குங்குமப்பூவும் கொஞ்சும் புறாவும்
குங்குமப்பூவும் கொஞ்சும் புறாவும் | |
---|---|
இயக்கம் | ராஜமோகன் |
தயாரிப்பு | எஸ். பி. பி. சரண் |
கதை | ராஜமோகன் |
இசை | யுவன் சங்கர் ராஜா |
நடிப்பு | ராமகிருஷ்ணன் தனன்யா தருண் சத்ரியா நாகம்மா |
ஒளிப்பதிவு | சித்தார்த் |
படத்தொகுப்பு | என். பி. ஸ்ரீகாந்த் பிரவீன் கே. எல் |
கலையகம் | கேப்பிட்டல் பிலிம் வொர்க்ஸ் |
வெளியீடு | ஏப்ரல் 24, 2009 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
குங்கமப்பூவும் கொஞ்சும் புறாவும் (Kunguma Poovum Konjum Puravum) 2009 இல் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். இதை அறிமுக இயக்குநர் ராஜ மோகன் இயக்கியுள்ளார். இவர் ஏ. வெங்கடேஷ் மற்றும் எஸ். டி. விஜய் மில்டன் போன்றோரிடம் உதவி இயக்குனராகப் பணியாற்றியுள்ளார். ராமகிருஷ்ணன் அறிமுக நாயகனாகவும் நடிகை தனன்யா நாயகியாவும் நடித்திருந்தனர். எஸ். பி. பி. சரண் தனது கேப்பிட்டல் பிலிம் வொர்க்ஸ் சார்பில் தயாரித்திருந்தார். இசை யுவன் சங்கர் ராஜா. ஏப்ரல் 24 இல் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.
கதைச்சுருக்கம்
[தொகு]துளசி (தனன்யா) தனது பாட்டியுடன் முட்டம் கிராமத்திற்கு வருகிறார். அங்குள்ள அரசு பள்ளியில் சேர்ந்து படிக்கிறாள். கொச்சன் இவளை கண்டவுடன் நேசிக்க ஆரம்பிக்கிறான். கொச்சனின் தாய் சந்திரா துளசியின் படிப்பிற்காக உதவுகிறார். இவர்கள் காதலிப்பதை அறிந்த சந்திரா துளசியை அவமானப்படுத்தி கிராமத்தை விட்டு வெளியேற்றுகிறார். துளசியை தூத்துகுடியில் உள்ள தர்மா என்ற போக்கிரிக்கு கட்டாயத் திருமணம் செய்து வைக்க ஏற்பாடு செய்கிறார்கள், ஆனால் திருமண நாளன்று தர்மனை காவல்துறையினர் ஒரு கொலைக் குற்றத்திற்காக கைது செய்கிறார்கள். துளசி மீண்டும் முட்டம் வருகிறாள். அங்கே கொச்சன் காதல் தோல்வி காரணமாக குடிக்கு அடிமையாகியுள்ளான். கொச்சன் துளசிக்கு வாழ்வளிக்க நினைக்கிறான். ஆனால் பிணையில் வெளிவந்த தர்மன் முட்டம் வருகிறான். பிறகு என்னவாயிற்று என்பது பல திருப்பங்களுடன் படம் செல்கிறது.
படக் குழு
[தொகு]- கதை, திரைக்கதை, இயக்கம்: ராஜமோகன்
- தயாரிப்பு: எஸ். பி. பி. சரண்
- ஒளிப்பதிவு: சித்தார்த்
- இசை: யுவன் சங்கர் ராஜா
- படத்தொகுப்பு: பிரவீண் கே. எல். & ஸ்ரீகாந்த் என் , பி.
- கலை இயக்குநர்: விதேஷ்
- நடனம்: அஜய்ராஜ் & சரவணராஜன்
- பாடல்கள்: வாலி (கவிஞர்), கங்கை அமரன்
- சண்டை: செல்வா
இசையமைப்பு
[தொகு]ஆறு பாடல்களை வாலி (கவிஞர்) மற்றும் கங்கை அமரன் எழுத [யுவன் சங்கர் ராஜா]]] இசையமைத்திருந்தார்[1] தந்தை எஸ். பி. பாலசுப்பிரமணியம் மற்றும் மகன் எஸ். பி. பி. சரண், ஆகியோர் இருவரும் தயாரித்திருந்தனர், இவர்கள் இருவரும் சேர்ந்து ஒரு பாடலை பாடியுள்ளானர்., இசையமைப்பு யுவன் சங்கர் ராஜா மற்றும் சகோதரன் வெங்கட் பிரபு இருவரும் மேற்கொண்டிருந்தனர்.[2]
ஒலித்தொகுப்பு
[தொகு]எண் | பாடல் | பாடியோர் | காலம் | எழுதியவர் | குறிப்பு |
---|---|---|---|---|---|
1 | முட்டத்துப் பக்கத்தில் | வெங்கட் பிரபு | 4:02 | கங்கை அமரன் | |
2 | கடலோரம் ஒரு ஊரு | யுவன் சங்கர் ராஜா | 5:33 | வாலி (கவிஞர்) | |
3 | சின்னஞ் சிறுசு | ஜாவத் அலி, பெலாஷிண்டே | 5:03 | வாலி (கவிஞர்) | |
4 | நா தர்மன்டா | எஸ். பி. பாலசுப்பிரமணியம் | 4:00 | கங்கை அமரன் | |
5 | ஒரு நிமிஷம் | வேல்முருகன் | 3:27 | கங்கை அமரன் | |
6 | கடலோரம் ஒரு ஊரு | எஸ். பி. பி. சரண் | 5:31 | வாலி (கவிஞர்) |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "'Kunguma Poovum Konchumpuraavum' audio released". indiaglitz.com. Archived from the original on 2009-01-27. பார்க்கப்பட்ட நாள் 2009-04-21.
- ↑ "Will KPKP turn out to be a trendsetter?". சிஃபி. பார்க்கப்பட்ட நாள் 2009-04-21.