ஒரு தலை ராகம்
| ஒரு தலை ராகம் | |
|---|---|
| இயக்கம் | ஈ. எம். இப்ராகிம் |
| தயாரிப்பு | ஈ. எம். இப்ராகிம் |
| கதை | டி. ராஜேந்தர் |
| திரைக்கதை | மன்சூர் கிரியேசன்சு |
| இசை | டி. ராஜேந்தர் ஏ. ஏ. ராஜ் (பின்னணி இசை) |
| நடிப்பு | சங்கர் தியாகு சந்திரசேகர் உஷா ராஜேந்தர் ரூபா ரவீந்திரன் |
| ஒளிப்பதிவு | ராபர்ட் ராஜசேகரன் |
| படத்தொகுப்பு | டி. ராஜ் |
| கலையகம் | மன்சூர் கிரியேசன்சு |
| விநியோகம் | மன்சூர் கிரியேசன்சு |
| வெளியீடு | 2 மே 1980 |
| ஓட்டம் | 145 நிமி. |
| நாடு | இந்தியா |
| மொழி | தமிழ் |
ஒரு தலை ராகம் 1980 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஈ. எம். இப்ராகிமின் தயாரிப்பு மற்றும் இயக்கத்தில்[1] வெளிவந்த இத்திரைப்படத்தில் சங்கர், ரூபா, சந்திரசேகர் மற்றும் பலரும் நடித்திருந்தனர்.
இத்திரைப்படம் 1999 ஆம் ஆண்டில் பஞ்சதாரா சிலக்கா என்ற பெயரில் தெலுங்கில் தயாரிக்கப்பட்டு வெளியிடப்பட்டது.
கதைச் சுருக்கம்
[தொகு]மாயவரத்தின் புறநகரில் அமைந்துள்ள ஒரு கல்லூரியில் முதுகலைப் படிப்பு படிக்க மாயவரத்தைச் சேர்ந்த இளைஞன் இராஜா சேர்கிறான். கல்லூரிக்கு தொடருந்தின் வழியாக நண்பர்களுடன் இராஜா சென்றுவருகின்றான். அதே தொடர்வண்டியில் பயணிக்கும் உடன் கல்லூரியில் படிக்கும் அமைதியான சுபத்திராவைக் கண்டு அவள் மீது காதல்கொள்கிறான். சுபத்திராவும் இராஜாவினால் ஈர்க்கப்படுகிறாள் என்றாலும் அவள் அதை தன் குடும்பச்சூழலால் வெளிகாட்டிக்கொள்ளாமல் இருக்கிறாள். தன் காதலை சுபத்திராவிடம் இராஜா தெரிவித்தும், அவனுக்கு பிடிகொடுக்காமல் சுபத்திரா விலகி செல்கிறாள். தன் காதலுக்கு விடை தெரியாத இராஜா அந்த ஏக்கத்தில் சரியாக உண்ணாமலும், உறங்காமலும் உடல் தளர்ச்சி அடைகிறான். கல்லூரியின் கடைசி நாளில் இராஜாவின் நண்பன் மூர்த்தி சுபத்திராவின் மௌனத்தை உடைக்கும்விதமாக பேசுகிறான். இதனால் மனம் தெளிவடையும் சுபத்திரா மறுநாள் தொடர் வண்டியில் இராஜாவிடம் தன் வந்து தன் காதலை தெரிவிக்கிறாள். பதில் சொல்லாமல் இருக்கும் இராஜாவைத் தொடும்போது அவன் இறந்துவிட்டது தெரிந்து கதறுகிறாள்.
நடிகர், நடிகையர்
[தொகு]- சங்கர் - இராஜா[2]
- ரூபா - சுபத்ரா[2]
- இரவீந்திரன் - மது[3]
- சந்திரசேகர் - மூர்த்தி[2]
- கைலாஷ் நாத்- தம்பு[4]
- குமாரி உசா - இலாவண்யா[3]
- தியாகு - கண்ணன்[3]
- டி. ராஜேந்தர் - இந்திப்-பாடல் பாடும் மாணவன் (கௌரவத் தோற்றம்)[4]
பாடல்கள்
[தொகு]இத்திரைப்படத்தின் பாடல்களை டி. ராஜேந்தர் எழுதி, இசையமைத்திருந்தார். ஏ. ஏ. ராஜ் பின்னணி இசையை வழங்கியிருந்தார்.[5]
| பாடல் | பாடியவர்(கள்) | இயற்றியவர் | நீளம் |
|---|---|---|---|
| என் கதை | டி. எம். சௌந்தரராஜன் | டி. ராஜேந்தர் | 3.24 |
| இது குழந்தை பாடும் தாலாட்டு | எஸ். பி. பாலசுப்பிரமணியம் | 4.38 | |
| கடவுள் வாழும் | பி. ஜெயச்சந்திரன் | 5.00 | |
| கூடையிலே கருவாடு | மலேசியா வாசுதேவன் | 3.25 | |
| மன்மதன் | ஜாலி ஏபிரகாம் | 4.13 | |
| நான் ஒரு ராசியில்லா ராஜா | டி. எம். சௌந்தரராஜன் | 4.24 | |
| வாசமில்லா மலரிது | எஸ். பி. பாலசுப்பிரமணியம் | 4.48 |
வெளியீடு
[தொகு]1980 மே 2 அன்று வெளியான இப்படம் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. திரையரங்கில் 365 நாட்கள் ஓடியது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Baradwaj Rangan (2013). Conversations with Mani Ratnam. Penguin UK. ISBN 9788184756906.
- ↑ 2.0 2.1 2.2 Correspondent, Vikatan (2016-05-09) (in ta). ஒரு தலை ராகமும்... டி.ராஜேந்தர் எனும் காந்தமும்!. https://cinema.vikatan.com/kollywood/63803-magnetic-trajendar-and-oru-thalai-raagam-movie. பார்த்த நாள்: 2025-08-31.
- ↑ 3.0 3.1 3.2 Dhananjayan 2011, ப. 38.
- ↑ 4.0 4.1 கண்ணன், சுரேஷ் (26 May 2020). "'முதல் ரைமிங் பன்ச்; ஆனாலும் டி.ஆர் வெறுத்த படம் 'ஒரு தலை ராகம்'... ஏன்னா?!'- டென்ட் கொட்டாய் டைரீஸ் - 80s, 90s Cinemas for 2K kids". ஆனந்த விகடன். Archived from the original on 13 May 2021. Retrieved 13 May 2021.
- ↑ P. S. Gopalakrishna (23 January 2014). "In reference to film music". தி இந்து. Retrieved 25 சனவரி 2016.