மால்வேசியே

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
மால்வேசியே (Malvaceae)
Malva parviflora small.jpg
Malva parviflora
உயிரியல் வகைப்பாடு
திணை: தாவரம்
தரப்படுத்தப்படாத: பூக்கும் தாவரம் (Angiosperms)
தரப்படுத்தப்படாத: Eudicots
தரப்படுத்தப்படாத: Rosids
வரிசை: Malvales
குடும்பம்: மால்வேசியே (Malvaceae)
திறனாய்வாளர்: AntoineLaurentdeJussieu
துணைக்குடும்பங்கள்
 1. Bombacoideae
 2. Brownlowioideae
 3. Byttnerioideae
 4. Dombeyoideae
 5. Grewioideae
 6. Helicteroideae
 7. Malvoideae
 8. Sterculioideae
 9. Tilioideae


மால்வேசியே என்பது (இலத்தீன்:Malvaceae); ஆங்கிலம்:mallows) பூக்கும் தாவரங்களிலுள்ள ஒரு குடும்பம் ஆகும். இக்குடும்பத்தில் 200 பேரினங்களும், அவற்றினுள் ஏறத்தாழ 2,300 இனங்களும் உள்ளன.[1]உலகெங்கும் இத்தாவரங்கள் காணப்பட்டாலும். வெப்ப, மிதவெப்ப மண்டல நாடுகளில் மிகுதியாக காணப்படுகின்றன, இக்குடும்பத் தாவரங்களுள், 22 பேரினங்களும். 125 சிற்றினங்களும் இந்தியாவில் வளர்வதாக கண்டறியப் பட்டுள்ளது. தமிழில் இதன் பெயரை பருத்திக் குடும்பம் எனலாம்.

வளரியல்பு[தொகு]

ஓராண்டு சிறு செடிகள் (எ,கா, மால்வா சில்வெஸ்ட்ரிஸ்) அல்லது பல ஆண்டு புதர் செடிகள் (எ,கா, ஹைபிஸ்கஸ் ரோசா-சைனென்சிஸ்) அல்லது மரங்கள் (எ,கா, தெஸ்பிசியா பாப்புல்னியா), இக்குடும்பத் தாவரங்களில் வழவழப்பான மியூசிலேஜ் நீர்மம் காணப்படும், நட்சத்திர வடிவ மயிர் வளரிகள், தாவரத்தின்இளம் உறுப்புகளின் மீது காணப்படுகின்றன.நிலத்தின் மேல் காணப்படும் தண்டினையுடையது. நட்சத்திர வடிவ ரோமவளரிகளால்,இளம் தண்டு மூடிக் காணப்படும். இதன் வேர்,ஆணிவேர்த் தொகுப்பு ஆகும்.

இலையமைப்பு[தொகு]

இலைகள், இலைக்காம்புடையது. தனி இலை. முழுமையானது (எ,கா, தெஸ்பிசியா பாப்புல்னியா) அல்லது அங்கை வடிவ மடல்களையுடையது. (எ,கா) காஸிபியம் ஆர்போரியம்) மாற்றியலையமைவு. இலையடி செதிலுடையது. விளிம்பு பற்கள் போன்றது (எ,கா, ஹைபிஸ்கஸ் ரோசா-சைனென்சிஸ்) மற்றும் வலைப்பின்னல் நரம்பமைப்புடையது.

பூவின் வட்டங்கள்[தொகு]

அல்லிவட்டம்[தொகு]

 • அல்லி/பூவிதழ்களின் எண்ணிக்கை மொத்தம் ஐந்தாகும். வண்ணமுடையது. அவை தனித்த அல்லிகள் ஆகும். ஆனால், அல்லி இதழ்களின் அடிப்பகுதி, மகரந்தத்தாள் குழலின் அடியில் இணைந்துள்ளன. ஒழுங்கான அல்லிகள், திருகிதழ் அமைவில் உள்ளன.
 • மஞ்சரி:நுனியிலமைந்த தனி மலர் (எ.கா) மால்வாஸ்ட்ரம் கோரமெண்டேயா) அல்லது கோண தனி மலர் (எ.கா) தெஸ்பிசியா பாப்புல்னியா அல்லது நுனி அல்லது கோண சைம் மஞ்சரி (எ.கா) பெவோனியா ஓடோரேட்டா (பேராமுட்டி).
 • மலர்: பூவடிச் செதில் உடையது அல்லது அற்றது. பூக்காம்புச் செதில் உடையது அல்லது அற்றது. மலர்க்காம்புடையது. ஈருறை உடையவை. ஐந்தங்கமலர். ஒழுங்கானது. முழுமையானது. ஆரச்சமச்சீருடையது. இருபால் மலர் . அம்மலரும், சூலக மேல் மலர் ஆகும்.

புல்லிவட்டம்[தொகு]

 • மொத்த புல்லிகளின் எண்ணிக்கை ஐந்தாகும். அவைகள் பசுமையானது. தொடு இதழமைவில் புல்லிகள் இணைந்துள்ளன.
 • புறப்புல்லிவட்டம்:பூக்காம்புச் செதில்கள், ஒரு வட்டத்தில் புல்இதழ்களுக்கு புறத்தே அமைந்து உருவாவது புறபுல்லி வட்டம் எனப்படும்.
மால்வா சில்வஸ்ட்ரிஸ் தாவரத்தில் 3பூக்காம்புர் செதில்களும். ஹைபிஸ்கஸ் ரோசா-சைனென்சிஸ் தாவரத்தில் 5-8 பூக்காம்புச் செதில்களும், பெவோனியா ஒடோரேட்டாவில் 10 முதல் 12-ம், அபுட்டிலான் இன்டிகம் தாவரத்தில், பூக்காம்புச் செதில்களற்றும் காணப்படுகின்றன.

இனப்பெருக்க வட்டம்[தொகு]

 • மகரந்தத்தாள்அமைவு:மகரந்தத்தாள்கள் எண்ணற்றவை. இவை அனைத்தும் ஒன்றாக இணைந்து, ஒரே கற்றையாக உள்ளன, மகரந்தத்தாள் குழல் அல்லிஇதழ்களின் அடியுடன் இணைந்துள்ளது. மகரந்தப்பை ஓரறையுடையது. சிறுநீரக வடிவமானது. மகரந்தக்கம்பியுடன், குறுக்காக இணைந்துள்ளது மற்றும் குறுக்காக வெடிக்கிறது.
 • சூலகம்: மேல்மட்ட சூற்பை. இரண்டு முதல் பல சூலக இலைகளையுடையது.வழக்கமாக 5 முதல் 10 சூலக இலைகள் காணப்படும். ஹைபிஸ்கஸ் ரோசாசைனென்சிஸ் தாவரத்தில், 5 சூலக இலைகளும். ஆல்தியாவில் 10-ம். அபுட்டிலான் இன்டிகம் தாவரத்தில் 15 முதல், 20 சூலக இலைகளும் காணப்படுகின்றன. சூலிலைகள் இணைந்தும் மற்றும் இரண்டு முதல் பல சூலறைகளையுடைய, மேல்மட்ட சூலகமும் காணப்படுகிறது. சூலக அறைகளின் எண்ணிக்கை, சூலக இலைகளின் எண்ணிக்கைக்கு சமமானது, ஒவ்வொரு சூலறையும் ஒன்று முதல் பல சூல்களைக் கொண்டது, சூல்கள் அச்சு சூல் ஒட்டு முறையிலுள்ளன, சூல்தண்டு நீண்டது. மென்மையானது மற்றும் மகரந்தத்தாள் குழலின் ஊடாக சென்று, இரண்டு முதல் பல பிரிவுகளாகப் பிரிந்து, உருண்டை வடிவ சூல்முடியாக முற்றுப்பெறுகிறது.
 • கனி:அறை வெடிகனி (எ.கா.) ஏபெல்மாஸ்கஸ் எஸ்குலண்டஸ் அல்லது பிளவுக்கனி (எ.கா.) அபுட்டிலான் இன்டிகம் மற்றும் சைடா கார்டி*போயா (நிலத்துத்தி)
 • விதை: கருவூண் மிகக் குறைவாகவே உள்ளது. காஸிபியம் பார்படென்ஸ் தாவரத்தில் விதைகள் தூவிகளால் மூடிக் காணப்படும்,

ஊடகங்கள்[தொகு]

பொருளாதாரப் பயன்கள்[தொகு]

கீழ்கண்ட சிற்றினங்களால், நமது அன்றாட வாழ்வின் பொருளாதாரம் பெருகி, வாழ்க்கையும் சீராகிறது.

 1. நார்த் தாவரங்கள்
  காசிபியம் பார்படென்ஸ் (எகிப்தியப் பருத்தி); கா. ஹிர்சுட்டம் (அமெரிக்கப் பருத்தி); கா. ஹெர்பேசியம் (பருத்தி); காஸிபியத்தின் பல சிற்றினங்கள் வணிக நோக்கமுள்ள நார்களைத் தருகின்றன. விதைகளின் புறத்திருந்து, நார்கள் பெறப்படுகின்றன. ஹைபிஸ்கஸ் கென்னாபினஸ் (டெக்கான் பருத்தி) லிருந்து பாசுட் நார் பெறப்படுகிறது. இது கயிறு தயாரிக்கப் பயன்படுகிறது.
 2. உணவுத் தாவரங்கள்
  ஏபெல்மாஸ்கஸ் எஸ்குலன்டஸ் (வெண்டை) தாவரத்திருந்து கிடைக்கும் வெண்டைக்காய் உணவாக பயன்படுகிறது. ஹைபிஸ்கஸ் சப்டாரிபா (புளிச்சையின வகை) தாவர இலைகள் மற்றும் புல்இதழ்கள் ஊறுகாய். ஜெல் மற்றும் சுவையான கூழ்மம் தயாரிக்கப் பயன்படுகின்றன. ஹை.கென்னாபினஸ் (புளிச்சைக் கீரை) மற்றும் ஹை. சப்டாரிபாவின் இலைகள் மற்றும் புல்லிகள் சுவை மிகுந்த ‘சட்னி’ தயாரிக்கப் பயன்படுகின்றன.
 3. கட்டைத் தாவரங்கள்
  தெஸ்பிசியா பாப்புல்னியா (பூவரசு) தாவரத்திருந்து பெறப்படும் மரக்கட்டை படகு, மரச்சாமான்கள், வேளாண்கருவிகள் தயாரிக்கப் பயன்படுகிறது.
 4. மருத்துவத் தாவரங்கள்
  அபுட்டிலான் இன்டிகம் (துத்தி); மால்வா சில்வெஸ்ட்ரிஸ் போன்ற தாவரங்களின் வேர்களும், இலைகளும் காய்ச்சலுக்கு மருந்தாகப் பயன்படுகின்றன. மால்வா சில்வெஸ்டரிஸ், ஆல்தியா ரோசியா தாவரங்களின் வேர்கள் முறையே கக்குவான் இருமலுக்கும், வயிற்றுப்போக்கினை குணப்படுத்தவும் பயன்படுகின்றன.
 5. அலங்காரத் தாவரங்கள்
  ஆல்தியா ரோசியா, ஹைபிஸ்கஸ் ரோசா-சைனென்சிஸ் (செம்பருத்தி), ஹை. சைசோபெட்டாலஸ் (அல்லிகள் பிளவுற்றுக் காணப்ப்டும் ஒருவகைச் செம்பருத்தி) போன்ற தாவரங்கள் தோட்டங்களில் அலங்காரத் தாவரங்களாக வளர்க்கப்படுகின்றன.

அடிக்குறிப்புகள்[தொகு]

 1. Judd & al.

செம்பட்டியல்[தொகு]

 • Hibiscus kokio ssp. kokio என்பதைக் குறித்த தரவுகள் ஆய்வு செய்யப்படுகிறது.

வெளியிணைப்புகள்[தொகு]

Wikispecies-logo.svg
விக்கியினங்கள் தளத்தில் பின்வரும் தலைப்பில் தகவல்கள் உள்ளன:
"https://ta.wikipedia.org/w/index.php?title=மால்வேசியே&oldid=2023073" இருந்து மீள்விக்கப்பட்டது