பாளையத்து அம்மன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பாளையத்து அம்மன் 2000 ஆம் ஆண்டில் வெளிவந்த தமிழ் திரைப்படம் ஆகும். இந்தப் படத்தை இயக்குநர் இராம நாராயணன், இந்து சமயத்தின் கடவுள்களில் ஒன்றான அம்மனின் கதாப்பாத்திரத்தை முதன்மையாகக் கொண்டு இயக்கியுள்ளார். இந்தப் படத்தில் பாளையத்து அம்மன் தெய்வமாக நடிகை மீனா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த படத்தின் மற்ற கதாபாத்திரங்களில் ராம்கி, திவ்யா உன்னி சரண் ராஜ் மற்றும் செந்தில் ஆகியோர் நடித்திருந்தனர்.[1]

தயாரிப்பு[தொகு]

படத்தின் இயக்குநர் இராம நாராயணன் ஆவார். பாளையத்து அம்மன் திரைப்படம் சிறி தேனான்டாள் தயாரிப்பு நிறுவனம் தயாரித்தது. இப்படத்தின் தயாரிப்பாளர் என். ராதா ஆவார். இசை அமைப்பாளர் எஸ். ஏ. ராஜ் குமார் அவர்கள் இசை அமைத்துள்ளார். என். கே. விஸ்வநாதன் இப்படத்தின் ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படத்தின் படத்தொகுப்பாளர் ராஜ் கீர்த்தி ஆவார். பாளையத்து அம்மன் திரைப்படம் 2000 ஆம் ஆண்டு 28 அக்டோபரில் வெளிவந்தது. முதலில் இயக்குநர் இப்படத்திற்கு தேவதா என்று பெயரிட்டு இருந்ததாகவும் பின்னரே இப்படத்திற்குப் பெயர் மாற்றம் செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது.[2]

கதை[தொகு]

ஒரு குரு குலத்தில் ஒரு துறவி தனது மாணவர்களுக்குத் தீமையையும் தீய சக்தியயையும் அழிக்க கடவுளான பாளையத்து அம்மன் மானிட உருவத்தில் பிறப்பார் என்று அறிவிப்பதன் மூலம் இந்தப் படம் தொடங்குகிறது. அசுரேஸ்வரன் (சரண் ராஜ்) தீமையின் பிரதிநிதி, இதன் நோக்கம் பூமியில் பிசாசின் ஆட்சியை நிறுவுவது ஆகும். அசுரேஸ்வரன் என்கிற அந்த சாத்தான் துறவியைக் கொல்கிறான், ஆனால் பாளையத்து அம்மனின் பிறப்பு நிறுத்தப்படவில்லை. அவர் ராம்கி மற்றும் திவ்யா உன்னிக்கு குழந்தையாகப் பிறந்து வளர்கிறார். திவ்யா உன்னி குழந்தையை அம்மனின் கோவிலுக்கு அழைத்துச் செல்லும் போது தவறுதலாக உண்டியலில் விழுகிறது. உண்டியலில் விழுந்த பொருட்கள் அனைத்தும் அம்மனுக்கு சொந்தம் எனப் பலர் அறிவுறுத்தியும் ராம்கியும், திவ்யாவும் குழந்தையை எடுத்துச் செல்கின்றனர். எனினும் பாளையத்து அம்மன் அக்குழந்தையைப் பின் தொடர்ந்து வருகிறார்.

குழந்தை சாத்தானிடமிருந்து எல்லா வகையான தீங்குகளையும் பெறுகிறது, ஆனால் பாளையத்து அம்மன் (மீனா) ஒவ்வொரு முறையும் அதைக் காப்பாற்றுகிறார். அதே சமயம், பாளையத்து அம்மன் தனது குழந்தையை எடுத்துச் செல்ல விரும்புவதாக திவ்யா உன்னி கருதுகிறார், எனவே அதை அம்மனிடம் இருந்து காப்பாற்ற முயற்சிக்கிறாள். அம்மன் குழந்தையின் டீச்சராக வந்து செந்தில் வீட்டில் குடி புகுகிறார். படத்தின் இறுதியில் குழந்தையை சாத்தான் அசுரேஸ்வரன் கடத்திக் கொல்ல முயற்சி செய்கிறான். ஆனால் அம்மன் சாத்தானைக் கொன்று குழந்தையைப் பெற்றோரிடம் திருப்பித் தருகிறார்.

இசை[தொகு]

பாளையத்து அம்மன் திரைப் படத்திற்கு இசை அமைத்தவர் எஸ். ஏ. ராஜ் குமார் ஆவார். இந்தப் படத்தின் பாடல்களை வாலி, காளிதாசன் மற்றும் ராம நாராயணன் ஆகியோர் எழுதி உள்ளார்கள்.[3][4]

பாடல்கள்[தொகு]

வேப்பிலை வேப்பிலை - சுஜாதா மோகன்

ஆடி வந்தேன் - கே.எஸ். சித்திரா

பால் நிலா - ஸ்வர்ணலதா, அனுராதா ஸ்ரீராம்

பாளையத்து அம்மா நீ பாச விளக்கு - கே.எஸ். சித்திரா

அந்தபுரம் நந்தவனம் - மனோ, ஸ்வர்ணலதா

அம்மன் நடனம் 1 - இசை கருவி

அம்மன் நடனம் 2 - இசை கருவி

அம்மன் நடனம் 3 - இசை கருவி

மேற்கோள்கள்[தொகு]

  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2017-04-25. பார்க்கப்பட்ட நாள் 2019-10-19.
  2. https://web.archive.org/web/20010129105200/http://tamilmovies.com/cgi-bin/news/viewnews.cgi?id=970152825
  3. https://www.raaga.com/tamil/movie/Palayathu-Amman-songs-T0004535
  4. https://gaana.com/album/palayathu-amman
"https://ta.wikipedia.org/w/index.php?title=பாளையத்து_அம்மன்&oldid=3711325" இலிருந்து மீள்விக்கப்பட்டது