உள்ளடக்கத்துக்குச் செல்

காலமெல்லாம் காதல் வாழ்க

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
காலமெல்லாம் காதல் வாழ்க
இயக்கம்ஆர். பாலு
தயாரிப்புசிவசக்தி பாண்டியன்
கதைஆர்.பாலு
இசைதேவா
நடிப்புமுரளி
கௌசல்யா
ஜெமினி கணேசன்
மணிவண்ணன்
ஒளிப்பதிவுதங்கர் பச்சான்
படத்தொகுப்புபி. லெனின்
வி. டி. விஜயன்
கலையகம்சிவசக்தி மூவி மேக்கர்ஸ்
விநியோகம்சிவசக்தி மூவி மேக்கர்ஸ்
வெளியீடு12 பிப்ரவரி 1997
ஓட்டம்142 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

காலமெல்லாம் காதல் வாழ்க (Kaalamellam kathal vazha) சிவசக்தி பாண்டியன் தயாரித்து ஆர். பாலு இயக்கி 1997 இல் வெளிவந்த தமிழ் காதல் படமாகும். இதில் முரளி கதாநாயகனாக நடிக்க அறிமுக நாயகி கெளசல்யா நாயகியாக உடன் நடித்துள்ளார். மேலும் ஜெமினி கணேசன், மணிவண்ணன், சார்லி மற்றும் விவேக் ஆகியோரும் உடன் நடித்துள்ளனர். இப்படம் 275 நாட்களுக்கு மேல் வெற்றிகரமாக ஓடியது. இது கன்னடத்தில் ரமேஷ் அரவிந்த்.ஸ்ரீ லட்சுமி ஆகியோர் நடிப்பில் "குசலவே சேமவே " என்ற பெயரில் வெளிவந்த படத்தின் மறு ஆக்கமாகும்.

கதைச் சுருக்கம்

[தொகு]

ஜீவா (முரளி) வீட்டின் தேவை அதிகமாக உள்ள நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு கல்லூரி மாணவன். அவன் பாடகனாகவும் உள்ளான். அவனது இசைத் திறமையைக் கண்டு கெளசல்யா என்ற பணக்கார பெண் அவன் மேல் (கெளசல்யா) மந்திரத்தால் மயங்கியவள் போல நடந்து கொள்கிறாள். அவனது திறமையை பாராட்டி அவன் தங்கியிருக்கும் விடுதிக்கு தொலைபேசியில் அவனை அழைத்து பாராட்டுகிறாள். தொலைபேசியில் பேசிய கௌசல்யாவின் குரல் அவனுக்குள் வியக்கத்தக்க வகையில் மிகத் தீவிரக் காதலாக மாறுகிறது. காதல் கொண்ட அவன் பைத்தியமாக அலைகிறான். அவளை நேரில் காண விரும்புகிறான்.

நடிகர்கள்

[தொகு]

தயாரிப்பு

[தொகு]

தயாரிப்பாளர் சிவசக்தி பாண்டியன் தனது முந்தைய படமான காதல் கோட்டை என்ற படத்தில் இடம் பெற்ற பாடலின் தலைப்பைக் கொண்டு இப்படத்திற்குப் பெயர் சூட்டினார். நடிகை கெளசல்யாவிற்கு இது அறிமுகப்படமானது.

வெளியீடு

[தொகு]

" இது போன்ற நகைச்சுவைத் திரைப்படத்தை பார்த்தே வெகுநாளாகிறது என்றும், சராசரிக்கும் மேலான நல்ல இசையையும், வெகு துல்லியமான ஒளிப்பதிவையும் இதில் நாம் காணலாம்" என இந்தோலிங்க்.காம் என்ற வலைத்தளம் விமர்சனம் செய்தது."[1] "காதல் கோட்டை" (1996) அதையடுத்து "காலமெல்லாம் காதல் வாழ்க" ஆகிய படங்களின் மிகப்ப பெரிய வெற்றிக்குப் பின்னர் சிவசக்தி பாண்டியன் " காதலே நிம்மதி " என்ற ஒரு காதல் படத்தையே தான் மீண்டும் எடுக்கப் போவதாக கூறினார்([2]

ஒலிப்பதிவு

[தொகு]
காலமெல்லாம் காதல் வாழ்க
ஒலித்தடம்
தேவா
வெளியீடு1997
இசைப் பாணிதிரைப்பட இசை
இசைத்தட்டு நிறுவனம்லக்கி ஆடியோ

இசையமைப்பாளர் தேவாவின் இசை ரசிகர்களால் பெரும் வரவேற்பைப் பெற்றது. படத்தின் பாடல்களை தேவா, பழனிபாரதி மற்றும் பொன்னியின் செல்வன் ஆகியோர் எழுதியுள்ளனர்.

தடம்- பட்டியல்
# பாடல்பாடகர்கள் நீளம்
1. "அண்ணா நகர் ஆண்டாளு"  சபேஷ்  
2. "பகவானே"  மனோ  
3. "ஒரு மணி அடித்தால்"  ஹரிஹரன்  
4. "வெண்ணிலவே வெண்ணிலவே"  எஸ். பி. பாலசுப்பிரமணியம், ஸ்வர்ணலதா  
5. "பாபிலோனா"  கிருஷ்ணராஜ்  
6. "புத்தம் புது மலர்கள்"  சித்ரா  

மேற்கோள்கள்

[தொகு]
  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2016-03-03. பார்க்கப்பட்ட நாள் 2019-01-22.
  2. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2013-09-27. பார்க்கப்பட்ட நாள் 2019-01-22.
"https://ta.wikipedia.org/w/index.php?title=காலமெல்லாம்_காதல்_வாழ்க&oldid=3708625" இலிருந்து மீள்விக்கப்பட்டது