தாயின் மடியில்
தாயின் மடியில் | |
---|---|
இயக்கம் | அதுர்த்தி சுப்பா ராவ் |
தயாரிப்பு | கே. ஆர். பாலன் அன்னை பிலிம்ஸ் |
கதை | சொர்ணம் |
இசை | எஸ். எம். சுப்பையா நாயுடு |
நடிப்பு | எம். ஜி. ஆர் பி. சரோஜா தேவி |
வெளியீடு | திசம்பர் 8, 1964 |
நீளம் | 4392 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
தாயின் மடியில் 1964 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். அதுர்த்தி சுப்பா ராவ் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எம். ஜி. ஆர், பி. சரோஜா தேவி மற்றும் பலர் நடித்திருந்தனர். இது 18 திசம்பர் 1964 அன்று வெளியானது.[1][2]
கதை
[தொகு]குதிரை ஏற்ற வீரரான ராஜா ஒழுக்கமான வாழ்கை வாழ்ந்து வருகிறார். அவரும் தொழிலதிபர் பூபதி மகளும் காதலிக்கின்றனர். அநாதையாக அரிந்த ராஜா பல ஆண்டுகளுக்குப் பிறகு தன் தாயைப் பற்றியும் அவருக்கு இழைக்கப்பட்ட அநீதி குறித்தும் அறிந்துகொள்கிறார். தன் தாயிக்கு அநீதி இழைத்த தன் தந்தையை கண்டுபிடித்து பழிவாக்குவராக ராஜா சபதம் செய்கிறார். இறந்துவிட்டதாக கருதிய தன் தாயை ராஜா சந்தித்து மகிழ்கிறார். ஆனால் தந்தை பூபதிதான் என தன் தாயின் மூலமாக அறியும்போது அவர் அதிர்ச்சியடைகிறார்.
நடிப்பு
[தொகு]திரைக்கலஞ்சியம் பகுதி-2 என்ற நூலைத் தழுவி எடுக்கப்பட்ட பட்டியல்.[3]
|
|
தயாரிப்பு
[தொகு]இப்படத்தை அன்னை பிலிம்ஸ் என்ற பதாகையின் கீழ் கே. ஆர் பாலன் தயாரித்தார். படத்தை ஏ. சுப்பாராவ் இயக்கினார். ஆர். ஆர். சந்திரன் ஒளிப்பதிவு செய்தார். இப்படத்திற்கான கதை, உரையாடலை சொர்ணம் எழுதினார்.[4]
பாடல்
[தொகு]இப்படத்திற்கு எஸ். எம். சுப்பையா நாயுடு இசையமைக்க, படல் வரிகளை கண்ணதாசன், வாலி ஆகியோர் எழுதினர்.[5] "இராஜாத்தி காத்திருந்தாள்" பாடலுக்கு ம. கோ. இராவும், சரோஜாதேவியும் பொய்க்கால் குதிரை ஆட்டம் ஆடினார்கள். அது இரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றது.
பாடல் | பாடகர்/கள் | வரிகள் |
---|---|---|
"பெண்ணே ஒன்று சொல்லவா" | பி. சுசீலா | வாலி |
"கள்ளிருக்கும் ரோஜா மலர்" | டி. எம். சௌந்தரராஜன், பி. சுசீலா | கண்ணதாசன் |
"இராஜாத்தி காத்திருந்தாள்" | வாலி | |
"என்னைப் பார்த்து எதைப் பார்த்தாலும்" | ||
"எத்தனை செல்வங்கள் வந்தாலும்" | டி. எம். சௌந்தரராஜன் | |
"பார்வையிலே பந்தல் கட்டி" | பி. சுசீலா |
வெளியீடு
[தொகு]இப்படம் 18 திசம்பர் 1964 அன்று வெளியானது. ஆனால் இது வெளியான 26 நாட்களிலேயே ம. கோ. இரா நடித்த எங்க வீட்டுப் பிள்ளை படமும் வெளியானதால் அது இப்படத்தின் வெற்றியை பாதிப்பதாக ஆனது.[6]
இவற்றையும் பார்க்கவும்
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Thayin Madiyil". இந்தியன் எக்சுபிரசு: pp. 3. 18 December 1964. https://news.google.com/newspapers?nid=P9oYG7HA76QC&dat=19641218&printsec=frontpage&hl=en.
- ↑ "Table: Chronological List of MGR's Movies released between 1960 and 1967" (PDF). வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவை. Archived (PDF) from the original on 16 June 2016. பார்க்கப்பட்ட நாள் 16 April 2021.
- ↑ Neelamegam, G. (2016). Thiraikalanjiyam — Part 2 (in Tamil). Manivasagar Publishers.
{{cite book}}
: CS1 maint: unrecognized language (link)[page needed] - ↑ "1964 – தாயின் மடியில் – அன்னை பிலிம்ஸ்" [1964 – Thayin Madiyil – Annai Films]. Lakshman Sruthi (in Tamil). Archived from the original on 3 October 2017. பார்க்கப்பட்ட நாள் 3 October 2017.
{{cite web}}
: CS1 maint: unrecognized language (link) - ↑ தாயின் மடியில் (PDF) (பாட்டுப் புத்தகம்). Annai Films. 1964. பார்க்கப்பட்ட நாள் 22 June 2022.
- ↑ தாயின் மடியில்: எம்.ஜி.ஆர், சரோஜாதேவியின் பொய்க்கால் குதிரை நடனம், இந்து தமிழ் திசை 18 திசம்பர், 2023
வெளி இணைப்புகள்
[தொகு]- Wikipedia articles needing page number citations from June 2022
- 1964 தமிழ்த் திரைப்படங்கள்
- இந்தியத் தமிழ்த் திரைப்படங்கள்
- எஸ். எம். சுப்பையா நாயுடு இசையமைத்த திரைப்படங்கள்
- எம். ஜி. ஆர். நடித்த திரைப்படங்கள்
- எம். என். நம்பியார் நடித்த திரைப்படங்கள்
- எம். ஆர். ராதா நடித்த திரைப்படங்கள்
- நாகேஷ் நடித்த திரைப்படங்கள்
- சரோஜாதேவி நடித்த திரைப்படங்கள்
- பண்டரிபாய் நடித்த தமிழ்த் திரைப்படங்கள்
- மனோரமா நடித்த திரைப்படங்கள்