வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவை (Federation of Tamil Sangams of North America, FeTNA) என்பது வட அமெரிக்க தமிழ்ச்சங்கங்களின் ஒரு குடையமைப்பு ஆகும். இவ் அமைப்பில் 50 இற்கும் மேற்பட்ட தமிழ்ச் சங்கங்கள் அங்கம் வகிக்கின்றன.[1] ஒருவருக்கு ஒருவர் உதவி ஒற்றுமையில் பலம், பயன் காண்பதற்கு பாலமாக இருப்பதே இச்சங்க இருப்பிற்கு காரணமாகும். தமிழ் மொழி, பண்பாடு, சமூகம் ஆகியவற்றை பேணி வளர்ப்பதே இச்சங்கத்தின் முக்கிய நோக்காகும்.

இச்சங்கம் ஒவ்வொரு ஆண்டும் மாநாடு மற்றும் ஒன்றுகூடல் நடாத்துகின்றது. 2008 இல் தனது ஆண்டு விழாவை பெரியசாமி தூரன் நூற்றாண்டு விழாவாக இச்சங்கம் கொண்டாடியது.[2]

மேற்கோள்கள்[தொகு]

  1. https://fetna.org/member-tamil-sangams/
  2. "ஃபெட்னாவின் 2008 விழா - பெரியசாமி தூரன் நூற்றாண்டு விழா". Archived from the original on 2008-06-01. பார்க்கப்பட்ட நாள் 2008-05-25.

வெளி இணைப்புகள்[தொகு]