ஜகன்மோகினி (2009 திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஜகன்மோகினி
இயக்கம்என். கே. விசுவநாதன்
தயாரிப்புஎச்.முரளி
கதைபுகழ்மணி
இசைஇளையராஜா
நடிப்புநமிதா
ராஜா
நிலா
வடிவேலு
கோட்டா சீனிவாசராவ்
ஒளிப்பதிவுஎன்.கே.விஸ்வநாதன்
படத்தொகுப்புசுரேஷ் அர்ஸ்
கலையகம்முரளி சினி ஆர்ட்ஸ்
வெளியீடுஅக்டோபர் 16, 2009 (2009-10-16)
நாடுஇந்தியா
மொழிதமிழ்

ஜகன்மோகினி (Jaganmohini 2009) கற்பனைக் காட்சிகள் கொண்ட என். கே. விசுவநாதன் இயக்கிய தமிழ்த் திகில் திரைப்படமாகும்.[1] இது 2009 இல் தமிழ் மொழியில் வெளியிடப்பட்டது. 1978 ம் ஆண்டில் பி.விட்டலாச்சாரியாவின் இயக்கத்தில் வெளிவந்து மிகவும் வெற்றிகரமாக ஓடிய படத்தின் மறு ஆக்கமாகும். அப்படமும் 1951 ல் கன்னட மொழியில் ஜகன்மோகினி என்ற பெயரிலேயே வெளிவந்த திரைப்படத்தின் மறு ஆக்கமாகும். இத்திரைப்படத்தில் நமிதா, ராஜா மற்றும் நிலா ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். வங்காள மொழியில் மாயாபிணி என்ற பெயரிலும் ,தெலுங்கு மொழியில் ஜகன்மோகினி என்ற பெயரிலும் மொழி மற்றம் செய்யப்பட்டு ஒரே நேரத்தில் வெளியிடப்பட்டது.[2] .பின்னர் இந்தி மொழியிலும் இதே பெயரில் மொழி மாற்றம் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது

கதைச்சுருக்கம்[தொகு]

இந்த படம் பச்சைத் தீவில் தொடங்குகிறது, இத்தீவு ஒரு வலிமையான மன்னனால் (நரசிம்ம ராஜு) ஆட்சி செய்யப்படுகிறது. அவரது மகனும் இளவரசனுமான ஜகதலப்பிரதாபன் (ராஜா) கடற்பிரதேசங்களை கைப்பற்றுவதற்கான ஒரு முயற்சியில் ஈடுபட்டிருக்கும் இளைஞர் ஆவார். கடற்படை தளபதி அலைக்கள்ளனின் தலைமையில் சங்கு தீவில் நிலங்களைக் கைப்பற்றுகிறான். இத்தீவில் உள்ள மீனவர் சமூகத்தைச் சேர்ந்த மோகினி (நமிதா) என்ற பெண்ணை ஜகதலபிரதாபன் காண்கின்றான். அவர்களுக்கு இடையே காதல் மலருகிறது. ஜகதலப்பிரதாபன் அலைக்கள்ளனுடனும் தான் நிர்வகிக்கும் படைகளுடனும் தனது நாட்டிற்குத் திரும்ப முடிவு செய்கிறான். தனது பெற்றோரை அழைத்து வந்து திருமணத்திற்கான அனைத்து ஏற்பாடுகளயும் செய்வதாக மோகினியிடம் அவன் வாக்குறுதி அளிக்கின்றான்

இருப்பினும் அரசன் மற்றும் அவரது மனைவி மங்கையர்க்காசி (யுவராணி) ஆகியோர் இளவரசி அழகு நாச்சியாருடன்(நிலா) ஜகதலப்பிரதாபனின் திருமணத்திற்கு ஏற்பாடு செய்கிறார்கள். ஆனால் தான் மோகினியை மட்டுமே திருமணம் செய்துகொள்ளப்போவதாக அவனது பெற்றோரை சமாதானப்படுத்த ஜகதலப்பிரதாபன் முயற்சி செய்கிறான்.இப்பிரச்சனைக்கு ஒரு முடிவுகட்டுவதற்காக, அரசனும் அவரது மனைவியும் சதித்திட்டம் தீட்டி மோகினியை குண்டர்கள் மூலம் கடலில் தள்ளி கொன்று விடுகின்றனர்.கொடூரமான எண்ணங்களைக் கொண்டிருக்கும் மாயாவி ஒருவன் (கோட்டா ஸ்ரீநிவாஸராவ்) ஜகதாலப்பிரபபனுக்கும் அலைக்கள்ளனுக்கும் இடையிலான மோதலை பயன்படுத்தி ஜகதலப்பிரதாபனைக் கொல்லுவதன் மூலம் ராஜ்ஜியத்தை ஆட்சி செய்வதற்கான அதிகாரத்தை தான் பெற்றுவிடலாமென நினைத்து அங்கே வருகிறான்.ஆனால் மீண்டும் பூமிக்கு வந்த மோகினின் ஆவி ஜகதலப்பிரதபனுடன் நெருக்கமாக இருந்து தந்திரங்களால் அவனுடைய திட்டங்கள் அனைத்தையும் முறியடிக்கிறாள்.

இதற்கிடையில், ஜகதலப்பிரதாபனும் இறந்து விட்டால் சொர்கத்தில் இருவரும் இணந்தே இருக்கலாமெனக் கூறி அடர்ந்த காட்டிற்குள் அழைத்துச் செல்கிறாள். ஆனால் அழகு நாட்சியாரின் புத்தி சாதுர்யத்தால் அது தடுக்கப்படுகிறது. மாயாவி அலைக்கள்ளன் மூலம் ஜகதலப்பிரதாபனை பலியிட்டு தேவியை மகிழ்வித்து அவளுடைய அருளை பெற நினைக்கிறான். ஆனால் ஜகதலப்பிரதாபனுக்கு பதிலாக அலைக்கள்ளனை பலியிட்டுவிடுகிறான். கடவுள் நேரில் தோன்றி ஜகதலப்பிரதாபனுக்கு வேண்டும் வரத்தை அளிப்பதாக தெரிவிக்கிறார். அவனோ மோகினி மீண்டும் அவளது உடலுக்கு திரும்பும்படியான வரம் கேட்கிறான். ஆனால் அது இயல்பாகவே இயலாததென்பதால்,.அதற்கு பதிலாக அவளது ஆத்மாவை ஆழகு நாச்சியாருக்குள் மாற்றுவதால் அவள் "மோட்சம்" பெறுவாள் என வரமளித்து தேவி மறைகிறாள். எல்லாம் முடிந்த பிறகு அவர்கள் இருவரும் மகிழ்ச்சியுடன் ஆட்சி செய்கின்றனர்.

நடிகர்கள்[தொகு]

  • ஜகதலப்பிரதாபனாக ராஜா அபேல்
  • ஜகன்மோகினியாக நமிதா
  • ஜகன்மோகனாக வடிவேலு
  • அழகு நாச்சியாராக மீரா சோப்ரா
  • மாயாவியாக கோட்டா ஸ்ரீநிவாஸராவ்

இசைத்தொகுப்பு[தொகு]

வாலி மற்றும் நா.முத்துகுமார் பாடல்களை இயற்ற இளையராஜாவால் இசையமைக்கப்பட்டது[3]

வரவேற்பு[தொகு]

ரீடிப் என்ற வளைத்தளம் வேடிக்கையான கதை ,கொடூரமான உடைகள் கொண்டது எனவும் ,அரைவேக்காட்டுத்தனமான மறு ஆக்கமென்றும், கணிணி வரைபடத்தால் எடுக்கப்பட்டதெனவும் விமர்சனம் செய்தது"[4] "[5]

மேற்கோள்கள்[தொகு]

  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". 2012-03-24 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2019-01-17 அன்று பார்க்கப்பட்டது.
  2. http://www.liveindia.com/meera/jaganmohini.html
  3. http://play.raaga.com/tamil/album/Jagan-Mohini-songs-T0001998
  4. http://www.rediff.com/movies/review/south-tamil-movie-review/20091019.htm
  5. http://www.behindwoods.com/tamil-movie-reviews/reviews-2/jaganmohini.html