துர்கா (1990 திரைப்படம்)
துர்கா | |
---|---|
இயக்கம் | ராம நாராயணன் |
தயாரிப்பு | என். ராதா |
கதை | புகழ்மணி (வசனம்) |
திரைக்கதை | ராம நாராயணன் |
இசை | சங்கர் கணேஷ் |
நடிப்பு | பேபி ஷாமிலி நிழல்கள் ரவி கனகா கிட்டி |
ஒளிப்பதிவு | என்.கே.விஸ்வநாதன் |
படத்தொகுப்பு | ராஜா |
கலையகம் | ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் |
வெளியீடு | 10 ஆகஸ்ட் 1990 |
ஓட்டம் | 116 நிமிடங்கள் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
துர்கா(durga) 1990 ஆம் ஆண்டு பேபி ஷாமிலி இரட்டை வேடங்களில் நடித்து வெளியான குழந்தைகளுக்கான தமிழ்த் திரைப்படம். ராம நாராயணன் கதை, திரைக்கதை எழுதி, இயக்கி மற்றும் தயாரித்த இப்படத்தின் வசனத்தை புகழ்மணியும், இசையை சங்கர் கணேஷும் வழங்கினர். இப்படத்தில் நிழல்கள் ரவி, கனகா, கிட்டி, சத்யப்ரியா, வாகை சந்திரசேகர், செந்தில் மற்றும் வெண்ணிற ஆடை மூர்த்தி ஆகியோர் நடித்தனர்.[1][2] இது வெற்றி பெற்ற திரைப்படம்.[சான்று தேவை] இப்படம் தெலுங்கில் லட்சுமி துர்கா என்று 1990லும், இந்தியில் தேவி ஆர் துர்கா என்று 1992லும் மொழிபெயர்க்கப்பட்டு வெளியானது. 1991 இல் பைரவி என்ற பெயரில் கன்னட மொழியில் மறு ஆக்கம் செய்யப்பட்டது.
கதைச்சுருக்கம்[தொகு]
துர்கா (பேபி ஷாமிலி) வசதியான தம்பதியரின் ஒரே மகள். விதவையான (சத்யப்ரியா) துர்காவின் தாயை சொத்துக்கு ஆசைப்பட்டு துர்காவின் சித்தப்பா(கிட்டி) திட்டமிட்டுக் கொல்கிறான். அவனிடமிருந்து தன் வளர்ப்புப்பிராணிகள் குரங்கு(ராமு) மற்றும் நாய் (ராஜா) உதவியுடன் தப்பிக்கும் துர்காவிற்கு அப்பாவியான முத்துவும் (நிழல்கள் ரவி) அவனுடைய காதலி கண்ணம்மாவும் (கனகா) உதவ முடிவு செய்கின்றனர்.
முத்துவும் கண்ணம்மாவும் துர்காவிற்குப் பாதுகாவலாக இருப்பதால் அவளின் சித்தப்பா அவளைக் கொல்ல முடியவில்லை. துர்காவைப் போன்றே உருவமுள்ள மல்லிகாவைக் (பேபி ஷாம்லி) காண்கிறான். மல்லிகாவின் தந்தையைக்(வாகை சந்திரசேகர்) கொன்றுவிடுவதாக மிரட்டி அவர்களைத் தன் திட்டத்திற்குச் சம்மதிக்க வைக்கிறான். மல்லிகா, துர்காவின் வீட்டுக்குச் சென்று குழப்பத்தை ஏற்படுத்தினால் துர்காவை எளிதில் கொன்றுவிடலாம் என்பது அவன் திட்டம்.
இருவரில் யார் உண்மையான துர்கா என்றறிய இருவரையும் கோவிலில் தீமிதிக்கச் சொல்கின்றனர். துர்கா வெற்றிகரமாக நடந்துவிட, மல்லிகா நடக்கத் தொடங்கும்முன் அவள் தந்தை வந்து காப்பாற்றி நடந்த உண்மைகளைக் கூறி கிட்டியைச் சிறைக்கு அனுப்புகிறார். மல்லிகா, முத்து மற்றும் கண்ணம்மா ஆகியோர் துர்காவுடன் சேர்ந்து மகிழ்ச்சியாக வாழ்கின்றனர்.
நடிகர்கள்[தொகு]
துர்கா (தமிழ்) | லட்சுமி துர்கா (தெலுங்கு) | தேவி ஆர் துர்கா (இந்தி) |
---|---|---|
துர்கா /மல்லிகா (பேபி ஷாமிலி) | துர்கா /லட்சுமி (பேபி ஷாமிலி) | துர்கா /தேவி (பேபி ஷாமிலி) |
முத்து (நிழல்கள் ரவி) | (நிழல்கள் ரவி) | (நிழல்கள் ரவி) |
கண்ணம்மா (கனகா) | (கனகா) | (கனகா) |
துர்காவின் சித்தப்பா (கிட்டி) | துர்காவின் சித்தப்பா (கிட்டி) | துர்காவின் சித்தப்பா (கிட்டி) |
துர்காவின் அம்மா (சத்யப்ரியா) | துர்காவின் அம்மா (சத்யப்ரியா) | துர்காவின் அம்மா (சத்யப்ரியா) |
மல்லிகாவின் தந்தை (வாகை சந்திரசேகர்) | லட்சுமியின் தந்தை (வாகை சந்திரசேகர்) | தேவியின் தந்தை (வாகை சந்திரசேகர்) |
முத்துவின் தாய் (வரலட்சுமி) | முத்துவின் தாய் (வரலட்சுமி) | முத்துவின் தாய் (வரலட்சுமி) |
வெள்ளையன் (செந்தில்) | (செந்தில்) | (செந்தில்) |
மருத்துவர் மார்கோசா (வெண்ணிற ஆடை மூர்த்தி ) | மருத்துவர் மார்கோசா (வெண்ணிற ஆடை மூர்த்தி ) | மருத்துவர் மார்கோசா (வெண்ணிற ஆடை மூர்த்தி ) |
ரங்கா (பயில்வான் ரங்கநாதன்) | ரங்கா (பயில்வான் ரங்கநாதன்) | ரங்கா (பயில்வான் ரங்கநாதன்) |
ராமு (குரங்கு) | (குரங்கு) | (குரங்கு) |
ராஜா (நாய்) | (நாய்) | (நாய்) |
படக்குழு[தொகு]
- கலை : கே.வி.பத்மநாபன்
- புகைப்படங்கள் : ஆர்.ஆர். அழகப்பன்
- வடிவமைப்பு : பாண்டியன்
- விளம்பரம் : எம்.ஏ.கே.குமார்
- ஆய்வகம் : ஜெமினி கலர் லேப்
- சண்டைப்பயிற்சி : ஆம்பூர் ஆர்.எஸ்.பாபு
- நடனம் : சிவசங்கர்
- படத்தலைப்பு வடிவமைப்பு : கீதா பரணி
இசை[தொகு]
தமிழ்[தொகு]
இசை : சங்கர் கணேஷ் பாடல்கள் : வாலி
வ.எண் | பாடல்கள் | பாடகர்கள் | கால நீளம் |
---|---|---|---|
1 | பாப்பா பாடும் பாட்டு | எம்.எஸ்.ராஜேஸ்வரி | 03:33 |
2 | ஆடி வரும் பாடி வரும் | கே.எஸ். சித்ரா | 02:16 |
3 | பாப்பா பாடும் பாட்டு | எம்.எஸ்.ராஜேஸ்வரி | 01:43 |
4 | பாப்பா பாடும் பாட்டு | எம்.எஸ்.ராஜேஸ்வரி | 02:27 |
5 | மாரி முத்து மாரி | எஸ்.பி.சைலஜா | 05:02 |
தெலுங்கு (மொழிபெயர்ப்பு)[தொகு]
வ.எண் | பாடல்கள் | பாடகர்கள் | கால நீளம் |
---|---|---|---|
1 | பாப்பா பாடே பாட்டு | எம்.எஸ்.ராஜேஸ்வரி | 04:01 |
2 | ஆடினதி பாடினதி | 02:59 | |
3 | பாப்பா பாடே பாட்டு | எம்.எஸ்.ராஜேஸ்வரி | 02:21 |
4 | பாப்பா பாடே பாட்டு | எம்.எஸ்.ராஜேஸ்வரி | 01:55 |
5 | அம்மா மா துர்கம்மா | 06:01 |
வெளியீடு[தொகு]
பெயர் | மொழி | வெளியான திகதி | குறிப்பு |
---|---|---|---|
துர்கா | தமிழ் | 10 ஆகஸ்ட் 1990 | நேரடித் தமிழ்ப்படம் |
லட்சுமி துர்கா | தெலுங்கு | 1990 | மொழிபெயர்ப்பு |
தேவி ஆர் துர்கா | இந்தி | 1992 | மொழிபெயர்ப்பு |
பைரவி | கன்னடம் | 1991 | மறு ஆக்கம் |
சான்றுகள்[தொகு]
- ↑ "Durga". spicyonion. 6 March 2017 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ "Durga Movie". gomolo. 26 மார்ச் 2017 அன்று மூலம் பரணிடப்பட்டது. 6 March 2016 அன்று பார்க்கப்பட்டது.