உள்ளடக்கத்துக்குச் செல்

ஒளி விளக்கு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஒளி விளக்கு
இயக்கம்சாணக்கியா
தயாரிப்புஎஸ். எஸ். வாசன்
(ஜெமினி ஸ்டூடியோஸ்)
இசைஎம். எஸ். விஸ்வநாதன்
நடிப்புஎம். ஜி. ஆர்
ஜெயலலிதா
வெளியீடுசெப்டம்பர் 20, 1968
நீளம்4762 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

ஒளி விளக்கு (Oli Vilakku) என்பது 1968 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.[1] சாணக்கியா இயக்கிய இப்படத்தை எஸ். எஸ். வாசன் தயாரித்தார். இது இந்தி திரைப்படமான பூல் அவுர் பத்தர் (1966) என்ற படத்தின் மறுஆக்கம் ஆகும். இத்திரைப்படத்தில் எம். ஜி. ஆர் (100ஆவது படம்), ஜெயலலிதா, சௌகார் ஜானகி மற்றும் பலரும் நடித்திருந்தனர்.[2] எம். எசு. விசுவநாதன் இசையமைப்பில் கவிஞர் வாலி பாடல்களை எழுதியிருந்தார்.[3] இது 1968 செப்டம்பர் 20 அன்று வெளியானது. மேலும் அந்த ஆண்டில் வெளியான படங்களில் வெற்றிப் படங்களில் ஒன்றாகவும், ராமச்சந்திரனின் வாழ்க்கையில் ஒரு திருப்புமுனையாகவும் அமைந்தது.

நடிப்பு

[தொகு]

தயாரிப்பு

[தொகு]

ஒளி விளக்கு படத்தை தாபி சாணக்கியா இயக்கினார். ஜெமினி ஸ்டுடியோஸ் பதாகையின் கீழ் எஸ். எஸ். வாசன் தயாரித்தார்; வாசன் திரையில் தயாரிப்பாளராகக் குறிப்பிடப்படவில்லை. இந்தப் படம் எம். ஜி. ராமச்சந்திரனின் 100வது படமாகும். இது இந்தி மொழித் திரைப்படமான பூல் அவுர் பத்தர் (1966) என்ற படத்தின் மறுஆக்கம் ஆகும்.[4][5] ராமச்சந்திரன் நீண்ட பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகுதான் இந்தப் படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டார். ஆடைத் தேர்வு, கதாநாயகனின் குணாதிசயம் போன்றவை குறித்து ராமச்சந்திரன் விதித்த நிபந்தனைகளுக்கு வாசன் ஒப்புக்கொண்டார்.[6] இது ஜெமினியின் முதல் வண்ணப் படம்.[7] ஈஸ்ட்மேன்கலரில் வண்ணப்படமாக எடுக்கப்பட்டது.[8] மேலும் இது ராமச்சந்திரனும் வி. எஸ். ராகவனும் இணைந்து பணியாற்றிய முதல் படமாகும்.[9] ஜெயலலிதா முதலில் சசிகலா நடித்த வேடத்தில் நடிக்கத் தேர்ந்தெடுக்கப்பட்டபோது,[10] சௌகார் ஜானகி மீனாகுமாரியின் வேடத்தை ராமச்சந்திரனிடம் கேட்டுப் பெற்றார். சாவுகாருக்குப் (1950)க்குப் பிறகு ஜானகி ஒரு வேடத்தை விரும்பிக் கேட்டது இது இரண்டாவது முறையாகும்.[11]

உரையாடலை சொர்ணம் எழுதினார். கலை இயக்கத்தை ஏ. கே. சேகர் மேற்கொண்டார்.[1] ஒளிப்பதிவை யு. ராஜகோபாலும், படத்தொகுப்பை எம். உமாநாத்தும் கையாண்டனர்.[4] படத்தின் துவக்கத்தில் மூத்த நடிகையான சௌகார் ஜானகியின் பெயரை முதலில் போட படக்குழு விரும்பியபோது, தன் பெயர்தான் முதலில் வரவேண்டும் என்று ஜெயலலிதா பிடிவாதம் பிடித்ததார், அவரது கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டது.[12] படத்தின் படப்பிடிப்பு கொடைக்கானலில் நடந்த போது, ​​குளிர்ந்த காலநிலையின் காரணமாக ராமச்சந்திரன் ஒரு நாள் படப்பிடிப்பை இரத்து செய்து, படக் குழுவினருக்கு போர்வை கிடைக்க ஏற்பாடு செய்தார்.[13] மூலப்படமாக இந்தி படத்தில் நாயகன் (தர்மேந்திரா) விதவையை (குமாரி) மணப்பார். ஆனால் தமிழ்ப் படத்திலோ ராமச்சந்திரனின் ஆலோசனையின் பேரில் ஒளி விளக்கு படத்தின் உச்சக்கட்டக் காட்சியில் மாற்றம் செய்யப்பட்டது. நாயகன் (ராமச்சந்திரன்) திருமணமாகாத பெண்ணை (ஜெயலலிதா) மணக்கும் அதே வேளையில் விதவை (ஜானகி) இறப்பதாக முடிக்கப்பட்டது.[14]

இசை

[தொகு]

இப்படத்திற்கு எம். எஸ். விஸ்வநாதன் இசையமைத்தார். பாடல் வரிகளை வாலி எழுதினார்.[15] ஒரு காட்சியில் ராமச்சந்திரன் குடிகாரராக நடித்தார். குடித்துவிட்டு ஒரு பாடலைப் பாடுவதாக நடிக்க வேண்டியிருந்தது. பொதுவாக படங்களில் புகைபிடிப்பதையும் குடிப்பதையும் தவிர்ப்பவரான ராமச்சந்திரன் குழப்பத்தில் ஆழ்ந்தார். குழப்பம் குறித்து வாலியை அணுகினார், அவர் ஒரு தீர்வை வழங்கினார்: ராமச்சந்திரனின் கதாபாத்திரம் குடிபோதையில் இருக்கும், ஆனால் அவரது மனசாட்சி அவரை கேள்வி கேட்டுப் பாடுவது போல அமேக்கலாம் என்றார். பின்னர் ராமச்சந்திரன் வாலியிடம் பல்லவியைக் கேட்டார், வாலி "தைரியமாகச் சொல் நீ மனிதன் தானா, நீ தான் ஒரு மிருகம், இந்த மதுவில் விழும் நேரம்" என்ற வரிகளை எழுதினார், அது ராமச்சந்திரனை மிகவும் கவர்ந்தது.[16] "ஆண்டவனே உன்" பாடல் சிவரஞ்சனி ராகத்தில் அமைக்கப்பட்டுள்ளது.[17] "நான் கண்ட கனவில்" பாடல் இந்தி மூலப் பாடலான "ஜிந்தகி மெய்ன் பியார் கர்ணா" மற்றும் போர்த்துகீசிய பாடலான "அந்தோரின்ஹா ​​பிரேதா" ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டது.[18] "விசில்ஸ், சிப்ஸ் அண்ட் ட்ரங்கன்னெஸ்" என்ற இசைக்கருவிப் பகுதி இசைத்தட்டில் சேர்க்கப்படவில்லை.[4]

பாடல்கள்
# பாடல்பாடகர்(கள்) நீளம்
1. "தைரியமாகச் சொல் நீ மனிதன் தானா?"  டி. எம். சௌந்தரராஜன் 3:23
2. "நாங்க புதுசா கட்டிகிட்ட ஜோடிதானுங்க"  டி. எம். சௌந்தரராஜன், பி. சுசீலா 3:12
3. "ஆண்டவனே உன்"  பி. சுசீலா 3:16
4. "ருக்குமணியே"  டி. எம். சௌந்தரராஜன், எல். ஆர். ஈசுவரி 3:18
5. "மாம்பழத் தோட்டம்"  சீர்காழி கோவிந்தராஜன், எல். ஆர். ஈசுவரி 4:15
6. "இறைவா உன் மாளிகையில்"  பி. சுசீலா 4:04
7. "நீ தான்"  டி. எம். சௌந்தரராஜன் 3:21
8. "நான் கண்ட கனவினில்"  எல். ஆர். ஈசுவரி 3:09
மொத்த நீளம்:
27:58

வெளியீடும் வரவேற்பும்

[தொகு]

ஒளி விளக்கு 1968 செப்டம்பர் 20 அன்று வெளியானது.[1] மற்றும் ஜோதி பிக்சர்சால் விநியோகம் செய்யப்பட்டது.[19] இரண்டு நாட்களுக்குப் பிறகு, தி இந்தியன் எக்ஸ்பிரசின் விமர்சகர் படத்தை கேலி செய்தார். விமர்சகர் ராமச்சந்திரன், ஜெயலலிதா ஆகியோரின் நடிப்பை விமர்சித்தார், ஆனால் ஜானகியின் நடிப்பைப் பாராட்டினார்.[20] 1968 அக்டோபர் 6 அன்று, ஆனந்த விகடன் பத்திரிகை பலரால் கூட்டாக செய்யப்பட்ட ஒரு விமர்சனத்தை வெளியிட்டது, அவர்களில் பெரும்பாலோர் படம் குறித்து நேர்மறையான கருத்தைத் தெரிவித்தனர்.[21] ஒளி விளக்கு ராமச்சந்திரனின் தொழில் வாழ்க்கையில் பதினொன்றாவது திருப்புமுனையாகும்.[22] வரலாற்றாசிரியர் ராண்டார் கையின் கூற்றுப்படி, இந்த படம் "1968 ஆம் ஆண்டின் மிகப்பெரிய வெற்றிப் படங்களில் ஒன்றாகும்", மேலும் இலங்கையில் கூட நன்கு ஓடியது.[4] கொழும்பில் உள்ள ஜைன்ஸ்தான் திரையரங்கில், இது 150 நாட்களுக்கு மேல் ஓடியது.[23]

மரபு

[தொகு]

1984 ஆம் ஆண்டு ராமச்சந்திரன் உடல் நிலை பாதிக்கபட்டு நியூயார்க்கின் புரூக்ளின் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது, தமிழ்நாட்டில் உள்ள திரையரங்குகளில் திரைப்படங்களைத் திரையிடுவதற்கு முன் ஜானகி கண்ணீர் மல்க ​​"ஆண்டவனே உன்" பாடலுக்கு வாயசைக்கும் காட்சிகள் ஒளிபரப்பபட்டன.[24]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 1.2 "Oli Vilakku". The Indian Express: pp. 3. 20 September 1968. https://news.google.com/newspapers?nid=P9oYG7HA76QC&dat=19680920&printsec=frontpage&hl=en. 
  2. "’இறைவா உன் மாளிகையில் எத்தனையோ மணிவிளக்கு’ பாடல்; 52 ஆண்டுகளானாலும் சரித்திரமாகி மறையாத ‘ஒளிவிளக்கு’ பாடல்! - எம்ஜிஆரின் ‘ஒளிவிளக்கு’; வாலியின் பாட்டு செய்த பிரார்த்தனை". இந்து தமிழ் திசை. https://www.hindutamil.in/news/cinema/tamil-cinema/582169-oli-vilakku-52-years.html. பார்த்த நாள்: 23 May 2024. 
  3. "Oli Vilakku (Original Motion Picture Soundtrack)". ஆப்பிள் மியூசிக். Archived from the original on 8 June 2022. Retrieved 8 June 2022.
  4. 4.00 4.01 4.02 4.03 4.04 4.05 4.06 4.07 4.08 4.09 4.10 4.11 4.12 4.13 4.14 Randor Guy (5 March 2016). "Oli Vilakku (1968)". தி இந்து இம் மூலத்தில் இருந்து 5 June 2017 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20170605105335/http://www.thehindu.com/features/cinema/mgr-jayalalitha-and-sowcar-janaki-in-oli-vilakku-1968/article8317872.ece. 
  5. Kesavan, N. (14 May 2016). "100th film jinx grips the mighty sans 'Captain'". தி இந்து இம் மூலத்தில் இருந்து 28 June 2018 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20180628234546/https://www.thehindu.com/features/cinema/tamil-film-industry-100th-film-jinx-grips-the-mighty-sans-captain/article8595803.ece. 
  6. David 1983, ப. 71.
  7. சுவாமிநாதன், ஸ்ரீதர் (8 March 2016). "எம்ஜிஆர் 100 | 16 – அர்ப்பணிப்புடன் கூடிய உழைப்புக்கு சொந்தக்காரர்!" (in Tamil). Hindu Tamil Thisai இம் மூலத்தில் இருந்து 17 October 2019 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20191017123732/https://www.hindutamil.in/news/blogs/74484-100-16.html. 
  8. "ஒளி விளக்கு". Kalki. 22 September 1968. p. 2. Archived from the original on 25 July 2022. Retrieved 26 July 2022.
  9. Rangarajan, Malathi (8 October 2010). "A virtuoso recalls". தி இந்து இம் மூலத்தில் இருந்து 18 February 2019 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20190218130538/https://www.thehindu.com/todays-paper/tp-features/tp-fridayreview/A-virtuoso-recalls/article15772213.ece. 
  10. Chowdhary, Y. Sunita (6 December 2016). "First among equals". தி இந்து இம் மூலத்தில் இருந்து 7 December 2016 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20161207144528/http://www.thehindu.com/news/national/tamil-nadu/First-among-equals/article16767750.ece. 
  11. Mary, S. B. Vijaya (29 April 2021). "'Sowcar' Janaki: 'I'm an incurable romantic'". தி இந்து இம் மூலத்தில் இருந்து 2 May 2021 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20210502052749/https://www.thehindu.com/entertainment/movies/im-an-incurable-romantic/article34442602.ece. 
  12. Narasimham, M. L. (6 December 2016). "Jayalalithaa: The queen bee of politics". தி இந்து இம் மூலத்தில் இருந்து 7 December 2016 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20161207152420/http://www.thehindu.com/entertainment/movies/Jayalalithaa-The-queen-bee-of-politics/article16768040.ece. 
  13. Srivatsan, S. (18 May 2019). "'Sholay' to 'Darbar': This man is responsible for shining a light on four generations of actors". தி இந்து இம் மூலத்தில் இருந்து 27 May 2019 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20190527051016/https://www.thehindu.com/entertainment/movies/this-man-is-responsible-for-shining-a-light-on-four-generations-of-actors/article27171167.ece. 
  14. Sri Kantha, Sachi (January 21, 2014). "MGR Remembered – Part 14 | Carping critics". Ilankai Tamil Sangam. Archived from the original on 4 December 2022. Retrieved 2022-12-04.
  15. "Oli Vilakku (Original Motion Picture Soundtrack)". Apple Music. Archived from the original on 8 June 2022. Retrieved 8 June 2022.
  16. Kannan 2017, ப. 87–88.
  17. Charulatha Mani (28 September 2012). "Sivaranjani for pathos". தி இந்து இம் மூலத்தில் இருந்து 9 October 2014 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20141009133841/http://www.thehindu.com/features/friday-review/music/sivaranjani-for-pathos/article3945587.ece. 
  18. Srinivasan, Karthik (5 February 2019). "When A Portuguese Song Made Its Way into Phool Aur Patthar And Its Remake Starring Jayalalitha". Film Companion. Archived from the original on 5 February 2019. Retrieved 5 February 2019.
  19. "Oli Vilakku". The Indian Express: pp. 3. 8 September 1968. https://news.google.com/newspapers?nid=P9oYG7HA76QC&dat=19680908&printsec=frontpage&hl=en. 
  20. "Mediocrity". The Indian Express: pp. 3. 22 September 1968. https://news.google.com/newspapers?nid=P9oYG7HA76QC&dat=19680922&printsec=frontpage&hl=en. 
  21. "சினிமா விமர்சனம்: ஒளி விளக்கு". Ananda Vikatan. 6 October 1968. Archived from the original on 26 February 2019. Retrieved 26 February 2019.
  22. Kannan 2017, ப. 142.
  23. Sri Kantha, Sachi. "From Sachi's Files – Chapter 20 | Colombo Diary of Teenage Years (1965-1970)". Ilankai Tamil Sangam. Archived from the original on 4 December 2022. Retrieved 4 December 2022.
  24. A. R. Venkatachalapathy (12 May 2015). "Amma's apogee moment". தி இந்து இம் மூலத்தில் இருந்து 27 May 2019 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20190527051917/https://www.thehindu.com/opinion/op-ed/ar-venkatachalapathy-on-jayalalithaas-acquittal-ammas-apogee-moment/article7194521.ece. 

உசாத்துணை

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஒளி_விளக்கு&oldid=4363303" இலிருந்து மீள்விக்கப்பட்டது