ராஜீவ்
ராஜீவ் | |
---|---|
பிறப்பு | ராஜசேகர் மதுரை, தமிழ்நாடு, இந்தியா |
மற்ற பெயர்கள் | ராஜீவ் |
பணி | நடிகர் |
செயற்பாட்டுக் காலம் | 1981-2011 |
பெற்றோர் | பாலசுப்பிரமணிய முதலியார், ராஜேஸ்வரி அம்மாள் |
வாழ்க்கைத் துணை | ராணி |
பிள்ளைகள் | மீனா காமாட்சி, கிரண் சூர்யா |
ராஜீவ் (Rajeev) என்பவர் ஒரு இந்திய திரைப்பட நடிகராவார். இவர் முதன்மையாக தமிழ் படங்களில் கவனம் செலுத்துகிறார். 1982 ஆம் ஆண்டு வெளியான முள் இல்லாத ரோஜாவில் நாயகனாக தனது வாழ்க்கையைத் தொடங்கினார். பல வெற்றிகரமான திரைப்படங்களில் இவர் நடித்துள்ளார். பின்னர் எதிர்மறை, குணச்சித்திர வேடங்களில் நடித்தார். இவர் மலையாள திரைப்படமான உஸ்தாத், எஃப். ஐ. ஆர், சத்யம், கலெக்டர் ஆகிய வெற்றிப் படங்களிலும் நடித்துள்ளார்.
தனிப்பட்ட வாழ்க்கை
[தொகு]ராஜீவ் மதுரையில் பிறந்தார். இவரது தந்தை பாலசுப்பிரமணிய முதலியார் பெங்களூரு -560016 இல் இந்தியன் தொலைபேசி தொழிலகத்தில் பணிபுரிந்து வந்தார். இவரது தாயார் ராஜேஸ்வரி அம்மாள். பெங்களூரு -560016 இல் ஐ. டி. ஐ வித்யா மந்தீர் பள்ளியில் ராஜீவ் படித்தார்.[1] இவரது பெற்றோரின் இறப்புக்குப் பிறகும், ராஜீவ் திருமணத்தில் விருப்பமின்றி இருந்தார். ஆனால் இவரது சகோதரர்களின் வற்புறுத்தலின் பேரில் திருமணத்துக்கு ஒப்புக்கொண்டார். ராணி என்பவரை மணந்த இவருக்கு மீனா காமாட்சி என்ற மகளும், கிரண் சூர்யா என்ற மகனும் உள்ளனர்.[2]
தொழில்
[தொகு]ராஜீவ் திரைப்படங்களில் நடிக்க கலைக்காணலுக்கு விண்ணப்பித்தார். கலைக்காணலின் போது இவர் நிறைய போராட்டங்களையும் நிராகரிப்பையும் எதிர்கொண்டார். வாய்ப்புகள் இல்லாததால், தாஜ் கோரமண்டல் விடுதியில் பணியாளராக பணியாற்றினார். விடுதியில் நடந்த போட்டியில் நடனமாடியதற்காக இவருக்கு முதல் பரிசு கிடைத்தது; இவரது நண்பர்கள் மீண்டும் படங்களில் நடிக்க முயற்சிக்கும்படி இவரை வற்புறுத்தினர்.[3]
ராஜீவ் தனது வகுப்பு தோழர், தெலுங்கு நடிகர் ராஜேந்திர பிரசாத்தை ஒரு ஒலிப்பதிவுக் கூடத்தில் சந்தித்தார். ராஜீவைப் பார்த்த மலையாள நடிகர் ரவீந்திரன், ஒரு தலை ராகம் படத்தில் தனக்கு பின்னணி குரல் கொடுக்கச் சொன்னார். ராஜீவ் இந்த வாய்ப்பை மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்டார். அந்த படத்தின் இயக்குனர் டி. ராஜேந்தர், ராஜீவை பின்னணி குரல் கலைஞராக தேர்ந்தெடுத்தார். இவர் மீண்டும் வசந்த அழைப்பகளில் ரவீந்திரனுக்காக பின்னணி குரல் கொடுத்தார் . டி. ராஜேந்தர் இரயில் பயணங்களில் படத்தில் இவருக்கு ஒரு கொடுமைக்கார கணவன் பாத்திரத்தின் வழியாக இவருக்கு வாய்ப்பை வழங்கினார். பின்னர் இவர் பாலைவனச்சோலையில் நான்கு கதாநாயகர்களில் ஒருவராக நடித்தார்.[4]
மேலும் இவர் கே பாலசந்தரின் அவள் ஒரு தொடர்கதை படத்தின் கன்னட மறு ஆக்கமான பெங்கியல்லி அரலித ஹுவ்வு படத்தில் குடிகார அண்ணனாக நடித்தார்.
திரைப்படவியல்
[தொகு]இவரது படங்களில் பின்வருவன அடங்கும்:[5]
நடிகராக
[தொகு]தமிழ்
[தொகு]- சிவப்பு மழை (2010)
- அசோகா (2008)
- தீக்குச்சி (2008)
- தொடக்கம் (2008)
- அமிர்தம் (2006)
- திருடி (2006)
- துள்ளும் காலம் (2005)
- காற்று உள்ளவரை (2005)
- தகதிமிதா (2005)
- தேவதையைக் கண்டேன் (2005)
- கஜேந்திரா (2004)
- எங்கள் அண்ணா (2004)
- ஜெயம் (2003)
- நீ வரும் பாதை எல்லாம் (2003)
- நிலவில் களங்கமில்லை (2003)
- நம்ம வீட்டு கல்யாணம் (2002)
- பாடும் வானம்பாடி (2002)
- என் மன வானில் (2002)
- ரெட் (2002)
- காசி (2001)
- மனதை திருடிவிட்டாய் (2001)
- அழகான நாட்கள் (2001)
- வாஞ்சிநாதன் (2001)
- லவ் சேனல் (2001)
- பிரண்ட்ஸ் (2001)
- வெற்றிக் கொடி கட்டு (2000)
- வானத்தைப் போல (2000)
- மனம் விரும்புதே உன்னை (1999)
- வாலி (1999)
- கனவே கலையாதே (1999)
- காதல் கவிதை (1998)
- ரத்னா (1998)
- கொண்டாட்டம் (1998)
- மாறாத உறவு (1997)
- காலமெல்லாம் காதல் வாழ்க (1997)
- விவசாயி மகன் (1997)
- காதல் கோட்டை (1996)
- மேட்டுக்குடி (1996)
- அன்பு மகன் (1995)
- தாய் தங்கை பாசம் (1995)
- சின்ன முத்து (1994)
- ராஜ பாண்டி (1994)
- இளைஞர் அணி (1994)
- சாது (1994)
- சக்திவேல் (1994)
- சிறகடிக்க ஆசை (1994)
- எங்க வீட்டு வேலன் (1992)
- பொண்ணுக்கேத்த புருஷன் (1992)
- ஊரெல்லாம் உன் பாட்டு (1991)
- என் வீடு என் கணவர் (1990)
- ஏரிக்கரை பூங்காற்றே (1990)
- வாழ்ந்து காட்டுவோம் (1990)
- நானும் இந்த ஊருதான் (1990)
- தங்கமான ராசா (1989)
- அது அந்தக்காலம் (1988)
- ஏட்டிக்கு போட்டி (1988)
- இரண்டில் ஒன்று (1988)
- கை கொடுப்பாள் கற்பகாமாபாள் (1988)
- பூபூவா பூத்திருக்கு (1987)
- கிராமத்து கிளிகள் (1987)
- அருள் தரும் ஐயப்பன் (1987)
- எங்க ஊரு பாட்டுக்காரன் (1987)
- பூமழை பொழியுது (1987)
- எல்லைக் கோடு (1987)
- பிறந்தேன் வளர்ந்தேன் (1986)
- ஆயிரம் கண்ணுடையாள் (1986)
- தழுவாத கைகள் (1986)
- அன்னை என் தெய்வம் (1986)
- எனக்கு நானே நீதிபதி (1986)
- பதில் சொலவாள் பத்திரகாளி (1986)
- நம்பினார் கெடுவதில்லை (1986)
- நீதானா அந்தக்குயில் (1986)
- பூக்களைப் பறிக்காதீர்கள் (1986)
- நானும் ஒரு தொழிலாளி (1986)
- செயின் ஜெயபால் (1985)
- தென்றல் தொடாத மலர் (1985)
- பார்த்த ஞாபகம் இல்லையோ (1985)
- நான் உங்கள் ரசிகன் (1985)
- செல்வி (1985)
- கடிவாளம் (1985)
- காக்கிசட்டை (1985)
- நேர்மை (1985)
- உனக்கார ஒரு ரோஜா (1985)
- பிரியமுடன் பிரபு (1984)
- நெருப்புக்குள் ஈரம் (1984)
- யுக தர்மம் (1983)
- இளைய பிறவிகள் (1983)
- முத்து எங்கள் சொத்து (1983)
- உறங்காத நினைவுகள் (1983)
- சமயபுரத்தாளே சாட்சி (1983)
- துணை (1982)
- வேடிக்கை மனிதர்கள் (1982)
- நிரந்தரம் (1982)
- நாடோடி ராஜா (1982)
- கடவுளுக்கு ஒரு கடிதம் (1982)
- நிழல் தேடும் நெஞ்சங்கள் (1982)
- நெஞ்சில் ஒரு ராகம் (1982)
- வெற்றி நமதே (1982)
- அஞ்சாத நெஞ்சங்கள் (1981)
- பாலைவனச்சோலை (1981)
- இரயில் பயணங்களில் (1981)
மலையாளம்
[தொகு]- கலெக்டர் (2011)
- உதயம் (2004)
- சத்யம் (2004)
- ரிலாக்ஸ் (2004)
- எப். ஐ. ஆர் (1999)
- உஸ்தாத் (1999)
- எலவம்கோடு தேசம் (1998)
கன்னடம்
[தொகு]- பெங்கியல்லி அரலித ஹூவு (1983)
- லட்சுமி கட்டாட்சா (1985)
- வஜ்ரமுஷ்டி (1985)
- யுத்த கண்டா (1989)
- கொல்லூர் கலா (1991)
- கண்டுகலி (1994)
- ஜனுமதா ஜோடி (1996)
- நம்மூரா உடுகா (1998)
- தேவதே
தெலுங்கு
[தொகு]- கோகிலம்மா (1983)
- நா அல்லுடு (2005)
- கூண்டா (1984)
பின்னணி குரல் கலைஞராக
[தொகு]- ராஜ முத்திரை (1995) மற்றும் அசுரன் (1995) படங்களில் அருண் பாண்டியனுக்கு
- சிறைச்சாலை (1996) மற்றும் அரண் (2006) படங்களில் மோகன்லாலுக்கு
- பாரதி (2000) மற்றும் பூவெல்லாம் உன் வாசம் (2001) படங்களில் சாயாஜி சிண்டேவுக்கு
- ஒரு தலை ராகம் (1980) மற்றும் வசந்த அழைப்புகள் (1980) படங்களில் ரவீந்திரனுக்கு
- தேவி படத்தில் பானு சந்தருக்கு (1999)
- எங்கே எனது கவிதையில் (2002) கிருஷ்ணா அபிஷேக்குக்கு
குறிப்புகள்
[தொகு]- ↑ https://web.archive.org/web/20140920232157/http://cinema.maalaimalar.com/2014/09/12221802/Acting-trained-character-actor.html
- ↑ https://web.archive.org/web/20140920232419/http://cinema.maalaimalar.com/2014/09/14224714/Tamil-actor-Rajiv-record-in-ot.html
- ↑ http://cinema.maalaimalar.com/2014/03/22222729/Cinema-history-rajiv-worked-in.html
- ↑ https://web.archive.org/web/20140920232207/http://cinema.maalaimalar.com/2014/09/13221344/rajiv-reach-good-place-towards.html
- ↑ "Other movies by Rajiv". jointscene.com. 5 October 2011. Archived from the original on 29 June 2010. பார்க்கப்பட்ட நாள் 2011-10-05.