உள்ளடக்கத்துக்குச் செல்

ஊருக்கு உழைப்பவன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஊருக்கு உழைப்பவன்
Oorukku Uzhaippavan
இயக்கம்எம். கிருஷ்ணன்
தயாரிப்புஎஸ். கிருஷ்ணமூர்த்தி
வீனஸ் பிக்சர்ஸ்
டி. கோவிந்தராஜ்
இசைஎம். எஸ். விஸ்வநாதன்
நடிப்புஎம். ஜி. ஆர்
வாணிஸ்ரீ
வெளியீடுநவம்பர் 11, 1976
நீளம்4539 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

ஊருக்கு உழைப்பவன் (Oorukku Uzhaippavan) என்பது 1976 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். இதை எம். கிருஷ்ணன் எழுதி இயக்கினார். வெளிவந்த இத்திரைப்படத்தில் எம். ஜி. ஆர், வாணிஸ்ரீ மற்றும் பலர் நடித்திருந்தனர். இது 1970 ஆம் ஆண்டு கன்னடத்தில் வெளியான பாலு பெளகித்து படத்தின் மறு ஆக்கம் ஆகும்.[1] இப்படம் 12 நவம்பர் 1976 இல் வெளியிடப்பட்டது.[2][3]

கதை

[தொகு]

இரகசிய உளவாளி செல்வம். சில காரணங்களினால் அவரைப் போன்ற தோற்றத்தில் இருக்கும் பணக்கார தொழிலதிபரான இராஜாவைப் போலவே நடிக்கிறார். இதனால் செல்வம் தன்வீட்டையும் இராஜாவின் வீட்டையும் கவனித்துக்கொள்ள வேண்டிய நிலைக்கு ஆளாகிறார். தன் சொந்த வாழ்க்கையை பணயம் வைத்து இராஜாவின் சிக்கல்களை செல்வம் எப்படி தீர்க்கிறார் என்பதே கதை.

நடிகர்கள்

[தொகு]

தயாரிப்பு

[தொகு]

ஊருக்கு உழைப்பவன் கர்நாடகத்தின் மைசூர், பெங்களூர் போன்ற இடங்களில் படமாக்கப்பட்டது.[4]

இசை

[தொகு]

இப்படத்திற்கு ம. சு. விசுவநாதன் இசையமைத்தார்.[5]

# பாடல்பாடகர்(கள்) நீளம்
1. "இதுதான் முதல் இராத்திரி"  கே. ஜே. யேசுதாஸ், வாணி ஜெயராம் 4:27
2. "இரவுப் பாடகன் ஒருவன் வந்தான்"  கே. ஜே. யேசுதாஸ் 2:13
3. "இட்ஸ் ஈசி டு ஃபூல் யூ"  எஸ். பி. பாலசுப்பிரமணியம், உஷா உதூப் 5:21
4. "இரவுப் பாடகன் ஒருவன்" (மறுமுறை)கே. ஜே. யேசுதாஸ் 2:13
5. "அழகெனும் ஓவியம் இங்கே"  கே. ஜே. யேசுதாஸ், பி. சுசீலா 3:02
6. "இரவுப் பாடகன் ஒருவன்" (மறுமுறை)கே. ஜே. யேசுதாஸ், வாணிஸ்ரீ (உரையாடல்) 2:13
7. "இரவுப் பாடகன் ஒருவன்" (இசைக்கருவி) — 2:13
8. "பிள்ளைத்தமிழ் பாடுகிறேன்"  கே. ஜே. யேசுதாஸ் 3:29

வரவேற்பு =

[தொகு]

கல்கியின் காந்தன் நடிகர்கள், பாடல்கள், ஒளிப்பதிவு ஆகியவற்றைப் பாராட்டினார்.[6]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Dr Rajkumar's 91st birth anniversary: 12 films of the actor that were released in 1970 and so complete 50 years this year". சினிமா எக்ஸ்பிரஸ். 24 April 2020. slide 10. பார்க்கப்பட்ட நாள் 6 April 2021.
  2. "எம்.ஜி.ஆர். நடித்த படங்களின் பட்டியல்". Ithayakkani. 2 April 2011. Archived from the original on 14 November 2018. பார்க்கப்பட்ட நாள் 6 April 2021.
  3. Sri Kantha, Sachi (27 December 2019). "MGR Remembered – Part 54 | An Overview of the Final 31 movies of 1970s". வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவை. Archived from the original on 31 October 2020. பார்க்கப்பட்ட நாள் 6 April 2021.
  4. சுவாமிநாதன், ஸ்ரீதர் (5 March 2016). "எம்ஜிஆர் 100 | 15 - நிர்வாகத்தில் சிறந்து விளங்கியவர்!" (in ta). இந்து தமிழ் (நாளிதழ்) இம் மூலத்தில் இருந்து 10 December 2021 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20211210083624/https://www.hindutamil.in/news/blogs/74553-100-15.html. 
  5. "Oorukku Uzhaippavan". JioSaavn. 31 December 1976. Archived from the original on 10 December 2021. பார்க்கப்பட்ட நாள் 6 April 2021.
  6. காந்தன் (28 November 1976). "ஊருக்கு உழைப்பவன்". Kalki. p. 71. Archived from the original on 28 July 2022. பார்க்கப்பட்ட நாள் 28 July 2022.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஊருக்கு_உழைப்பவன்&oldid=3958544" இலிருந்து மீள்விக்கப்பட்டது