com/newspapers?nid=P9oYG7HA76QC&dat=19870220&printsec=frontpage&hl=en. 
  4. "Poo Mazai Pozhiyuthu (Original Motion Picture Soundtrack)". Apple Music. பார்க்கப்பட்ட நாள் 3 April 2019.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பூமழை_பொழியுது&oldid=3668643" இலிருந்து மீள்விக்கப்பட்டது