ஆயிரத்தில் ஒருவன் (1965 திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஆயிரத்தில் ஒருவன்
இயக்கம்பி. ஆர். பந்துலு
கதைஆர். கே. சண்முகம்
திரைக்கதைகே. ஜே. மகாதேவன்
இசைவிசுவநாதன் - ராமமூர்த்தி
நடிப்புஎம். ஜி. இராமச்சந்திரன்
ஜெ. ஜெயலலிதா
எம். என். நம்பியார்
ஆர். எஸ். மனோகர்
ஒளிப்பதிவுவி. ராமமூர்த்தி
படத்தொகுப்புஆர். தேவராஜன்
கலையகம்பத்மினி பிக்சர்சு
விநியோகம்பத்மினி பிக்சர்சு
வெளியீடு9 சூலை 1965
ஓட்டம்174 நிமிடங்கள்.
நாடுஇந்தியா
மொழிதமிழ்

ஆயிரத்தில் ஒருவன் 1965 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். பி. ஆர். பந்துலு இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எம். ஜி. இராமச்சந்திரன், ஜெ. ஜெயலலிதா மற்றும் பலரும் நடித்திருந்தனர்.

வகை

காவியத் திரைப்படம்

நடிகர்கள்

பாடல்கள்

இத்திரைப்படத்திற்கு எம். எசு. விசுவநாதன் -இராமமூர்த்தி இணைந்து இசையமைத்தனர். இவர்கள் இருவரும் இணைந்து இசையமைத்த கடைசித் திரைப்படம் இதுவே. இதற்கு பின்னர் இருவரும் தனித்தனியாகவே திரைப்படங்களுக்கு இசையமைத்தனர்.[1][2] அனைத்துப் பாடல்களும் சிறப்பான வரவேற்பு பெற்றாலும் அதோ அந்தப் பறவை போல வாழவேண்டும் பாடல் மிகப் பெரும் வெற்றிப் பாடலாக அமைந்தது. இப்பாடலானது 2010 ஆவது ஆண்டில் செல்வராகவன் இயக்கத்தில் கார்த்திக் சிவகுமார் நடித்த இதே பெயர் கொண்ட திரைப்படத்தில் மறுஆக்கம் செய்யப்பட்டது.[3] இப்பாடலை இதற்கு முன்னதாக 2006 ஆவது ஆண்டில், அர்ஜுன் நடித்த மதராசி திரைப்படத்தில் டி. இமான் மறுஆக்கம் செய்திருந்தார்.[4] இத்திரைப்படத்தில் இடம்பெற்ற இன்னொரு பாடலான "நாணமோ" பாடல் ""ரோசுபெரி" என 2007 ஆவது ஆண்டில் வெளியான பள்ளிக்கூடம் திரைப்படத்தில் மறுஆக்கம் செய்யப்பட்டது.[5]

எண் பாடல் பாடகர்கள் நீளம் பாடலாசிரியர்
1 "ஆடாமல் ஆடுகிறேன்" பி. சுசீலா 03:54 வாலி
2 "அதோ அந்தப் பறவை போல" டி. எம். சௌந்தரராஜன் 05:03 கண்ணதாசன்
3 "நாணமோ இன்னும் நாணமோ" டி. எம். சௌந்தரராஜன், பி. சுசீலா 04:45 கண்ணதாசன்
4 "ஓடும் மேகங்களே" டி. எம். சௌந்தரராஜன் 04:31 கண்ணதாசன்
5 "பருவம் எனது" பி. சுசீலா 04:26 வாலி
6 "உன்னை நான் சந்தித்தேன்" பி. சுசீலா 03:27 வாலி
7 "ஏன் என்ற கேள்வி" டி. எம். சௌந்தரராஜன் 03:46 வாலி

மறுவெளியீடு

2014 ஆம் ஆண்டு இத்திரைப்படம் புதிய தொழில்நுட்பத்துடன் மறுவெளியீடு செய்யப்பட்டது.[6]

சர்ச்சை

2014 இல் டிஜிட்டல் தொழில்நுட்ப உதவியுடன் புதுப்பிக்கப்பட்டு மறுவெளியீடு செய்யப்பட இருந்த நிலையில் அது அரசியல் சர்ச்சையை ஏற்படுத்தியது. தமிழக முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர் மற்றும் அப்போதைய தமிழக முதல்வர் ஜெயலலிதா ஆகியோர் முதல் முறையாக இணைந்து நடித்த இந்தத் திரைப்படத்துக்கு பொது இடங்களில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டன. இந்தியாவில் அவ்வாண்டு ஏப்ரலில் நடைபெற இருந்த மக்களவை தேர்தலுக்கான மாதிரி நன்னடத்தை விதி மீறல் என கூறி அவற்றை அகற்றிட தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது.[7] 2014 ஆம் ஆண்டில் வெள்ளி விழா கண்டது. தமிழகத்தின் அன்றைய தமிழக முதல்வர் புரட்சித் தலைவி அவர்கள் வாழ்த்து செய்தியையும் அனுப்பினார்.  சென்னை சத்யம் அரங்கில்  160 நாட்களும் மற்றும் ஆல்பர்ட் திரை அரங்கில் 190 நாட்களும் ஓடியது. தமிழகம் எங்கும் தொடர்ந்து பவனி வருகிறார் ஆயிரத்தில் ஒருவன்.


இவற்றையும் பார்க்கவும்

மேற்கோள்கள்

  1. MALATHI RANGARAJAN. "Ninety, and bowing away!". The Hindu. 11 November 2015 அன்று பார்க்கப்பட்டது.
  2. "Why did Viswanathan and Ramamurthy break-up their". Tfmpage.com. 11 ஏப்ரல் 2012 அன்று மூலம் பரணிடப்பட்டது. 27 February 2012 அன்று பார்க்கப்பட்டது.
  3. "Selva on Aayirathil Oruvan". 16 டிசம்பர் 2007 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. 11 November 2015 அன்று பார்க்கப்பட்டது.
  4. "Behindwoods : Madrasi from Mumbai". 11 November 2015 அன்று பார்க்கப்பட்டது.
  5. "Pallikoodam Music Review songs lyrics". IndiaGlitz. 11 November 2015 அன்று பார்க்கப்பட்டது.
  6. http://www.bbc.com/tamil/india-38648511 டிஜிட்டல் மறு பதிப்பு
  7. "ஆயிரத்தில் ஒருவன் குறித்த அரசியல் சர்ச்சை". 13 மார்ச் 2014. 14 மார்ச் 2014 அன்று பார்க்கப்பட்டது.

வெளியிணைப்புகள்