இழப்பு (துடுப்பாட்டம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
இழப்பின் தோற்றம்

இழப்பு (Wicket) என்பது துடுப்பாட்டத்திற்குத் தேவைப்படும் கருவிகளில் ஒன்றாகும். இது ஒரு மட்டையாளரை ஆட்டமிழப்பு செய்யப் பயன்படுவதால் இவ்வாறு அழைக்கப்படுகிறது. இது வீசுகளத்தின் இரு முனைகளில் உள்ள எல்லைக்கோடுகளில் அமைக்கப்பட்டிருக்கும்.

பொதுவாக இழப்புக்கு அருகில் நிற்கும் மட்டையாடுபவர், தன்னை நோக்கி வீசப்படும் பந்து இழப்பில் படாதவாறு மட்டையால் தடுப்பார். மேலும் பந்தை களத்தில் அடித்துவிட்டு ஓட்டங்கள் எடுக்கவும் முயற்சிப்பார்.

குச்சிகளும் மரத்துண்டுகளும்[தொகு]

ஒரு இழப்பு என்பது மூன்று மரக்குச்சிகள் மற்றும் இரு மரத்துண்டுகள் ஆகியவற்றைக் கொண்டு அமைக்கப்படும். இதன் அளவுகள் மற்றும் அமைக்கும் முறை குறித்து விளக்கும் துடுப்பாட்ட விதி 8 பின்வருமாறு:

இழப்பு என்பது 28 அங்குலங்கள் உயரமுள்ள மூன்று மரக்குச்சிகளைக் கொண்டது. வீசுகளத்தின் முனையில் ஒவ்வொரு குச்சியும் 9 அங்குல இடைவெளிகளில் சமமாக நடப்படும். குச்சிகளின் உச்சியில் உள்ள பள்ளங்களின் மேல் எவ்வித பிடிமானமும் இன்றி இரு மரத்துண்டுகள் வைக்கப்படும். குச்சிகளுக்கு மேல் 0.5 அங்குலங்கள் நீளத்தைத் தாண்டி மரத்துண்டுகள் இருக்கக்கூடாது. மேலும் மரத்துண்டுகளின் அளவு 4.31 அங்குலங்களாக இருக்க வேண்டும்.[1]

மேற்கோள்கள்[தொகு]