ஆதலால் காதல் செய்வீர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
ஆதலால் காதல் செய்வீர்
இயக்குனர் சுசீந்திரன்
நடிப்பு
  • சந்தோஷ் ரமேஷ்
  • மனிஷ் யாதவ்
இசையமைப்பு யுவன் சங்கர் ராஜா
வெளியீடு மே 2013 (2013-05)
நாடு இந்தியா
மொழி தமிழ்

ஆதலால் காதல் செய்வீர் இயக்குனர் சுசீந்திரன் இயக்கி வெளிவந்த தமிழ்த் திரைப்படம் ஆகும். இப்படத்தின் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா ஆகும்.

வரவேற்பு[தொகு]

இத்திரைப்படம் மிகுந்த வரவேற்பை பெற்றது. இத்திரைப்படத்தினை பார்த்து இயக்குனர் சேரனின் மகள் திருந்தியதாக செய்திகளும் வெளிவந்தன.[1] காதலில் விழுவது, காதலைக் கையாள்வது, அதன் பிறகு வரும் நெருக்கடிகளைச் சமாளிப்பது என்று எந்த விஷயத்திலும் பெண்களை கௌரவமாகச் சித்தரிக்காத படம் இது, என்ற கருத்தும் வெளியானது. [2]

கதைச்சுருக்கம்[தொகு]

காதலி கர்ப்பமாகின்றாள். ஆரம்பத்தில் கருவை கலைக்க வைத்தியசாலைக்கு கொண்டுசென்றபோது மருத்துவர் முடியாது எனவும், திட்டியும் அனுப்பிவிடுகிறார். நாட்கள் சென்றன, 3 மாதம் ஆகிவிட்டது, இனிமேல் கருவைக்கலைக்க முடியாது எனவும் அப்படி கலைத்தால் தாய் உயிருக்கு ஆபத்து எனவும் வேறு சில மருத்துவர்கள் கூறினர். கதையின் நாயகி தான் கர்ப்பமானதை பெற்றோரிடம் மறைக்கின்றாள். ஒருமுறை வாந்தி எடுத்தபோது அவளின் தாய் பார்த்துவிட்டாள். பின்பு பெரிய பிரச்சினை நடந்து ஆண் வீட்டாரிடம் திருமணம் செய்துவைக்கக் கோரிய போது அவர்கள் சாதிப் பிரச்சினை காரணமாக முடியாது எனச் சொல்லிவிட்டனர். எனினும் பெண் வீட்டார் காவல்துறையிடம் தெரிவித்துவிடுவதாக மிரட்டினர். இறுதியில் திருமணம் நடக்காமலேயே ஒரு ஆண் குழந்தை பிறந்தது. அதை அநாதை இல்லத்தில் சேர்த்துவிட்டனர். அதன் பின் பெண்ணுக்கு இன்னொருவனோடும் ஆணுக்கு இன்னொருத்தியோடும் திருமணம் முடிந்தது.

மேற்கோள்கள்[தொகு]

  1. "’ஆதலால் காதல் செய்வீர்’ படம் பார்த்து திருந்திய சேரன் மகள்!". மாலை மலர். பார்த்த நாள் மார்ச் 2, 2014.
  2. "ஆதலால் காதல் செய்வீர் - பெண்கள் முட்டாள்கள் அல்ல". தாமரை. தி இந்து (செப்டம்பர் 12, 2013). பார்த்த நாள் மார்ச் 2, 2014.

வெளியிணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆதலால்_காதல்_செய்வீர்&oldid=2100374" இருந்து மீள்விக்கப்பட்டது