எஸ். எஸ். சந்திரன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
எஸ். எஸ். சந்திரன்
பிறப்புஎஸ். எஸ். சந்திரன்
1941
இறப்புஅக்டோபர் 9, 2010 (வயது 69)[1]
சென்னை, இந்தியா
தேசியம்இந்தியன்
பணிநடிகர், அரசியல்வாதி
செயற்பாட்டுக்
காலம்
1956–2010

எஸ். எஸ். சந்திரன் (இறப்பு:9 அக்டோபர் 2010) தமிழ்த் திரைப்பட நடிகரும், அரசியல்வாதியும் ஆவார். இவர் நகைச்சுவை செல்வர், கலைமாமணி போன்ற பட்டங்களைப் பெற்றுள்ளார்.

திரைப்படங்களில்[தொகு]

80களிலும், 90களின் துவக்கத்திலும், இயக்குனர் ராமநாராயணன் இயக்கத்தில், ஏராளமான படங்களில் நடித்தவர். நகைச்சுவை, மற்றும் குணசித்திர வேடங்களிலும், வில்லன் வேடங்களிலும் நடித்து இருக்கிறார். ரஜினிகாந்துடன் மாப்பிள்ளை, உழைப்பாளி ஆகிய படங்களில் நடித்துள்ளார். பாட்டி சொல்லை தட்டாதே, தங்கமணி ரங்கமணி, சகாதேவன் மகாதேவன், கதாநாயகன் ஆகிய படங்களில் இவரது நடிப்பு சிறப்பாகப் பேசப்பட்டது. ஒருமுறை சொல்லி விடு, எங்கள் குரல் ஆகிய படங்களைத் தயாரித்தும் இருக்கிறார். விஜய் தொலைக்காட்சியில் "வாங்க பேசலாம்" என்ற நிகழ்ச்சியை டெல்லி கணேசுடன் இணைந்து தொகுத்து வழங்கி வந்தார்.

அரசியலில்[தொகு]

மறைவு[தொகு]

திருவாரூர் மாவட்டத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக அவர் மன்னார்குடி சென்றிருந்தபோது, 2010 அக்டோபர் 9 அதிகாலையில் நெஞ்சுவலி ஏற்பட்டு மாரடைப்பால் காலமானார். இறக்கும் போது அவருக்கு வயது 69. எஸ்.எஸ். சந்திரனுக்கு ராஜம் என்ற மனைவியும் ரோஹித், ரங்கராஜ் என்ற மகன்களும் கண்மணி என்ற மகளும் உள்ளனர்.

பகுதி திரைப்படவியல்[தொகு]

நடிகர்
ஆண்டு படம் மொழி பாத்திரம் குறிப்பு
2004 ஒரு முறை சொல்லிவிடு தமிழ்
2003 சொக்கத்தங்கம் (திரைப்படம்) தமிழ்
2001 சீறிவரும் காளை தமிழ்
2001 நினைக்காத நாளில்லை தமிழ்
2000 காக்கைச் சிறகினிலே தமிழ்
2000 திருநெல்வேலி தமிழ்
2000 காதல் ரோஜாவே தமிழ்
1999 உனக்காக எல்லாம் உனக்காக தமிழ்
1999 பெரியண்ணா தமிழ்
1999 மனம் விரும்புதே உன்னை தமிழ் காசி
1999 மன்னவரு சின்னவரு தமிழ்
1998 வேட்டிய மடிச்சு கட்டு தமிழ்
1998 புதுமைப்பித்தன் தமிழ்
1998 நாம் இருவர் நமக்கு இருவர் தமிழ்
1998 கவலை படாதே சகோதரா தமிழ்
1997 ஒன்ஸ்மோர் தமிழ்
1997 நல்ல மனசுக்காரன் தமிழ்
1995 வாழ்க ஜனநாயகம் தமிழ்
1996 புதிய பராசக்தி தமிழ் S.S
1996 திரும்பிப்பார் தமிழ் கணக்கு
1995 சீதனம் (திரைப்படம்) தமிழ் வரதராஜன்
1995 படிக்கிற வயசுல தமிழ்
1995 விஷ்ணு தமிழ் வரதராஜன்
1995 கல்யாணம் தமிழ்
1995 சின்னமணி தமிழ்
1995 புதிய ஆட்சி தமிழ் கண்ணுசாமி
1995 கருப்பு நிலா தமிழ் பி.கே.ஆர்
1994 புதிய மன்னர்கள் தமிழ்
1994 வாங்க பார்ட்னர் வாங்க தமிழ்
1994 சின்னமுத்து (திரைப்படம்) தமிழ்
1994 செவத்த பொண்ணு தமிழ்
1994 தாட்பூட் தஞ்சாவூர தமிழ்
1994 தாமரை தமிழ் பூசாரி
1994 நம்ம அண்ணாச்சி தமிழ்
1994 பட்டுக்கோட்டை பெரியப்பா தமிழ்
1994 பவித்ரா (திரைப்படம்) தமிழ் ரகுநாதனின் பக்கத்து வீட்டுக்காரர்
1994 மேட்டுப்பட்டி மிராசு தமிழ் கார்மேகம்
1994 வண்டிச்சோலை சின்ராசு தமிழ்
1994 அன்பு மகன் தமிழ்
1994 வாட்ச்மேன் வடிவேலு தமிழ்
1994 வீட்டைப்பாரு நாட்டைப்பாரு தமிழ்
1994 ஹீரோ தமிழ்
1994 அமைதிப்படை (திரைப்படம்) தமிழ்
1994 இளைஞர் அணி (திரைப்படம்) தமிழ் காளியப்பன்
1994 ஒரு வசந்த கீதம் தமிழ்
1994 கில்லாடி மாப்பிள்ளை தமிழ்
1993 கற்பகம் வந்தாச்சு தமிழ் Mayilsamy
1993 என் இதயராணி தமிழ்
1993 ராஜாதி ராஜ ராஜ குலோத்துங்க ராஜ மார்த்தாண்ட ராஜ கம்பீர காத்தவராய கிருஷ்ண காமராஜன் தமிழ்
1993 தூள் பறக்குது தமிழ்
1993 திருடா திருடா தமிழ்
1993 உழைப்பாளி (திரைப்படம்) தமிழ்
1991 தமிபிக்கு ஒரு பாட்டு தமிழ்
1990 மருது பாண்டி தமிழ்
1990 மை டியர் மார்த்தாண்டன் தமிழ்
1990 பெரியவீட்டுப் பண்ணக்காரன் தமிழ்
1990 என் வீடு என் கணவர் தமிழ்
1990 சாத்தான் சொல்லைத் தட்டாதே தமிழ் ஏல வணிகர்
1989 மாப்பிள்ளை தமிழ்
1989 ராஜா சின்ன ரோஜா தமிழ் வேலாயாள்
1989 வெற்றி விழா தமிழ் சிற்றப்புத் தோற்றம்
1989 பாட்டுக்கு ஒரு தலைவன் தமிழ் சிங்காரம்
1989 ஊரைத் தெரிஞ்சுக்கிட்டேன் தமிழ்
1989 சின்னப்பதாஸ் (திரைப்படம்) தமிழ்
1989 ஆடி விரதம் தமிழ்
1989 யாமிருக்க பமேன் தமிழ்
1989 யோகம் ராஜயோகம் தமிழ்
1989 கண் சிமிட்டும் நேரம் தமிழ்
1989 சகாதேவன் மகாதேவன் தமிழ் அரசியலவாதி ஆடியபாதம்
1989 வாய்க் கொழுப்பு தமிழ்
1989 புருஷன் எனக்கு அரசன் (திரைப்படம்) தமிழ்
1989 தங்கைக்கோர் கீதம் தமிழ்
1989 தூக்கு மேடை தமிழ்
1989 மன்மத ராஜாக்கள் தமிழ்
1988 உழைத்து வாழ வேண்டும் தமிழ் Peter
1988 நல்லவன் தமிழ்
1988 பாட்டி சொல்லைத் தட்டாதே தமிழ்
1988 கதாநாயகன் தமிழ்
1988 கணம் கோர்ட்டார் அவர்களே தமிழ் Desikachari
1988 தெற்கத்திக்கள்ளன் தமிழ் திரைப்பட இயக்குநர்
1987 உழவன் மகன் (திரைப்படம்) தமிழ் கணக்குப் பிள்ளை
1987 கூலிக்காரன் (திரைப்படம்) தமிழ் வெங்கடாச்சலம்
1987 பூமழை பொழியுது தமிழ்
1986 ஜோதிமலர் தமிழ்
1985 ஆகாயத் தாமரைகள் தமிழ்
1985 உனக்காக ஒரு ரோஜா தமிழ்
1984 வாய்ப்பந்தல் தமிழ்
1984 நன்றி (திரைப்படம்) தமிழ் Punniyakodi
1984 வெற்றி தமிழ்
1983 அடுத்த வாரிசு தமிழ்
1983 சரணாலயம் தமிழ்
1981 ஆணிவேர் (1981 திரைப்படம்) தமிழ்
இயக்குநராக
ஆண்டு படம் குறிப்புகள்
1996 பொம்மள சிரிச்சா போச்சு
பின்னணி குரல் கலைஞராக
ஆண்டு படம் நடிகர் குறிப்பு
1997 தேவராகம் ஜனார்த்தனன்
2000 சண்முகப் பாண்டியன் ஏ. வி. எஸ்.

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=எஸ்._எஸ்._சந்திரன்&oldid=3872913" இலிருந்து மீள்விக்கப்பட்டது