பாரத ரத்னா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(பாரத் ரத்னா இலிருந்து வழிமாற்றப்பட்டது)
Jump to navigation Jump to search
இந்திய மாமணி விருது
Bharat Ratna.jpg
விருது குறித்தத் தகவல்
வகை குடியியல் விருது
பகுப்பு தேசிய விருது
நிறுவியது 1954
கடைசியாக வழங்கப்பட்டது 2015
மொத்தம் வழங்கப்பட்டவை 45
வழங்கப்பட்டது இந்திய அரசு
விவரம் பாரத ரத்னா பதக்கம்: அரச மர இலையில் சூரியனின் உருவமும் "பாரத ரத்னா" என்ற சொல் தேவநாகரி எழுத்துக்களிலும் பொறிக்கப்பட்டிருக்கும்
நாடா Bharat Ratna Ribbon.svg
முதல் வெற்றியாளர்(கள்)
கடைசி வெற்றியாளர்(கள்)
விருது தரவரிசை
ஏதுமில்லை ← இந்திய மாமணி விருதுபத்ம விபூசண்

இந்திய மாமணி அல்லது பாரத ரத்னா இந்தியாவில் குடிமக்களுக்கு வழங்கப்படும் மிக உயர்ந்த விருதாகும். மிகச்சிறந்த தேசிய சேவை ஆற்றியவர்களை பாராட்டி பாரத ரத்னா விருது வழங்கப்படுகிறது. இச்சேவை கலை, அறிவியல், இலக்கியம் கலாச்சாரம், விளையாட்டு(2013) மற்றும் பொதுச்சேவை ஆகிய துறைகளை உள்ளடக்கி இருக்கிறது. எனினும் பிற துறைகளில் உள்ளவர்களும் இவ்விருதை பெரும் வகையில் நவம்பர், 2011ல் விதிகளில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.[1] இவ்விருது பெற்றவர்களுக்கு சிறப்பு பட்டப்பெயர்கள் எதுவும் வழங்கப்படுவது இல்லையெனினும் இந்தியாவின் முன்னுரிமை வரிசை பட்டியலில் அவர்களுக்கு இடம் உண்டு. பாரத ரத்னா என்பது இந்தியாவின் ரத்தினம் எனப் பொருள் தரும்.

இவ்விருதுக்கான முதல் வரையறையில் 35 மி.மீ விட்டமுடைய வட்ட வடிவான தங்கப்பதக்கத்தில் சூரியச் சின்னமும் பாரத ரத்னா என்று இந்தியில் பொறிக்கப்பட்ட எழுத்துக்களும் அதன் கீழ் மலர் வளைய அலங்காரமும் இருக்க வேண்டும் என்றும் பதக்கத்தின் பின் பக்கத்தில் அரசு முத்திரையும் தேசிய வாசகமும் (motto) இருக்க வேண்டும் என்றும் குறிப்பிடப்படுள்ளது. இப்பதக்கத்தை வெள்ளை ரிப்பனில் இணைத்து கழுத்தில் அணிந்து கொள்ள வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. எனினும் இப்படி ஒரு வடிவமைப்பில் பதக்கம் எதுவும் தயாரிக்கப்பட்டதாக தெரியவில்லை. அதற்கடுத்த ஆண்டு பதக்கத்தின் வடிவமைப்பு மாற்றப்பட்டது.

1954 ஆண்டு சட்டப்படி இவ்விருதை அமரர்களுக்கு வழங்க இயலாது. மகாத்மா காந்திக்கு இவ்விருது வழங்கப்படாததற்கு இது ஒரு காரணமாக இருக்கலாம். எனினும் 1955ஆம் ஆண்டு சட்டப்படி அமரர்களுக்கும் இவ்விருதை வழங்க வழிவகை செய்யப்பட்டது. அதன் பின் பத்து பேர்களுக்கு அவர்களின் மறைவிற்கு பின் இவ்விருது வழங்கப்பட்டுள்ளது. இவ்விருது இந்தியர்களுக்கு மட்டும் தான் வழங்கப்பட வேண்டும் என வரையறுக்கப்படாவிட்டாலும் அவ்வாறே பெரும்பாலும் வழங்கப்பட்டு வருகிறது. வெளிநாட்டில் பிறந்து இந்திய குடிமகள் ஆன அன்னை தெரசாவுக்கு(1980) இவ்விருது வழங்கப்பட்டது. இவரைத்தவிர இரு இந்தியர்கள் அல்லாதவர்களான கான் அப்துல் கப்பார் கானுக்கும் (1987) மற்றும் நெல்சன் மண்டேலாவுக்கும் (1990) இவ்விருது வழங்கப்பட்டுள்ளது. 1992ல் சுபாஷ் சந்திர போசின் மறைவுக்கு பின் அவருக்கு வழங்கப்பட்ட இவ்விருது சட்டச் சிக்கல்கள் காரணமாக திரும்பப் பெறப்பட்டது.

விருது பயன்பாட்டு விதிகள்[தொகு]

 • விதி 18 (1)-ன்படி விருது பெற்றோர் தங்களின் பெயருக்கு முன்போ, பின்போ பாரத ரத்னா அடைமொழியைப் பயன்படுத்தக் கூடாது.
 • அவசியம் கருதினால் “பாரத ரத்னா விருதைப் பெற்றவர்” என்ற சொற்றொடரைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.[2][3]

விருது பெற்றோர் பட்டியல்[தொகு]

வண்ணங்களுக்கான விளக்கம்
   # வெளிநாட்டில் பிறந்து இந்திய குடிமகன்/குடிமகள் ஆனவர்
   double-dagger இந்தியர் அல்லாதவர்
   dagger மறைவுக்குப் பின்
பாரத ரத்னா விருது பெற்றோர் பட்டியல்[4][5]
ஆண்டு படம் பெயர் குறிப்பு மே.கோ.
1954 C Rajagopalachari 1944.jpg சி. ராஜகோபாலாச்சாரி இந்திய விடுதலைப் போராட்ட வீரர், விடுதலைக்குப் பின்னர் இந்தியாவின் முதல் மற்றும் கடைசி தலைமை ஆளுநர் [6]
Sir CV Raman.JPG சி. வி. இராமன் இயற்பியலுக்கான நோபல் பரிசு (1930) பெற்றவர் [7][8]
Photograph of Sarvepalli Radhakrishnan presented to First Lady Jacqueline Kennedy in 1962.jpg சர்வபள்ளி இராதாகிருஷ்ணன் தத்துவஞானியும், விடுதலை இந்தியாவின் முதல் குடியரசுத் துணைத்தலைவர் மற்றும் இரண்டாவது குடியரசுத் தலைவர் [9][10][11]
1955 Bhagwan Das 1969 stamp of India.jpg பகவான் தாஸ் இறை மெய்யியலாளர் மற்றும் அரசியல்வாதி [12]
SirMV.png விசுவேசுவரய்யா பொறியாளர், மைசூர் திவான் (1912–1918) [13]
Bundesarchiv Bild 183-61849-0001, Indien, Otto Grotewohl bei Ministerpräsident Nehru cropped.jpg ஜவகர்லால் நேரு இந்தியாவின் முதல் பிரதமர் [14][15]
1957 Pandit Govind Ballabh Pant.jpg கோவிந்த் வல்லப் பந்த் இந்திய விடுதலைப் போராட்ட வீரர், உத்தரப் பிரதேச மாநிலத்தின் முதல் முதலமைச்சர் (1950 - 1954) [16][17]
1958 Dr Dhondo Keshav Karve Cropped.png தோண்டோ கேசவ் கார்வே சமூக சீர்திருத்தவாதி [18]
1961 Dr. Bidhan Chandra Roy in 1943.jpg பிதான் சந்திர ராய் மருத்துவர், விடுதலை இயக்க போராளி, மேற்கு வங்காள மாநிலத்தின் இரண்டாவது முதலமைச்சர் (1948–62) [19][20]
Purushottam Das Tandon 1982 stamp of India.jpg புருசோத்தம் தாசு தாண்டன் இந்திய விடுதலைப் போராட்ட வீரர் [21]
1962 Food Minister Rajendra Prasad during a radio broadcast in Dec 1947 cropped.jpg இராஜேந்திரப் பிரசாத் இந்திய விடுதலைப் போராட்ட வீரர், இந்தியாவின் முதல் குடியரசுத் தலைவர் (1950–62) [10]
1963 DR. ZAKIR HUSAIN - PICTORIAL BIOGRAPHY 0005.jpg சாகீர் உசேன் இந்திய விடுதலைப் போராட்ட வீரர், இந்தியாவின் இரண்டாவது குடியரசுத் துணைத் தலைவர் (1962–67), இந்தியாவின் மூன்றாவது குடியரசுத் தலைவர் (1967–69) [10][11]
PV Kane.jpg – பாண்டுரங்க வாமன் காணே இந்தியவியலாளர், சமசுகிருத அறிஞர் [22]
1966 1736 Lal Bahadur Shastri cropped.jpg லால் பகதூர் சாஸ்திரி dagger இந்திய விடுதலைப் போராட்ட வீரர், இந்தியாவின் மூன்றாவது பிரதமர் (1964–66) [15]
1971 Indira Gandhi in 1967.jpg இந்திரா காந்தி முன்னாள் இந்தியப் பிரதமர் (1966–77, 1980–84) [15]
1975 VV Giri 1974 stamp of India.jpg வி. வி. கிரி தொழிற்சங்கவாதி, இந்தியாவின் முதல் தற்காலிக குடியரசுத் தலைவர், இந்தியாவின் நான்காவது குடியரசுத் தலைவர் (1969–74) [10]
1976 K Kamaraj 1976 stamp of India.jpg காமராசர் dagger இந்திய விடுதலைப் போராட்ட வீரர், தமிழகத்தின் முதலமைச்சர் (1954–57, 1957–62, 1962–63) [23]
1980 MotherTeresa 090.jpg அன்னை தெரேசா # உரோமன் கத்தோலிக்க அருட்சகோதரி, பிறர் அன்பின் பணியாளர் என்ற கத்தோலிக்க துறவற சபையினை நிறுவினார், அமைதிக்கான நோபல் பரிசு (1979) பெற்றவர் [24]
1983 Gandhi and Vinoba.jpg வினோபா பாவே dagger இந்திய அறப்போராளி, மனித உரிமைகள் ஆதரவாளர், ரமோன் மக்சேசே விருது (1958) பெற்றவர் [25]
1987 Khan Abdul Ghaffar Khan.jpg கான் அப்துல் கப்பார் கான் double-dagger விடுதலைப் போராட்ட வீரர் [26]
1988 MG Ramachandran 2017 stamp of India.jpg எம். ஜி. இராமச்சந்திரன் dagger தமிழ்த் திரைப்பட நடிகர், தமிழகத்தின் முதலமைச்சர் (1977–80, 1980–84, 1985–87) [23]
1990 Young Ambedkar.gif அம்பேத்கர் dagger இந்திய அரசியலமைப்புச் சாசனத்தை வரைவதற்கான குழுவின் தலைவர், இந்தியாவின் முதல் சட்ட அமைச்சர், சமூக சீர்திருத்தவாதி [27]
Nelson Mandela-2008 (edit).jpg நெல்சன் மண்டேலா double-dagger தென்னாப்பிரிக்காவில் நிறவெறிக்கு எதிராகப் போராடியவர், தென்னாப்பிரிக்காவின் மக்களாட்சி முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் குடியரசுத் தலைவர், அமைதிக்கான நோபல் பரிசு (1993) பெற்றவர் [28]
1991 Rajiv Gandhi (cropped).jpg ராஜீவ் காந்தி dagger இந்தியாவின் ஒன்பதாவது பிரதமர் (1984–89) [15]
Sardar patel (cropped).jpg வல்லபாய் பட்டேல் dagger இந்திய விடுதலைப் போராட்ட வீரர், இந்தியாவின் முதல் துணை பிரதமர் (1947–50) மற்றும் உள்துறை அமைச்சராகவும் (1948 - 1950) [29]
Morarji Desai (portrait).png மொரார்ஜி தேசாய் இந்திய விடுதலைப் போராட்ட வீரர், இந்தியாவின் ஆறாவது பிரதமர் (1977–79) [15]
1992 Maulana Abul Kalam Azad.jpg அபுல் கலாம் ஆசாத் dagger இந்திய விடுதலைப் போராட்ட வீரர் [30]
J.R.D. Tata (1955).jpg ஜே. ஆர். டி. டாட்டா இந்தியாவின் முதன்மையான தொழிலதிபர்களுள் ஒருவர், இந்திய வானூர்திப் போக்குவரத்தின் முன்னோடி [22]
SatyajitRay.jpg சத்யஜித் ராய் திரைப்பட மேதை, ரமோன் மக்சேசே விருது (1967) பெற்றவர் [31]
1997 Gulzarilal Nanda 1999 stamp of India.jpg குல்சாரிலால் நந்தா இந்திய விடுதலைப் போராட்ட வீரர், பொருளாதார அறிஞர், இந்தியாவின் இடைக்காலப் பிரதமராக இரண்டு முறை பதவிவகித்தவர் [15]
Aruna Asaf Ali 1998 stamp of India.jpg அருணா ஆசஃப் அலி dagger இந்திய விடுதலை இயக்கத் தன்னார்வலர் [22]
Apj abdul kalam.JPG ஏ. பி. ஜே. அப்துல் கலாம் இந்திய அறிவியலாளர், இந்தியாவின் பதினோறாவது குடியரசுத் தலைவர் (2002–07) [10]
1998 Ms subbulakshmi 140x190.jpg எம். எஸ். சுப்புலட்சுமி கருநாடக இசைப் பாடகி, ரமோன் மக்சேசே விருது (1974) பெற்றவர் [32]
Chidambaram Subramaniam.jpg சி. சுப்பிரமணியம் இந்தியாவின் உணவு மற்றும் விவசாய அமைச்சர் (1964–66), இந்தியாவின் உணவு தன்னிறைவுக்கு வித்திட்டவராக அறியப்படுபவர் [33]
1999 JayaprakashNarayanLakshminarayanLal.jpg ஜெயபிரகாஷ் நாராயண் dagger இந்திய விடுதலைப் போராட்ட வீரர், சமூகப் பணியாளர், ரமோன் மக்சேசே விருது (1965) பெற்றவர் [34]
Ravi Shankar 2009 crop.jpg ரவி சங்கர் இந்துஸ்தானி சித்தார் இசைக்கலைஞர் [35]
Amartya Sen NIH.jpg அமர்த்தியா சென் பொருளாதார அறிஞர், பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு (1998) பெற்றவர் [36]
Gopinath Bordoloi.jpg கோபிநாத் போர்டோலாய் dagger இந்திய விடுதலைப் போராட்ட வீரர், அசாம் மாநில முதல் முதலமைச்சர் (1946–50) [37]
2001 Lata Mangeshkar - still 29065 crop.jpg லதா மங்கேஷ்கர் பின்னணிப் பாடகர் [38]
Bismillah at Concert1 (edited) 2.jpg பிஸ்மில்லா கான் இந்துஸ்தானி ஷெனாய் இசைக்கலைஞர் [39]
2009 Pandit Bhimsen Joshi (cropped).jpg பீம்சென் ஜோஷி இந்துஸ்தானி குரலிசைப் பாடகர் [40]
2014 CNRrao2.jpg சி. என். ஆர். ராவ் வேதியியலாளர் [4]
Sachin at Castrol Golden Spanner Awards (crop).jpg சச்சின் டெண்டுல்கர் துடுப்பாட்ட வீரர் [4]
2015 Madan Mohan Malaviya.png மதன் மோகன் மாளவியா கல்வியாளர், இந்திய விடுதலைப் போராட்ட வீரர், இந்திய தேசிய காங்கிரசின் தலைவராக நான்கு முறை பொறுப்பாற்றியவர் (1909–10; 1918–19; 1932 மற்றும் 1933) [5]
The Prime Minister Shri Atal Bihari Vajpayee delivering his speech at the 12th SAARC Summit in Islamabad, Pakistan on January 4, 2004 (1).jpg அடல் பிகாரி வாச்பாய் கவிஞர், இந்தியாவின் பதினோறாவது பிரதமர் (1996; 1998-2004) [5]
2019 Secretary Tim Geithner and Finance Minister Pranab Mukherjee 2010 crop.jpg பிரணாப் முகர்ஜி முன்னாள் இந்தியக் குடியரசுத் தலைவர் [41]
Dr. Bhupen Hazarika, Assam, India.jpg பூபேன் அசாரிகா திரைப்படத்துறை, இலக்கியம் மற்றும் இசை [41]
2019 Nanaji Deshmukh1.jpg நானாஜி தேஷ்முக் இந்துத்துவா [41]

மேற்கோள்கள்[தொகு]

 1. http://www.dinamani.com/edition/Story.aspx?SectionName=India&artid=523297
 2. http://mha.nic.in/sites/upload_files/mha/files/Scheme-BR.pdf
 3. "பாரத ரத்தினங்கள் - 43". தி இந்து. பார்த்த நாள் 23 நவம்பர் 2013.
 4. 4.0 4.1 4.2 "பாரத ரத்னா விருது பெற்றோர் பட்டியல் (1954-2014)" (PDF). பார்த்த நாள் 22 ஏப்ரல் 2015.
 5. 5.0 5.1 5.2 Press Information Bureau (PIB), India(24 திசம்பர் 2014). "பாரத ரத்னா விருது பெற்றோர் (2015)". செய்திக் குறிப்பு.
 6. மூர்த்தி 2005, பக். 1.
 7. "இயற்பியலுக்கான நோபல் பரிசு 1930". Nobel Foundation. பார்த்த நாள் 22 ஏப்ரல் 2015.
 8. மூர்த்தி 2005, பக். 11.
 9. மூர்த்தி 2005, பக். 6.
 10. 10.0 10.1 10.2 10.3 10.4 "இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவர்கள்". The President's Secretariat. பார்த்த நாள் 22 ஏப்ரல் 2015.
 11. 11.0 11.1 "இந்தியாவின் முன்னாள் குடியரசுத் துணைத்தலைவர்கள்". The Vice President's Secretariat. பார்த்த நாள் 22 ஏப்ரல் 2015.
 12. மூர்த்தி 2005, பக். 17.
 13. மூர்த்தி 2005, பக். 22.
 14. மூர்த்தி 2005, பக். 28.
 15. 15.0 15.1 15.2 15.3 15.4 15.5 "இந்தியப் பிரதமர்கள்". Prime Minister's Office (India). பார்த்த நாள் 22 ஏப்ரல் 2015.
 16. மூர்த்தி 2005, பக். 33.
 17. "ஏப்ரல் 2015 உத்தரப் பிரதேச மாநிலத்தின் முதலமைச்சர்". Uttar Pradesh Government.
 18. மூர்த்தி 2005, பக். 38.
 19. மூர்த்தி 2005, பக். 43.
 20. "மேற்கு வங்காள மாநிலத்தின் முதலமைச்சர்கள்". West Bengal Government. பார்த்த நாள் 22 ஏப்ரல் 2015.
 21. "புருசோத்தம் தாசு தாண்டன்". www.india9.com. பார்த்த நாள் 22 ஏப்ரல் 2015.
 22. 22.0 22.1 22.2 குகா 2001, பக். 176.
 23. 23.0 23.1 "தமிழகத்தின் முதலமைச்சர்கள்". தமிழ் நாடு சட்டமன்ற பேரவை. பார்த்த நாள் 22 ஏப்ரல் 2015.
 24. "அன்னை தெரேசா". Nobel Foundation. பார்த்த நாள் 22 ஏப்ரல் 2015. * "அமைதிக்கான நோபல் பரிசு (1979)". Nobel Foundation. பார்த்த நாள் 22 ஏப்ரல் 2015.
 25. "ரமோன் மக்சேசே விருது (1958)". Ramon Magsaysay Award Foundation. பார்த்த நாள் 22 ஏப்ரல் 2015.
 26. அகர்வால் 2008, பக். 27-142.
 27. அகர்வால் 2008, பக். 244.
 28. "அமைதிக்கான நோபல் பரிசு (1993)". Nobel Foundation. பார்த்த நாள் 22 ஏப்ரல் 2015.
 29. அகர்வால் 2008, பக். 227-248.
 30. அகர்வால் 2008, பக். 13-26.
 31. "ரமோன் மக்சேசே விருது (1967)". Ramon Magsaysay Award Foundation. பார்த்த நாள் 22 ஏப்ரல் 2015.
 32. "ரமோன் மக்சேசே விருது (1974)". Ramon Magsaysay Award Foundation. பார்த்த நாள் 22 ஏப்ரல் 2015.
 33. "சி. சுப்பிரமணியம் பாரத ரத்னா விருது பெற்றார்". Rediff.com (18 February 1998). பார்த்த நாள் 22 ஏப்ரல் 2015.
 34. "ரமோன் மக்சேசே விருது (1965)". Ramon Magsaysay Award Foundation. பார்த்த நாள் 22 ஏப்ரல் 2015.
 35. தாக்கூர் 2010, பக். 21.
 36. "பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு (1998)". Nobel Foundation. பார்த்த நாள் 22 ஏப்ரல் 2015.
 37. "அசாம் மாநில முதலமைச்சர்கள்". அசாம் சட்டமன்ற பேரவை. பார்த்த நாள் 22 ஏப்ரல் 2015.
 38. தாக்கூர் 2010, பக். 41.
 39. தாக்கூர் 2010, பக். 65.
 40. தாக்கூர் 2010, பக். 77.
 41. 41.0 41.1 41.2 பிழை காட்டு: செல்லாத <ref> குறிச்சொல்; பாரத ரத்னா விருது பெற்றோர் (2019) என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை

உசாத்துணை[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பாரத_ரத்னா&oldid=2951287" இருந்து மீள்விக்கப்பட்டது