மலர் சூத்திரம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

மலர்ச்சூத்திரம் (Floral formula) என்பது எண்கள், எழுத்துக்கள், பல்வேறு குறியீடுகள் மற்றும் எழுத்துருக்களைப் பயன்படுத்தி ஒரு மலரின் அமைப்பைப் பிரதிநிதித்துவப்படுத்தும் மலர் பற்றிய கணிசமான தகவல்களை வழங்கும் ஒரு வழிமுறையாகும். இது பொதுவாக மலர் உறுப்புகளை அதன் அமைவிடம், எண்ணிக்கை, தன்மை, பால், தொகுதி போன்றவற்றை வேறுபடுத்துகிறது. மேலும் அதன் குறியீடுகளைக் கொண்டு மலரின் இனத்தை அறிய இயலும். இது தாவரவியலறிஞர்களால் 19ம் நூற்றாண்டில் உருவாக்கப்பட்ட மலரின் கட்டமைப்பை விவரிக்கும் இரண்டு வழிகளில் ஒன்றாகும். மறறொரு முறை ’மலர் வரைபடம்’ மூலம் விளக்குவதாகும்.[1] பூச்சூத்திரங்களுக்கான வடிவம் தவரவியலாளர், நாடு, மொழி ஆகியவனற்றிற்கிடையே வேறுபடுகிறது. பழமையான முறையாக இருப்பினும் இன்னும் அவைகள் அதே தகவலை வெளிப்படுத்த முனைகின்றன.[2]

மலர்ச்சூத்திரக் குறியீடுகள்[தொகு]

அல்லிவட்டம்-புல்லிவட்டம்
அல்லிவட்டம்-புல்லிவட்டம்
 • Br (Bracteate)- பூவடிச்செதில்
 • K (Calyx)- புல்லிவட்டம்
 • Ca (Corolla)- அல்லிவட்டம்
 • P (Perianth)- இதழ்வட்டம்
 • A (Androecium)- மகரந்தத்தாள் வட்டம்
 • G (Gynoecium)- சூலக வட்டம்
 • G__ - மேல் மட்ட சூற்பை
 • Ĝ,G - கீழ் மட்ட சூற்பை
 • ♂ - ஆண்மலர்
 • ♀ - பெண்மலர்

எடுத்துக்காட்டு[தொகு]

K3+3 ஆறு தனித்த புல்லி இதழ்களுடன், இரண்டு தனி சுருள்களாகவுள்ள அமைப்பு,
A∞ – பல மகரந்தங்களைக் கொண்டது,
P3–12 – மூன்று முதல் பன்னிரெண்டு இதழ்வட்டத்தைக் கொண்டது.

மேற்சான்றுகள்[தொகு]

 1. "மலர்ச்சூத்திரம் - வகைப்பாடு". 11 மே 2014 அன்று பார்க்கப்பட்டது.
 2. "மலர்ச் சூத்திரம்". 11 மே 2014 அன்று பார்க்கப்பட்டது.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மலர்_சூத்திரம்&oldid=1967555" இருந்து மீள்விக்கப்பட்டது