சீத்தாப்பழக் குடும்பம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சீத்தாப்பழக் குடும்பம்
புதைப்படிவ காலம்:Coniacian–Recent
Annona squamosa fruit
சீத்தாப்பழம்
உயிரியல் வகைப்பாடு e
திணை:
உயிரிக்கிளை:
உயிரிக்கிளை:
வரிசை:
குடும்பம்:
Annonaceae

மாதிரிப் பேரினம்
Annona
Subfamilies
வேறு பெயர்கள்

சீத்தாப்பழக் குடும்பம் [2] (Annonaceae) என்பது மரங்கள், புதர்கள், அல்லது அரிதாக மரமயவேறிகள் [2] கொண்ட பூக்கும் தாவரக் குடும்பமாகும். இது பொதுவாக அன்னோனேசியே அல்லது சோர்சாப் குடும்பம் என்று அழைக்கப்படுகிறது. இதில் ஏற்றுக்கொள்ளப்பட்ட 108 பேரினங்கள் மற்றும் சுமார் 2400 அறியப்பட்ட இனங்கள் [3] கொண்டதாக மாக்னோலியால்ஸில் உள்ள மிகப்பெரிய குடும்பமாக உள்ளது. இதில் பல பேரினங்கள் குறிப்பாக அனோனா, அனோனிடியம், அசிமினா, ரோலினியா, உவேரியா போன்றவை உண்ணத்தக்க பழங்கள் விளைவதாக உள்ளன. அதன் மாதிரி பேரினம் அன்னோனா ஆகும். இந்தக் குடும்பத்தைச் சேர்ந்த தாவரங்கள் வெப்பமண்டலத்தில் பெருமளவில் உள்ளன. மிதவெப்பமண்டலப் பகுதிகளில் சில இனங்கள் காணப்படுகின்றன. சுமார் 900 இனங்கள் நியோட்ரோபிகல் பிராந்தியத்திலும் 450 ஆப்ரோட்ரோபிகல் பிராந்தியத்திலும், மீதமுள்ளவை இந்தோமாலயன் பிராந்தியத்திலும் காணப்படுகின்றன. பழத்துக்காகவும், வாசனைப் பொருள்களுக்காகவும், அழகுக்காகவும் சில வகைகள் பயிர் செய்யப்படுகின்றன.

விளக்கம்[தொகு]

முள்ளு சீதா

இதன் இனங்கள் பெரும்பாலும் வெப்பமண்டலத்தில் காணப்படுகின்றன. சில நடுத்தர அட்சரேகை பகுதியில், இலையுதிர் அல்லது மாறாப் பசுமை இரட்டை விதையிலையுள்ள மரங்கள் மற்றும் புதர்கள், சில மரமயவேறிகளாக நறுமண பட்டை, இலைகள், பூக்கள் போன்றவற்றைக் கொண்டவையாக உள்ளன.[2]

இக்குடும்பத் தாவரங்ளில் உள்ள இலைகள் மாறொழுங்கின, தனி, முழு வடிவின இலையடிச் செதிலில்லாதவை பூக்கள் பெரும்பாலும் இரு பால் உள்ளவை. இதழ்கள் வட்டத்திற்கு மூன்றாக இருக்கும். புல்லி மூன்று. அல்லி பெரும்பாலும் ஆறு ; இரண்டு வட்டமாக அமைந்திருக்கும். இதழ்கள் சற்றுத் சற்றுத்தடித்தவை. பசுமை அல்லது பழுப்பு நிறமுள்ளவை. பகட்டாக இருப்பதில்லை. மகரந்தக் கேசரங்கள் பல. கேசரத் தாள் சிறியது. மகரந்தப் பையில் அறைகளைச் சேர்க்கும் இணைப்பு அறைகளுக்கு மேலே நீண்டு வளர்ந்திருக்கும். சூலகத்தில் பல சூலிலைகள் உண்டு.

குறிப்புகள்[தொகு]

  1. Germplasm Resources Information Network (GRIN) (2007-05-12). "Family: Annonaceae Juss., nom. cons". Taxonomy for Plants. USDA, ARS, National Genetic Resources Program, National Germplasm Resources Laboratory, Beltsville, Maryland. பார்க்கப்பட்ட நாள் 2008-04-18.
  2. 2.0 2.1 2.2 Flora of North America. 2. Annonaceae Jussieu. 3. http://www.efloras.org/florataxon.aspx?flora_id=1&taxon_id=10047. பார்த்த நாள்: 2008-04-20. 
  3. Chatrou, L.W.; M.D. Pirie; R.H.J. Erkens; T.L.P. Couvreur; K. M. Neubig; J.R. Abbott; J.B. Mols; P.J.M. Maas et al. (2012). "A new subfamilial and tribal classification of the pantropical flowering plant family Annonaceae informed by molecular phylogenetics". Botanical Journal of the Linnean Society 169: S. 4–50. doi:10.1111/j.1095-8339.2012.01235.x. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=சீத்தாப்பழக்_குடும்பம்&oldid=3929987" இலிருந்து மீள்விக்கப்பட்டது