தியான் சந்த்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
தியான் சந்த்
Dhyan Chand closeup.jpg
பிறப்பு தியான் சந்த் சிங்
29 ஆகத்து, 1905
அலகாபாத், ஆக்ரா மற்றும் ஔத் ஐக்கிய மாகாணம், பிரித்தானிய இந்தியா
இறப்பு 3 திசம்பர் 1979(1979-12-03) (அகவை 74)
தில்லி
கல்லறை ஜான்சி ஹீரோஸ் மைதானம், அலகாபாத்
தேசியம் இந்தியர்
அறியப்படுவது வளைதடிப் பந்தாட்டம்
உயரம் 5'3"
பெற்றோர் சாமேசுவர் தத் சிங்
வென்ற பதக்கங்கள்
ஆடவர் ஒலிம்பிக் வளைதடிப் பந்தாட்டம்
தங்கம் 1928 ஆம்ஸ்டர்டம் அணி விளையாட்டு
தங்கம் 1932 லாஸ் ஏஞ்சலஸ் அணி விளையாட்டு
தங்கம் 1936 பெர்லின் அணி விளையாட்டு

தியான் சந்த் (Dhyan Chand, இந்தி: ध्यान चंद); பிறப்பு: அலகாபாத்தில் ஆகத்து 29, 1905 – இறப்பு:திசம்பர் 3, 1979), எக்காலத்தும் சிறந்த வளைதடிப்பந்தாட்ட விளையாட்டுக்காரராக கருதப்படும்[1] ஓர் இந்திய வளைதடிப் பந்தாட்ட விளையாட்டு வீரர். 1928 ஆம் ஆண்டு ஆம்ஸ்டர்டமிலும் 1932ஆம் ஆண்டு லாஸ் ஏஞ்சலசிலும் 1936ஆம் ஆண்டு பெர்லினிலும் நடைபெற்ற ஒலிம்பிக் விளையாட்டுக்களில் தங்கப் பதக்கம் பெற்ற இந்திய அணியில் பங்கேற்றிருந்தார். பெர்லின் ஒலிம்பிக்சில் அணித்தலைவராகவும் இருந்தார்.


தெரியாது

வாங்கவில்லை

பாரத் ரத்னா[தொகு]

இந்தியாவின் உயரிய குடியுரிமை விருதான பாரத் ரத்னா 2014 வரை விளையாட்டுவீரர்களுக்கு கொடுக்கப்படவில்லை. உள்துறை அமைச்சு விதிகளை மாற்றியமைத்து விளையாட்டு வீரர்களுக்கு பாரத் ரத்னா வழங்க முடிவு செய்யுமானால் முதல் விருது தியான் சந்த்திற்கு வழங்கப்பட வேண்டும் என்று கோரிக்கை எழுந்தது[2]. இதனிடையே மத்திய பிரதேச அரசு அவர் நினைவாக அருங்காட்சியகம் ஒன்று திறக்க முடிவு செய்துள்ளது.[3]

பாரத ரத்னா விதிமுறைகள் தளர்த்தப்பட்டு ’பாரத ரத்னா’ விருது மட்டையடி விளையாட்டு வீரர் சச்சின் டெண்டுல்கருக்கு வழங்கப்பட்டது. தமது பெயரில் விருது வழங்கப்படும் தியான் சந்திற்கு ’பாரத ரத்னா’ விருது வழங்கப்படாதது பாரத ரத்னா விருதின் தேர்வு முறை குறித்த விமர்சனங்களை ஏற்படுத்தியது.[4] ok by boopathy

மேலும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Dhyan Chand (Indian athlete)". Encyclopædia Britannica.
  2. Dhyan Chand deserves Bharat Ratna: Rajpal ஐபிஎன்லைவ் இணையத்தளம், பார்க்கப்பட்ட நாள்:சனவரி 23, 2012
  3. Madhya Pradesh to set up museum after Dhyan Chand டைம்ஸ் ஆஃப் இந்தியா, பார்க்கப்பட்ட நாள்:சனவரி 24, 2012
  4. தினமணி;2-12-2013; 'விருதுகள், பட்டங்கள் அல்ல' கட்டுரை;

வெளியிணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=தியான்_சந்த்&oldid=2414408" இருந்து மீள்விக்கப்பட்டது