கோயமுத்தூர் மாப்ளே
கோயமுத்தூர் மாப்ளே | |
---|---|
![]() | |
இயக்கம் | சி.ரங்கநாதன் |
தயாரிப்பு | எம். எஸ். வி. முரளி |
கதை | சி. ரங்கநாதன் |
இசை | வித்தியாசாகர் |
நடிப்பு | விஜய் சங்கவி கரண் கவுண்டமணி செந்தில் நிர்மலாம்மா வினு சக்ரவர்த்தி |
ஒளிப்பதிவு | ஆர். ராஜரத்னம் |
படத்தொகுப்பு | சி. சிட்ரிக் |
கலையகம் | ஸ்ரீ விஜயலட்சுமி மூவீலேண்ட் |
விநியோகம் | ஸ்ரீ விஜயலட்சுமி மூவீலேண்ட் |
வெளியீடு | 15 சனவரி 1996 |
ஓட்டம் | 135 நிமிடங்கள் |
நாடு | ![]() |
மொழி | தமிழ் |
ஆக்கச்செலவு | ₹2.3 கோடி |
கோயமுத்தூர் மாப்ளே (Coimbatore Mappilai) 1996 ஆம் ஆண்டு விஜய் மற்றும் சங்கவி நடிப்பில் வெளியான காதல், நகைச்சுவை கலந்த தமிழ்த் திரைப்படம். சி. ரங்கநாதன் இயக்கத்தில் வித்யாசாகர் இசையில் 1996 சனவரி 15 பொங்கல் நாளன்று வெளியாகி வெற்றி பெற்றத் திரைப்படம். இப்படம் தெலுங்கில் அமலாபுரம் அல்லுடு என்றும் இந்தியில் ராம்புரி டமாட் என்றும் மொழிபெயர்க்கப்பட்டு 2007 ஆம் ஆண்டு வெளியானது.
கதைச்சுருக்கம்[தொகு]
பாலுவும் (விஜய்) கோபாலும் (கவுண்டமணி) வேலை தேடிக்கொண்டிருக்கும் நண்பர்கள். அவர்கள் தங்கியுள்ள வாடகை வீடு பாட்டியம்மாவிற்குச் (நிர்மலாம்மா) சொந்தமானது. அவரின் பேத்தி சுமித்ராவும் (சங்கவி) பாலுவும் காதலிக்கின்றனர். சுமித்ராவின் உறவினரான மகேஷும் (கரண்) அவளை விரும்புகிறான். நகைத்திருட்டு ஒன்றில் பாலு தவறாக மாட்டிக்கொள்ள சுமித்ரா அவனை வெறுக்கிறாள். மகேஷ் தன்னை அடியாட்கள் வைத்து பாலு அடித்ததாகக் குற்றம் சாட்டுகிறான். பாலு பாட்டியம்மாவிடம் சிறுவயதில் தன் தாயை இழந்தபின் சித்தியின் துன்புறுத்தலால் வீட்டைவிட்டு வெளியேறிய சோகக்கதையைச் சொல்கிறான். பாட்டி அவனை நம்புகிறாள். மகேஷும் அவன் தந்தையும் (வினு சக்கரவர்த்தி) பாட்டியின் வீடு மற்றும் சொத்துக்களைக் கைப்பற்றுவதற்காக பாட்டியைக் கொல்ல முயற்சிக்கின்றனர். தாக்குதலுக்கு ஆளான பாட்டியின் சிகிச்சைக்கு பாலு உதவுகிறான். எதிர்பாராவகையில் மகேஷ் இறக்கிறான். பாலுவும் சுமித்ராவும் இணைகின்றனர்.
நடிகர்கள்[தொகு]
- விஜய் - பாலு
- சங்கவி - சுமித்ரா
- கவுண்டமணி - கோபால்
- செந்தில் - ஒயிட்
- நிர்மலம்மா - பாட்டியம்மா
- கரண் - மகேஷ்
- வினு சக்ரவர்த்தி - மகேஷின் தந்தை
- சில்க் ஸ்மிதா - "அண்ணாமலை தீபம்" பாடலுக்கு நடனம்
- பாண்டு - போக்குவரத்துக் காவலர் பொன்ராஜ்
- மாஸ்டர் மகேந்திரன்
- எல். ஐ . சி. நரசிம்மன் - மருத்துவர்
- போண்டா மணி
- இடிச்சபுளி செல்வராசு
- ஜே. லலிதா - பாலுவின் சித்தி
- சேது விநாயகம் - ஜே.பி
- கருப்பு சுப்பையா
- சாப்ளின் பாலு - மிதிவண்டி கடைக்காரர்
இசை[தொகு]
படத்தின் இசையமைப்பாளர் வித்தியாசாகர்
வ.எண் | பாடல் | பாடகர்கள் | பாடலாசிரியர் | கால நீளம் |
---|---|---|---|---|
1 | அண்ணாமலை தீபம் | மனோ, ஸ்வர்ணலதா | வாலி | 4:31 |
2 | கோயமுத்தூர் மாப்பிளைக்கு | உதித் நாராயண், சாதனா சர்கம், விஜய் | 4:31 | |
3 | ஜீவன் என் ஜீவன் | எஸ், பி. பாலசுப்ரமணியன் | பி. ஆர். சி. பாலு | 4:42 |
4 | ஒரு தேதி பார்த்தால் | ஹரிஹரன், சாதனா சர்கம் | வாலி | 4:32 |
5 | பம்பாய் பார்ட்டி | விஜய், சாகுல் ஹமீது | 4:24 |
சுவாரசியமான தகவல்[தொகு]
1996 இல் வெளியான இப்படத்தில் நடிகர் கரண் வரும் காட்சியில் ஒலித்த பின்னணி இசைக்குரலான 'ஷ்ரூவ்வ்வ்வ்' 22 வருடங்கள் கழித்து 2018 இல் கரண் ரசிகர்களிடையே சமூகவலைத்தளங்களில் பிரபலம் ஆனது.[1][2]
வெளி இணைப்புகள்[தொகு]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "நடிகர் கரணின் 'ஷ்ரூவ்வ்வ்வ்'". http://www.newindianexpress.com/entertainment/tamil/2018/oct/09/something-like-shroov-now-trending-really-shows-power-of-cinema-karan-1882816.html.
- ↑ "நடிகர் கரண் - ' தி ஷ்ரூவ்வ்வ்வ் ஸ்டார்'". https://www.thehindu.com/entertainment/movies/wherever-i-go-people-say-shroov-shroov/article25121610.ece.
- இந்தியத் தமிழ்த் திரைப்படங்கள்
- 1996 தமிழ்த் திரைப்படங்கள்
- விஜய் நடித்துள்ள திரைப்படங்கள்
- கவுண்டமணி நடித்த திரைப்படங்கள்
- வித்தியாசாகர் இசையமைத்த திரைப்படங்கள்
- மறு ஆக்கம் செய்யப்பட்ட தமிழ்த் திரைப்படங்கள்
- நகைச்சுவைத் தமிழ் திரைப்படங்கள்
- செந்தில் நடித்த திரைப்படங்கள்
- வினு சக்ரவர்த்தி நடித்த தமிழ்த் திரைப்படங்கள்
- சில்க் ஸ்மிதா நடித்த திரைப்படங்கள்