அரங்கேற்றம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

ஒரு நிகழ்வை, நூலை,புத்தாக்கமொன்றை அல்லது அளிக்கையை முதன்முதலில் சபையினர் முன்னிலையில் நிகழ்த்துவது அரங்கேற்றம் எனப்படும். பரதநாட்டியம் முதலானவற்றினை பயிலும் மாணக்கர் தம் முதல் நிகழ்வை அரங்கேற்றம் செய்வர். இது ஒரு பெருவிழாவாக கொண்டாடப்படுகின்றது. பண்டைய தமிழ் மன்னர் காலத்திலும் அரங்கேற்று விழா அரசவிழாவாகக் கொண்டாடப்பட்டமைக்கான குறிப்புகள் உள்ளன. மாதவி எனும் ஆடல்மகளின் அரங்கேற்றம் பற்றி சிலப்பதிகாரத்தின் அரங்கேற்று காதை குறிப்பிடுகின்றது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=அரங்கேற்றம்&oldid=2149067" இருந்து மீள்விக்கப்பட்டது