திருமூர்த்தி (திரைப்படம்)
திருமூர்த்தி | |
---|---|
இயக்கம் | பவித்ரன் |
தயாரிப்பு | எம். ஜி. சேகர் எஸ். சந்தானம் |
கதை | பவித்ரன் |
இசை | தேவா |
நடிப்பு | விஜயகாந்த் |
ஒளிப்பதிவு | பி. பாலமுருகன் |
படத்தொகுப்பு | வி. ரி. விஜயன் |
கலையகம் | எம். ஜி. பிக்சர்ஸ் |
வெளியீடு | மே 11, 1995 |
ஓட்டம் | 155 நிமிடங்கள் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
திருமூர்த்தி (thirumoorthy)1995 இல் வெளிவந்த தமிழ் அதிரடித் திரைப்படமாகும். பவித்ரன் இத்திரைப்படத்தை இயக்கியிருந்தார். இத்திரைப்படத்தின் முன்னணிக் கதாபாத்திரங்களில் விஜயகாந்த், ராவலி ஆகியோரும் இவர்களுடன் இணைந்து ஆனந்தராஜ், ராஜன் பி. தேவ், மனோரமா, செண்பகம், செந்தில், ஜனகராஜ் ஆகியோரும் நடித்துள்ளனர். எம். ஜி. சேகர், எஸ். சந்தானம் ஆகியோர் இத்திரைப்படத்தை தயாரித்திருந்தனர். தேவா இத்திரைப்படத்திற்கு இசையமைத்திருந்தார். மேலும் மே 11, 1995இல் வெளியிடப்பட்டுள்ளது. விஜயகாந்த்தின் அரசியல் சார்ந்த இத்திரைப்படம் வசூலில் பெரும் சாதனை படைத்ததுடன் இத்திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள 'செங்குருவி' பாடல் வெற்றி பெற்றது.[1][2]
கதைச்சுருக்கம்[தொகு]
மூர்த்தி (விஜயகாந்த்) ஒரு லாரி ஓட்டுனராவார். மூர்த்தி அவனது அம்மா ராம் ஆத்தாவுடன் (மனோரமா) வசித்து வந்தான். மூர்த்தி அடிக்கடி குற்றவாளி கோவிந்தன் (ஆனந்தராஜ்) என்பவனுடன் மோதினான். மூர்த்தி மற்றும் உமா (ராவலி) ஆகியோர் ஒருவரை ஒருவர் காதலித்து வந்தனர். ஒரு நாள் உமாவின் தந்தைக்கு மாரடைப்பு வர அவரை மருத்துவமனைக்கு உமா மற்றும் மூர்த்தி ஆகியோர் அழைத்துச்சென்றனர். ஆனால் இவர்கள் அழைத்து செல்லும் வழியில் வீதியை ஓர் அரசியல் குழு மூடியது. இதனால் அவளது தந்தை துரதிஷ்டடமாக இறந்து விடுகிறார். இதனால் கோபமடைந்த மூர்த்தி பொதுமக்கள் முன்னிலையில் அரசியல் குழு தலைவனை அடித்து விடுகிறான். பின்னர் கோவிந்தன் அவ் அரசியல் குழு தலைவனின் கட்சியில் இணைவதோடு தேர்தலிலும், மூர்த்திக்கு எதிராகவும் நிற்கிறான். அதேசமயம் மூர்த்தி மற்றும் உமா ஆகியோர் திருமணம் செய்துகொள்கின்றனர். பின்னர் அந்த துர்நடத்தையுள்ள அரசியல் தலைவன் சிகாமணி கோவிந்தனை கொன்றுவிட்டு அதனை அப்பாவி மூர்த்தி மீது சாட்டிவிடுகிறான். இதன்பின் என்ன நடக்கிறது என்பதே மீதிக்கதை.
நடிகர்கள்[தொகு]
- விஜயகாந்த்- மூர்த்தி
- ராவலி - உமா
- ஆனந்தராஜ் - கோவிந்தன்
- ராஜன் பி. தேவ் - சிங்கமணி
- மனோரமா- ராம் ஆதா
- செண்பகம் - கீதா
- செந்தில்- அழகேசன்
- ஜனகராஜ்- உமாவின் தந்தை
- ஆர். சுந்தரராஜன் - கீதாவின் சகோதரன்
- ராஜ்குமார்
- ஜோஜோ
- சங்கீதா - லக்ஷ்மி
- ஸ்ரீஜா
- பசி சத்யா
- ஜோதி மீனா
- லக்ஷ்மி ராதன்
- என்னத்த கண்ணையா
- பசி நாராயணன்
- ஓமக்குச்சி நரசிம்மன்
- ரீ. என். பி. ராஜேந்திரன்
- ஏ. என். பாபு
- திருப்பூர் ராமசாமி - ராமசாமி
- குள்ள மணி - பெருச்சாளி
- கறுப்பு சுப்பையா
- ஈஸ்வரன்
- சாம்ராஜ்
- ராம் - லக்ஸ்மன்
- செல்லத்துரை
- கஜினி
- கல்யாண்
இசை[தொகு]
இத்திரைப்படத்திற்கு தேவா இசையமைத்துள்ளார். மேலும் 1995 ம் ஆண்டு இசை வெளியிடப்பட்டுள்ளது. இத்திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள ஆறு பாடல்களுக்கும் பாடல்வரிகளை வாலி எழுதியுள்ளார்.
வ. எண் | பாடல் | பாடகர்(கள்) | வரிகள் | நீளம் |
---|---|---|---|---|
1 | "மஞ்சள் நிலா" | இராகினி சந்தானம், எஸ். பி. பாலசுப்பிரமணியம் | வாலி | 4:42 |
2 | "மஸ்து மஸ்து" | எஸ். பி. பாலசுப்பிரமணியம், எஸ். ஜானகி, குழுவினர் | 4:23 | |
3 | "நம்ம ஊரு" | அத அலி அசாத், குழுவினர் | 4:43 | |
4 | "நம்ம தலைவர்" | மனோ, குழுவினர் | 4:12 | |
5 | "செங்குருவி" | எஸ். பி. பாலசுப்பிரமணியம், எஸ். ஜானகி | 5:58 | |
6 | "தக திமி தா" | சுரேஷ் பீட்டர்ஸ், அனுபமா, குழுவினர் | 3:58 |
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "Thirumoorthi (1995) Tamil Movie". spicyonion.com. 2015-02-19 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "Tamil Movie News--1995 Review". groups.google.com. 1996-01-09. 2015-02-19 அன்று பார்க்கப்பட்டது.