சிறையில் பூத்த சின்ன மலர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சிறையில் பூத்த சின்ன மலர் ( ஆங்கிலம்: :Sirayil Pootha Chinna Malar) 1990 இல் வெளிவந்த தமிழ காதல் நாடகத் திரைப்படம் ஆகும். இப்படத்தை இயக்குநர் அமிர்தம் என்பவர் கதை மற்றும் திரைக்கதை மற்றும் வசனம் ஆகியவற்றை எழுதி இயக்கியுள்ளார். ஸ்ரீதிருமலா ஆர்ட் புரடக்சன்சு சார்பில் இப்படத்தை எம். கோபி என்பவர் தயாரித்துள்ளார். ஒளிப்பதிவை எஸ். மாருதி ராவ் மேற்கொண்டுள்ளார். பி. வெங்கடேசுவர ராவ் படத்தொகுப்பை மேற்கொண்டார்.இத்திரைப்படத்தில் நடிகர் விஜயகாந்த், பானுப்ரியா, சாந்திப்ரியா மற்றும் நடிகர் ராஜேஷ் ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர். இசையமைப்பாளர் இளையராஜா இப்படத்திற்கு இசையமைத்திருந்தார்.[1][2] பின்னர் இது தெலுங்கு மொழியில் "ரவுடிலாகு ரவுடி என்றும், இந்தியில் "சக்மி ஷெர்" என்றும் மொழி மாற்றம் செய்யப்பட்டது ..[3][4] மேலும் ஸ்ரீதிருமலா ஆர்ட் புரடக்சன்சு சார்பில் இப்படம் வெளியிடப்பட்டது.

கதை[தொகு]

கிராமத்தில் வசித்து வரும் முத்தப்பா (விஜயகாந்த்), ஒரு ஏழைப்பாடகன். அவன் அவ்வூரில் உள்ள ஒரு கொடூரமான நில உரிமையாளரின் (ராஜேஷ்) சகோதரியைக் நேசிக்கிறார். இதனால் முத்தப்பா இன்னல்களைச் சந்திக்கிறார். தனது தங்கையின் காதலை விரும்பாத அந்த நிலச்சுவான்தார் முத்தப்பாவை கொல்ல ஏற்பாடு செய்கிறார். அந்த கொலை முயற்சியில் இருந்து தப்பிய பின்னர், முத்தப்பா அவன் நேசித்த பெண்மணியை மணக்கிறார்.

பின்னர் நில உரிமையாளர் ஒருவழியாக அவர்கள் இருவரின் உறவை மறைமுகமாக ஏற்றுக்கொண்டார் என்பதை அறிந்து முத்தப்பா அதிர்ச்சியடைகிறார். இருப்பினும், அன்று இரவில் முத்தப்பாவும் அவரது மனைவியும் ஒருவரை ஒருவர் சந்திக்க முடியாத வகையில் நில உரிமையாளரின் சகோதரரால் ஒரு ரகசிய மற்றும் தனி சிறைச்சாலைகளுக்கு இருவரும் மாற்றப்படுகிறார்கள். இந்த சம்பவத்திற்குப் பிறகு அவர் கிராமத்தில் காதலைத் தடைசெய்கிறார். மேலும் தனது சகோதரியின் திருமணம் நடத்தப்பட்ட கோவிலையும் மூடுகிறார். சிறைக்குச் சென்று இறந்த முத்தப்பாவை மக்கள் மறந்து விடுகிறார்கள்.

சில காலம் கழிந்த பின் பார்த்திபன் (விஜயகாந்த்மீண்டும்), நில உரிமையாளரின் அடக்குமுறைகளி வெளிப்படையாக எதிர்க்கும் ஒரு தைரியமான இளைஞனாக கிராமத்திற்கு வருகிறான். அவன் பூட்டியிருந்த கிராம கோவிலை மீண்டும் திறந்து காதலர்களை ஒன்றிணைக்க உதவுகிறான். நில உரிமையாளரின் துடுக்குத்தனமான குழந்தைகளை கூட அவனை அவமானப்படுத்துகிறார்கள். மேலும் அவனை கோபத்திற்கு ஆளாக்குகிறார்கள். ஒரு நாள் நிலச்சுவான்தார் பார்த்திபன் பாடும் ஒரு பாடலைக் கேட்க நேரிடுகிறது. அது ஏற்கனவே முத்தப்பாவால் பாடப்பட்டதை அறிகிறார். மேலும் முத்தப்பாவைப் போலவே இருக்கும் பார்த்திபனது உருவ ஒற்றுமையைக் கண்டு அதிர்ச்சியடைகிறார்.

பார்த்திபன் யார்? அவன் முத்தப்பாவுடன் தொடர்புடையவனா? முத்தப்பா சிறையிலிருந்து தப்பித்தாரா? பின்னர் என்ன நடக்கிறது என்பது கதையின் முக்கிய அம்சமாக அமைகிறது.

நடிகர்கள்[தொகு]

முத்தப்பா மற்றும் பார்த்திபனாக விஜயகாந்த்
பானுப்ரியா
சாந்திப்ரியா
நில உரிமையாளராக ராஜேஷ்
எஸ். எஸ். சந்திரன்
ஜெயபாரதி (மலையாள நடிகர்)
தாரா ( கன்னட நடிகை)
தியாகு
கோகிலா
சிவராம்
எஸ். ஏ. கண்ணன்
அபிநயா
வாணி
லதா
உஷாபிரியா
பிரேமி

ஒலிப்பதிவு[தொகு]

இசையமைப்பாளர் இளையராஜா இப்படத்திற்கு இசையமைத்திருந்தார். ஆறு பாடல்கள அடங்கிய இதன் ஒலித்தொகுப்பில் கவிஞர் வாலி, பிற சூடன், கங்கை அமரன் மற்றும் புலவர் புலமைப்பித்தன் ஆகியோர் பாடல்களை எழுதியிருந்தனர்.[5] மேலும் இப்படத்தில் இடம் பெற்ற கவிஞர்: வாலி "அதிசய நடனமிடும் அபிநய சரஸ்வதியோ.." என்ற பாடலும் "ஆலோலம் பாடும்" என்ற பாடலும் 1990 களில் இசை ரசிகர்களிடையே பெரும் வர்வேற்பைப் பெற்றது.

எண். பாடல் பாடியோர் எழுதியோர் நீளம் (m:ss)
1 "ஆலோலம் பாடும் " மனோ, எஸ். ஜானகி வாலி 04:40
2 "அதிசய நடமிடும்" கே. ஜே. யேசுதாஸ், சித்ரா வாலி 05:07
3 "எத்தனை பேர் உன்னை நம்பி " கே. எஸ். சித்ரா பிறை சூடன் 05:03
4 "தானா பழுத்த " கோவை சௌந்தரராஜன் கங்கை அமரன் 04:27
5 "வாசக்கறி வேப்பிலையே" அருண் மொழி, எஸ். ஜானகி புலமைப்பித்தன் 04:56
6 "வச்சான் வச்சான்" கே. எஸ். சித்ரா கங்கை அமரன் 04:12

விமர்சனம்[தொகு]

"தி இந்தியன் எக்ஸ்பிரசு இவ்வாறு தனது விமர்சனத்தில் எழுதியது " இயக்குநர் அமிர்தம் இயக்கிய இத்திரைப்படம் இந்தியப் பாரம்பரியமான கதைகளைப் பின்பற்றுகிறது" [6]

குறிப்புகள்[தொகு]

  1. "Sirayil Pootha Chinna Malar". spicyonion.com. 2014-12-08 அன்று பார்க்கப்பட்டது.
  2. "Sirayil Pootha Chinna Malar". gomolo.com. 2016-02-27 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2014-12-08 அன்று பார்க்கப்பட்டது.
  3. https://www.youtube.com/watch?v=n-H6wyw02Rw
  4. https://www.youtube.com/watch?v=2B-ltTMMYaQ
  5. "Siraiyil Pootha Chinna Malar Songs". raaga.com. 2014-12-10 அன்று பார்க்கப்பட்டது.
  6. https://news.google.com/newspapers?nid=P9oYG7HA76QC&dat=19900803&printsec=frontpage&hl=en

External links[தொகு]