ஜாவத் அலி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஜாவத் அலி
ஜாவத் அலி
ஜாவத் அலி இசைக் கச்சேரியின் போது 2017
பின்னணித் தகவல்கள்
இயற்பெயர்ஜாவத் உசைன்
பிறப்புபுது தில்லி, இந்தியா
இசை வடிவங்கள்பின்னணிப்பாடகர்
இசைத்துறையில்2000–தற்போது வரை
இணையதளம்JavedAli.in

ஜாவத் அலி (Javed Ali (இந்தி: जावेद अली, உருது: جاوید علی, பிறப்பு: ஜூலை 5, 1982) என்பவர் இந்தியப் பின்னணிப் பாடகர் ஆவார். இவர் 2000 ஆம் ஆண்டிலிருந்து இந்திப் பாடல்களைப் பாடி வருகிறார். நகாப் எனும் திரைப்படத்தில் ஏக் தின் தெரி எனும் பாடலைப் பாடியதன் மூலம் புகழ்பெற்ற பாடகரானார்.[1] இந்தி, வங்காள மொழி, ஒடியா மொழி, கன்னடம், தமிழ், தெலுங்கு, மராத்திய மொழி, அசாமிய மொழி என இவர் பல மொழிகளில் பின்னணிப் பாடல் பாடியுள்ளார். இவர் பல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்கு (பாடல் நிகழ்ச்சி) நடுவராக இருந்துள்ளார்.[2], ஜீ தமிழ் தொலைக்காட்சியில் 2011 ஆம் ஆண்டு நடைபெற்ற ச ரி க ம ப மற்றும் கலர்ஸ் தொலைக்காட்சியின் இசை தொடர்பான நிகழ்ச்சிகளில் நடுவராக இருந்துள்ளார். 2012 ஆம் ஆண்டு ஜீ தமிழ் தொலைக்காட்சியில் வெளியான ச ரி க ம ப எனும் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.

ஆரம்பகால வாழ்க்கை[தொகு]

ஜாவத் அலி (இயற்பெயர் : ஜாவத் உசைன் ) உஸ்தாத் ஹமீது உசைன் என்பவருக்கு மகனாக புது தில்லியில் பிறந்தார். தனது இளம்வயது முதலே கவ்வாலி பாடல்களைப் பாடுவதில் வல்லவரான தனது தந்தையுடன் இணைந்து பாடினார். தனது தந்தை தன்னைக் கீர்த்தனைகள் பாடுமாறு கூறிதாக ஒரு பேட்டியின் போது கூறியுள்ளார். கசல் (இசை) புகழ் குலாம் அலி (பாடகர்) ஜாவத் அலியின் குரலைக் கேட்டு இவன் புகழ் பெற்ற பின்னணிப் பாடகராக வருவான் எனக் கூறியுள்ளார். பின்பு தனது கச்சேரிகளிலும் பாடுவதற்கு வாய்ப்பு கொடுத்தார். அதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக ஜாவத் உசைன் என்ற தனது பெயரை ஜாவத் அலி என மாற்றிக் கொண்டார்.[3]

தமிழ் பாடல்கள்[தொகு]

2009[தொகு]

யுவன் சங்கர் ராஜா இசையில் வாமணன் திரைபடத்தில் ஏதோ செய்கிறாய் என்ற பாடல், குங்கும பூவும் கொஞ்சும் புறாவும் படத்தில் (சின்னஞ் சிறுசுக) பாடல்,யுவன் சங்கர் ராஜா இசையில் சர்வம் ( சிறகுகள்) என்ற மூன்று பாடல்களைப் பாடினார்.

2010[தொகு]

நான் மகான் அல்ல (2010 திரைப்படம்) ஒரு மாலை நேரம் ,எந்திரன் (திரைப்படம்) (கிளி மாஞ்சாரோ என்ற பாடலை ஏ. ஆர். ரகுமான் இசையில் பாடினார்.

2011[தொகு]

யுவன் சங்கர் ராஜா இசையில் ராஜபாட்டை( பனியே பனிப் பூவே) தமன் (இசையமைப்பாளர்) இசையில் தடையறத் தாக்க(காலங்கள்) , ஹாரிஸ் ஜயராஜ் இசையில் நண்பன் (2012 திரைப்படம்)(இருக்கானா) , டி. இமான் இசையில் மனம் கொத்திப் பறவை (திரைப்படம்) (போ போ)

2012[தொகு]

ஹாரிஸ் ஜயராஜ் இசையில் மாற்றான் (திரைப்படம்)(கால் முளைத்த பூவே) மற்றும் துப்பாக்கி (திரைப்படம்)(அலைக்க லைக்கா)

யுவன் சங்கர் ராஜா இசையில் ஆதலால் காதல் செய்வீர் (தப்புத் தண்டா) மேலும் தேவி ஸ்ரீ பிரசாத்தின் இசையில் அலெக்ஸ் பாண்டியன் (திரைப்படம்) (ரைய்யா ரைய்யா)

2013[தொகு]

2013 ஆம் ஆண்டில் மீண்டும் ஏ. ஆர். ரகுமான்அவர்களின் இசையில் மரியான்- (சோனாபரியா) மற்றும் ராஞ்சனா (ஒளியாக வந்தாய்)

தேவி ஸ்ரீ பிரசாத்இசையில் சிங்கம் 2 (திரைப்படம்) (கண்ணுக்குள்ளே) யுவன் சங்கர் ராஜாஇசையில் ஆல் இன் ஆல் அழகு ராஜா (ஒரே

ஒரு)

2014[தொகு]

ஜி. வி. பிரகாஷ் குமார் இசையில் நிமிர்ந்து நில் (2014 திரைப்படம்)(காதல் நேர்கையில்) சிவமணி இசையில் அரிமா நம்பி (இதயம் என் இதயம்)

2017[தொகு]

ஹாரிஸ் ஜயராஜ் இசையில் சி3 (திரைப்படம்) (ஒ சோனே சோனே) கே பி என்ற அறிமுக இசையமைப்பாளர் இசையில் இந்திரசித்து (விடிகிற வானில் கொடிகளை) எனும் பாடலைப் பாடியுள்ளார்.

இந்திப் பாடல்கள்[தொகு]

  • 2000- சோரி சோரி (ஆன்க் பேடி நம்பர் 1)
  • 2001- டிங் டாங் டோ
  • 2003- அப் கார் ஆஜா
  • 2005- கஜ்ரா ரே
  • 2005-சஜ்னா அங்கனா
  • 2006- ரேஜா ரே
  • 2006- மெரி தூப்
  • 2007- நகடா நகடா
  • 2007- ஏக் தின் தெரி
  • 2007- தரா ரூ
  • 2008- தூ முஷ்குரா
  • 2017 - சான்சன் கே

தொலைக்காட்சித் துறை[தொகு]

  • ஜீ தமிழ் தொலைக்காட்சியில் 2011 ஆம் ஆண்டில் ச ரி க ம ப எனும் பாடல் போட்டி.[4][5]
  • 2012 ஆம் ஆண்டில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ச ரி க ம ப நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.[6][7]
  • கலர்ஸ் தொலைக்காட்சி பாடல் போட்டி 2015.[8]
  • 2017 ஆம் ஆண்டில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ச ரி க ம ப நிகழ்ச்சியின் நடுவராக இருந்தார்.[9]

விருதுகள்[தொகு]

வென்ற விருதுகள்[தொகு]

  • ஐ ஐ எஃப் ஏ வின் 2009 ஆம் ஆண்டிற்கான சிறந்த ஆண் பின்னணிக்குரலுக்கான விருதை ஜோதா அக்பர் படத்திற்காகப் பெற்றார்.[10]
  • 19 ஆவது திரை விருதுகள் 2012 (இசக்சாதே)
  • மிர்ச்சி (பண்பலை) விருதுகள் 2012
  • உத்தரப் பிரதேசம் மாநில அரசு உயரிய விருதான யாஷ் பார்தி சம்மன் விருதை வழங்கியது.
  • இந்தியா தொலைக்காட்சி யுவா விருது 2015.

பரிந்துரைக்கப்பட்டவை[தொகு]

  • 2010 ஆம் ஆண்டின் பிலிம்பேர் விருதுகளில் சிறந்த ஆண் பின்னணிப் பாடகர்களுக்கான தேர்வில் அர்சியான் எனும் பாடலுக்காகப் பரிந்துரைக்கப்பட்டது.
  • 2016 ஆம் ஆண்டின் பிலிம்பேர் விருதுகளில் சிறந்த ஆண் பின்னணிப் பாடகர்களுக்கான தேர்வில் லவ் யூ அலியா எனும் திரைப்படத்திற்காகப் பரிந்துரைக்கப்பட்டது.[11]
  • ஜீ சினி விருது 2013 ஆம் ஆண்டின் சிறந்த ஆண் பின்னணிப் பாடகர்களுக்கான தேர்வில் இசக்சாதே எனும் பாடலுக்காகப் பரிந்துரைக்கப்பட்டது.

மராத்தியப் பாடல்கள்[தொகு]

2010 - காதி காதி

2011- ஜட்லே நாடே

2013- மௌலா மௌலா

2014- சரா சரா

வெளியிணைப்புகள்[தொகு]

சான்றுகள்[தொகு]

  1. "Javed Ali: Sufi music has the power to overcome social tensions". The Times of India. 2 June 2016. http://timesofindia.indiatimes.com/entertainment/hindi/music/news/Javed-Ali-Sufi-music-has-the-power-to-overcome-social-tensions/articleshow/52549770.cms. 
  2. "Javed Ali sings for a TV show". The Times of India. 19 November 2015. http://timesofindia.indiatimes.com/tv/news/hindi/Javed-Ali-sings-for-a-TV-show/articleshow/49846218.cms. 
  3. "Javed Ali: The voice of Amitabh, Hrithik". rediff.com.
  4. "Sa Re Ga Ma Pa 2012’ announces its anchor Javed Ali". The Times of India. 17 October 2012. http://timesofindia.indiatimes.com/tv/news/hindi/Sa-Re-Ga-Ma-Pa-2012-announces-its-anchor-Javed-Ali/articleshow/16849196.cms. 
  5. "Kids today are very talented: Javed Ali". The Times of India. 3 July 2011. http://timesofindia.indiatimes.com/entertainment/hindi/music/news/Kids-today-are-very-talented-Javed-Ali/articleshow/9077219.cms. 
  6. "Toast to the host". The Hindu. 28 October 2012. http://www.thehindu.com/todays-paper/tp-features/tp-cinemaplus/toast-to-the-host/article4039293.ece. 
  7. "Javed Ali to host SaReGaMaPa 2012". radioandmusic.com. 15 October 2012. http://www.radioandmusic.com/content/editorial/news/javed-ali-host-saregamapa-2012. 
  8. "Great Music Gurukul Mentors". colorsbangla.com. Archived from the original on 2017-12-31. பார்க்கப்பட்ட நாள் 2018-03-07.
  9. "Contest - SA RE GA MA PA Lil Champs". Zee TV Sa Re Ga Ma Pa L'il Champs (in ஆங்கிலம்). Archived from the original on 2017-08-01. பார்க்கப்பட்ட நாள் 2017-08-01.
  10. "Javed Ali, Nooran sisters to pay tribute to AR Rahman at IIFA 2015". radioandmusic.com. 18 May 2015. http://www.radioandmusic.com/entertainment/editorial/news/javed-ali-nooran-sisters-pay-tribute-ar-rahman-iifa-2015-150518. 
  11. "Dhanush and Javed Ali fight it out". The Times of India. 16 June 2016. http://timesofindia.indiatimes.com/entertainment/kannada/movies/news/Dhanush-and-Javed-Ali-fight-it-out/articleshow/52776683.cms. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜாவத்_அலி&oldid=3573046" இலிருந்து மீள்விக்கப்பட்டது