தியான் சந்த்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தியான் சந்த்
பிறப்புதியான் சந்த் சிங்
29 ஆகத்து, 1905
அலகாபாத், ஆக்ரா மற்றும் ஔத் ஐக்கிய மாகாணம், பிரித்தானிய இந்தியா
இறப்பு3 திசம்பர் 1979(1979-12-03) (அகவை 74)
தில்லி
கல்லறைஜான்சி ஹீரோஸ் மைதானம், அலகாபாத்
தேசியம்இந்தியர்
அறியப்படுவதுவளைதடிப் பந்தாட்டம்
உயரம்5'3"
பெற்றோர்சாமேசுவர் தத் சிங்
உறவினர்கள்ரூப் சிங்
வென்ற பதக்கங்கள்
ஆடவர் ஒலிம்பிக் வளைதடிப் பந்தாட்டம்
தங்கப் பதக்கம் – முதலிடம் 1928 ஆம்ஸ்டர்டம் அணி விளையாட்டு
தங்கப் பதக்கம் – முதலிடம் 1932 லாஸ் ஏஞ்சலஸ் அணி விளையாட்டு
தங்கப் பதக்கம் – முதலிடம் 1936 பெர்லின் அணி விளையாட்டு

தியான் சந்த் (Dhyan Chand, இந்தி: ध्यान चंद); பிறப்பு: அலகாபாத்தில் ஆகத்து 29, 1905 – இறப்பு:திசம்பர் 3, 1979), என்பவர் இந்திய வளைதடிப் பந்தாட்ட வீரர் ஆவார். வளைதடிப்பந்தாட்ட வரலாற்றில் சிறந்த விளையாட்டு வீரராகக் கருதப்படுகிறார் [1] 1928 ஆம் ஆண்டு ஆம்ஸ்டர்டமிலும் 1932 ஆம் ஆண்டு லாஸ் ஏஞ்சலசிலும் [2] 1936ஆம் ஆண்டு பெர்லினிலும் நடைபெற்ற ஒலிம்பிக் விளையாட்டுக்களில் [3] தங்கப் பதக்கம் பெற்ற இந்திய அணியில் பங்கேற்றிருந்தார். [4] 1928 முதல் 1964 வரையிலான காலங்களில் நடந்த எட்டு ஒலிம்பிக் விளையாட்டுக்களில் இவர் இடம்பெற்றிருந்த ஆடவர் வளைதடிப் பந்தாட்டத்தில் ஏழு போட்டிகளில் இந்தியா தங்கப் பதக்கம் வென்றுள்ளது.

வளதடிப் பந்தினைக் கையாள்வதில் மேதை எனப் புகழப்பட்டார். தியான் சந்த் 1948 இல் நடைபெற்ற வளைதடிப் பந்தாட்ட உலகத் தொடரோடு ஓய்வு பெற்றார். இவர் மொத்தம் 400 இலக்குகள் (கோல்) அடித்துள்ளார்[5] வளைதடிப்பந்தாட்ட வரலாற்றில் ஒருவர் அடித்த அதிகபட்ச இலக்குகள் இதுவாகும்.1956 ஆம் ஆண்டில் இந்திய அரசின் குடிமை விருதுகளில் மூன்றாவது பெரிய விருதான பத்ம பூசண் விருதினைப் பெற்றார்.[6] இவரின் பிறந்த நாளான ஆகஸ்டு 29 அன்று தேசிய விளையாட்டு நாளாக இந்தியாவில் ஆன்டுதோறும் கொண்டாடப்படுகிறது.[7]

இந்தியாவில் விளையாட்டு துறையில் வழங்கப்படும் உயரிய விருதான கேல் ரத்னா விருது இவரது நினைவாக மேஜர் தயான் சந்த் கேல் ரத்னா விருது என 2021 ஆம் ஆண்டு முதல் வழங்கப்படுகிறது.

ஆரம்பகால வாழ்க்கை[தொகு]

தியான் சந்த் ஆகஸ்டு 29, 1905 இல் அலகாபாத், இந்தியாவில் பிறந்தார்.[8] இவரின் தந்தை சமேஷ்வர் சிங் தாய் சரதா சிங்.[9] இவரின் தந்தை பிரிட்டிசு இந்தியப் பாதுகாப்புப் படையில் இருந்தபோது இரானுவ வளைதடிப் பந்தாட்ட அணியில் விளையாடினார். இவருக்கு மூல் சிங் மற்றும் ரூப் சிங் எனும் இரு சகோதரர்கள் உள்ளனர். இவர் தந்தையின் பணிமாறுதல் காரணமாக இவரின் குடும்பம் பல நகரங்களில் குடிபெயர வேண்டியிருந்தது. இதனால் தியான் சந்த் ஆறு வருடப் பள்ளிப் படிப்போடு நிறுத்திக் கொண்டார். இவர்களின் குடும்பம் இறுதியாக ஜான்சியில், உத்தரப் பிரதேசம்,இந்தியா தங்கியது.

தியான் சந்தின் இளம்வயதில் விளையாட்டின் மீது அதிக நாட்டம் இல்லை . ஆனால் குத்துச்சண்டை இவருக்கு ஆர்வம் இருந்தது.மேலும் படைத்துறையில் சேர்வதற்கு முன்பாக வளைதடிப் பந்தாட்டம் விளையாடியதாக தனக்கு ஞாபகம் இல்லை எனக் கூறினார். மேலும் தனது நண்பர்களுடன் ஜான்சியில் சில பொதுவான விளையாட்டுக்கள் விளையாடியதாகவும் கூறினார்.[10]

பாரத் ரத்னா[தொகு]

இந்தியாவின் உயரிய குடியுரிமை விருதான பாரத் ரத்னா விருது 2014 வரை விளையாட்டு வீரர்களுக்கு கொடுக்கப்படவில்லை. உள்துறை அமைச்சகம் (இந்தியா) விதிகளை மாற்றியமைத்து விளையாட்டு வீரர்களுக்கு பாரத ரத்னா விருது வழங்க முடிவு செய்யுமானால் முதல் விருது தியான் சந்த்திற்கு வழங்கப்பட வேண்டும் என்று கோரிக்கை எழுந்தது [11]. இதனிடையே மத்தியப் பிரதேச அரசு அவர் நினைவாக அருங்காட்சியகம் ஒன்றினைத் திறக்க முடிவு செய்துள்ளது.[12]

அணித் தலைவராக[தொகு]

1936 இல் பெர்லின் ஒலிம்பிக்கில் இந்திய அணித் தலைவர் தியான் சந்த்

1933 ஆம் ஆண்டில் தியான் சந்த் தனது உள்ளூர் அணியான ஜான்சி ஹே ஹீரோஸ் அணித்தலைவராக பெய்டன் கோப்பைப் போட்டியில் வென்றதையே மிகச் சிறப்பான போட்டி என்று கூறுகிறார். இதனைப் பற்றி இவர் பின்வருமாறு கூறுகிறார்.[13]

என்னிடம் யாராவது இதுவரை தாங்கள் விளையாடியதிலேயே மிகச் சிறப்பான போட்டி எது? எனக் கேட்டால் நான் சிறிதும் தயங்காமல் 1933 ஆம் ஆண்டில் விளையாடிய பெய்டன் கோப்பைக்கான போட்டியில் கல்கத்தா அணிக்கு எதிராக விளையாடியதைத் தான் கூறுவேன். ஏனெனில் அன்றைய சமயத்தில் கல்கத்தா கஸ்டம்ஸ் அணி மிக பலம் வாயந்த அணியாகக் கருதப்பட்டது. அவர்களின் அணியில் சௌகத் அலி, அசாத் அலி, சீமன், மோசின் போன்ற வீரர்கள் இருந்தனர்.

எங்களது அணியில், எனது சகோதரன் ரூப்சிங் மற்றும் இசுமாயில் ஆகியோர் மும்பை இரயில்வே அணியில் விளையாடிய அனுபவம் கொண்டவர்கள் . இவர்களைத் தவிர எங்கள் அணியில் இருந்த மற்றவர்கள் புது முக வீரர்களாக இருந்தனர்.ஆனால் அவர்கள் செய் அல்லது செத்து மடி எனும் எண்னம் கொண்டவர்களாக இருந்தனர். இரு அணி வீரர்களும் இலக்குகளைப் பெற கடுமையாகப் போராடினோம். இறுதியில் பந்தை நான் இசுமாயிலுக்கு கடத்தினேன். கல்கத்தா கஸ்டம்ஸ் அணியில் நிலவிய புரிதலின்மையினைப் பயன்படுத்தி இசுமாயில் அதனை இலக்காக மாற்றினார். அந்த போட்டியில் அந்த ஒரு இலக்கு மட்டுமே அடிக்கப்பட்டு நாங்கள் சிறப்பான வெற்றியைப் பெற்றோம் எனக் கூறினார்.

மேலும் காண்க[தொகு]

சான்றுகள்[தொகு]

  1. "தியான் சந்த் விளையாட்டு வீரர்". என்சைகுளோபீடியா பிரிட்டானிகா.
  2. "1932 இல் லாஸ் ஏஞ்சல்சில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியின் முடிவுகள்", International Olympic Committee (in ஆங்கிலம்), 2017-01-31, பார்க்கப்பட்ட நாள் 2018-04-17
  3. "1936 பெர்லின் ஒலிம்பிக் போட்டிகள்", Encyclopedia Britannica (in ஆங்கிலம்), பார்க்கப்பட்ட நாள் 2018-04-17
  4. தயான் சந்த்: ஒலிம்பிக் இறுதி போட்டியில் 7 கோல் வித்தியாசத்தில் அபார வெற்றி
  5. "Dhyan Chand – The Legend Lives On". bhartiyahockey.org.
  6. "Padma Awards" (PDF). Ministry of Home Affairs, Government of India. 2015. Archived from the original (PDF) on 15 November 2014. பார்க்கப்பட்ட நாள் July 21, 2015.
  7. "National Sports Day of India", sports.mapsofindia.com, பார்க்கப்பட்ட நாள் 2018-04-17
  8. http://www.allahabadcity.in/allahabad/dhyan-Major[தொடர்பிழந்த இணைப்பு] Dhyan Chand, was one of the prominent Indian field hockey players, who was born at Allahabad.
  9. Boria Majumdar; Nalin Mehta (2009). India and the Olympics. Routledge. பக். 272. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-1-135-27574-7. https://books.google.com/books?id=XXONAgAAQBAJ&pg=PT272. 
  10. "Dhyan Chand Profile - Indian Hockey Player Dhyan Chand Biography - Information on Dhyan Chand". www.iloveindia.com. பார்க்கப்பட்ட நாள் 2016-08-23.
  11. Dhyan Chand deserves Bharat Ratna: Rajpal பரணிடப்பட்டது 2012-01-27 at the வந்தவழி இயந்திரம் ஐபிஎன்லைவ் இணையத்தளம், பார்க்கப்பட்ட நாள்:சனவரி 23, 2012
  12. Madhya Pradesh to set up museum after Dhyan Chand டைம்ஸ் ஆஃப் இந்தியா, பார்க்கப்பட்ட நாள்:சனவரி 24, 2012
  13. https://www.slideshare.net/918007165995/major-dhyan-chand

வெளியிணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=தியான்_சந்த்&oldid=3792659" இலிருந்து மீள்விக்கப்பட்டது