மனதை திருடிவிட்டாய்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மனதை திருடிவிட்டாய் (Manadhai Thirudivittai) அறிமுக இயக்குனர் ஆர். டி. நாராயணமூர்த்தி எழுதி இயக்கி, 2001 ஆம் ஆண்டு வெளிவந்த இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். பிரபுதேவா, கௌசல்யா, காயத்ரி ஜெயராம், விவேக், வடிவேலு, ஸ்ரீமன் மற்றும் பலர் நடித்துள்ளனர். கே. ஆர். ஜி தயாரிப்பில், யுவன் சங்கர் ராஜா இசையில், 14 நவம்பர் 2001 தேதி வெளியானது. பாக்ஸ் ஆபீசில் ஒரு சராசரி வெற்றியை அடைந்து இப்படம்.

நடிகர்கள்[தொகு]

பிரபுதேவா, கௌசல்யா, காயத்ரி ஜெயராம், விவேக், வடிவேலு, ஸ்ரீமன், ஷாந்தி வில்லியம்ஸ், ரஞ்சித், பாத்திமா பாபு, ராஜீவ், காக்கா ராதாகிருஷ்ணன், பாண்டு, பயில்வான் ரங்கநாதன், பி. சுஷீலா, சிவா.

கதைச்சுருக்கம்[தொகு]

தேவாவும் ஸ்ருதியும் ஒரே கல்லூரியில் படித்து வரும் காதலர்கள். அவ்வாறாக ஒரு நாள், தேவா தன் நண்பன் அசோக் வீட்டில் இந்துவை சந்திக்க நேரிடுகிறது. தன் குழுவில் பாட வாய்ப்பளிக்கும் தேவாவை போலீசில் தன்னை கேலி செய்ததாக கூறி புகார் தருகிறாள் இந்து. அதனால் கோபம் கொண்ட ஸ்ருதி, இந்துவை திட்டி கோபித்துக்கொள்கிறாள். சமாதானம் செய்ய வந்த அசோக், இந்துவின் கடந்த காலம் பற்றி விளக்குகிறான்.

இந்துவை ஊக்குவிக்கும் விதமாக அவளுக்கு மிகவும் பிடித்த பாடகி பி. சுஷீலாவை அறிமுக படுத்துகிறான் தேவா. அப்பொழுதிலிருந்து, தேவாவிற்கும், இந்துவுக்கும் நல்லிணக்கம் ஏற்படுகிறது.

தேவா-ஸ்ருதி திருமண விழாவில், கடந்த காலத்தில் இந்துவை பாலியல் வன்கொடுமை செய்தது தேவா என்று தெரிய வருகிறது. அதனால், திருமணம் தடைபடுகிறது. பின்னர், அந்த பிரச்சனையிலிருந்து சமாளித்து தேவா யாரை திருமணம் செய்தான் என்பது தான் மீதிக்கு கதையாகும்.

ஒலிப்பதிவு[தொகு]

யுவன் ஷங்கர் ராஜா இப்படத்தின் இசை அமைப்பாளர் ஆவார். பா. விஜய் மற்றும் கலை குமார் பாடல் ஆசிரியர்கள் ஆவர். "மஞ்சக்காட்டு மைனா" என்ற பாடல் மிகவும் பிரபலமான பாடலாகும்.[1][2]

வரவேற்பு[தொகு]

இந்தத் திரைப்படம் கலந்த விமர்சனங்களைப் பெற்றது.[3][4][5]

மேற்கோள்கள்[தொகு]

  1. "http://www.themusicmagazine.com/manathai.html". External link in |title= (உதவி)
  2. "http://www.musicplug.in/~music/blog.php?blogid=776". 2019-10-17 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2019-03-03 அன்று பார்க்கப்பட்டது. External link in |title= (உதவி)
  3. "http://www.rediff.co.in/entertai/2001/dec/10mana.htm". External link in |title= (உதவி)
  4. "https://web.archive.org/web/20121225055841/http://hindu.com/thehindu/fr/2001/11/16/stories/2001111600670201.htm". Archived from the original on 2012-12-25. 2019-03-03 அன்று பார்க்கப்பட்டது. External link in |title= (உதவி)CS1 maint: unfit url (link)
  5. "http://www.thiraipadam.com/cgi-bin/movie_review.pl?id=202&user_name=subashawards&review_lang=english&lang=english". 2016-12-02 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2019-03-03 அன்று பார்க்கப்பட்டது. External link in |title= (உதவி)

வெளி-இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மனதை_திருடிவிட்டாய்&oldid=3670822" இருந்து மீள்விக்கப்பட்டது