உள்ளடக்கத்துக்குச் செல்

நாளை நமதே

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நாளை நமதே
இயக்கம்கே. எஸ். சேதுமாதவன்
தயாரிப்புகே. எஸ். ஆர். மூர்த்தி
கஜேந்திரா பிலிம்ஸ்
இசைஎம். எஸ். விஸ்வநாதன்
நடிப்புஎம். ஜி. ஆர்
லதா
வெளியீடுசூலை 4, 1975
நீளம்4239 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

நாளை நமதே (Naalai Namadhe) என்பது 1975 இல் வெளிவந்த இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். கே. எஸ். சேதுமாதவன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எம். ஜி. ஆர், லதா மற்றும் பலர் நடித்திருந்தனர்.

கதை

[தொகு]

சகோதரர்களான சங்கர், விஜய் குமார், ராதன் ஆகியோர் இளம் வயதில் பிரிந்து விடுகின்றனர். தாங்கள் பெரியவர்களாக ஆனபிறகு தங்கள் குடும்ப பாடல் மூலம் ஒன்று சேர்கின்றனர். பின்னர் தங்கள் பெற்றோரைக் கொன்ற கொலையாளியான இரஞ்சித்தை பழிவாங்குகின்றனர்.

நடிகர்கள்

[தொகு]

தயாரிப்பு

[தொகு]

நாளை நமதே என்பது இந்தித் திரைப்படமான யாதோன் கி பாரத்தின் (1973) திரைப்படத்தின் மறு ஆக்கம் ஆகும். முதலில் தர்மேந்திரா, விஜய் அரோரா ஆகியோரால் சித்தரிக்கப்பட்ட பாத்திரங்களை எம். ஜி. இராமச்சந்திரன், இரட்டை வேடத்தில் மீண்டும் நடித்தார். இராமச்சந்திரனும் கே எஸ் சேதுமாதவனும் படத்திற்கு என்ன தலைப்பு வைப்பது என்று விவாதித்துக் கொண்டிருந்தபோது, அவர்களுடைய ஒரு பத்திரிக்கையாளர் நண்பர் நாளை நமதே என்று பரிந்துரைத்தார். அந்த தலைப்பே இறுதி செய்யப்பட்டது.

பாடல்கள்

[தொகு]

இத்திரைப்படத்திற்கு எம். எஸ். விஸ்வநாதன் இசையமைத்தார்.அனைத்துப் பாடல்களையும் கவிஞர் வாலி இயற்றினார்.[1]

எண். பாடல் பாடகர்கள் வரிகள் நீளம்
1 "நாளை நமதே" (அன்பு மலர்களே) பி. சுசீலா, எல். ஆர். அஞ்சலி, சோபா & சசிரேகா வாலி 05:12
2 "நாளை நமதே" (சிறிய பாடல்) எஸ். பி. பாலசுப்பிரமணியம் 01:37
3 "நானொரு மேடைப் பாடகன்" டி. எம். சௌந்தரராஜன், எஸ். பி. பாலசுப்பிரமணியம் & எல். ஆர். ஈஸ்வரி 06:06
4 "நீல நயனங்களில்" கே. ஜே. யேசுதாஸ் & பி. சுசீலா 05:48
5 "என்னை விட்டால்" கே. ஜே. யேசுதாஸ் 04:18
6 "காதல் என்பது" கே. ஜே. யேசுதாஸ் & பி. சுசீலா 05:12
7 "என் இடையிலும்" (Love Is A Game) எஸ். பி. பாலசுப்பிரமணியம், எல். ஆர். ஈஸ்வரி & சாய்பாபா 04:40
8 "நாளை நமதே" (அன்பு மலர்களே) டி. எம். சௌந்தரராஜன் & எஸ். பி. பாலசுப்பிரமணியம் 04:58
9 "நாளை நமதே" (அன்பு மலர்களே) பி. சுசீலா, எல். ஆர். அஞ்சலி, சோபா & சசிரேகா 05:12

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Naalai Namathe (1975)". Raaga.com. Archived from the original on 12 செப்டெம்பர் 2012. பார்க்கப்பட்ட நாள் 29 சூலை 2014.
"https://ta.wikipedia.org/w/index.php?title=நாளை_நமதே&oldid=4070574" இலிருந்து மீள்விக்கப்பட்டது