பென்டாடைப்ளான்ட்ரா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.


Pentadiplandra
உயிரியல் வகைப்பாடு
திணை: தாவரம்
தரப்படுத்தப்படாத: பூக்கும் தாவரம்
Angiosperms
தரப்படுத்தப்படாத: Eudicots
தரப்படுத்தப்படாத: ரோசிதுகள்
வரிசை: Brassicales
குடும்பம்: Pentadiplandraceae
Hutch. & Dalziel[1]
பேரினம்: பென்டாடைப்ளான்ட்ரா
இனம்: பென்டாடைப்ளான்ட்ரா பிரேசியானா
இருசொற் பெயரீடு
பென்டாடைப்ளான்ட்ரா பிரேசியானா
Baill.
வேறு பெயர்கள் [2]
  • Cercopetalum dasyanthum Gilg
  • Cotylonychia chevalieri Stapf
  • Pentadiplandra gossweileri Exell

பென்டாடைப்ளான்ட்ரா பிரேசியானா (தாவர வகைப்பாடு : (Pentadiplandra brazzeana) என்பது பென்டாடைப்ளான்ட்ரா குடும்பத்தில் இடம்பெற்றுள்ள ஒற்றை இனமாகும். மேற்கு ஆப்ரிக்காவில் வளரும் தாவரமான இது பென்டாடைப்ளான்ட்ரா குடும்பத்தில் தனித்து உள்ளது.

1985 ஆம் ஆண்டில் மார்செல், ஆனெட் இலாடிக் இருவரும் முக்கியத்துவம் பெறாமலிருந்த இத்தாவரத்தை மறு கண்டுபிடிப்பு செய்தனர். அப்போது இருவரும் பாரிசு தேசிய இயற்கை அருங்காட்சியத்தில் பணிபுரிந்து கொண்டிருந்தனர். காபோனில் [3]இருந்த மனிதக் குரங்குகளின் உணவுப் பழக்க வழக்கங்களை இவர்கள் ஆய்வு செய்து கொண்டுமிருந்தனர்.

தங்கள் கண்டுபிடிப்புகளை அறிவியல் இதழ்களில் வெளியிட்டனர். சர்க்கரையைக் காடிலும் பலநூறு மடங்கு இனிப்புச் சுவையைக் கொண்ட பிரேசின் எனப்படும் [[புரதம்]புரதத்தை]] இத்தாவரம் உற்பத்தி செய்கிறது என்ற உண்மை உலகாய ஆர்வத்தைத் தூண்டியது. அங்கோலா, காங்கோ மக்களாட்சிக் குடியரசு, மத்திய ஆப்பிரிக்கக் குடியரசு, கொங்கோ குடியரசு, கமரூன், காபோன், நைசீரியா[4] போன்ற நாடுகளில் பென்டாடைப்ளான்ட்ரா பிரேசியானா நன்கு வளர்கிறது.

1989 இல் பென்டாதின், 1994 இல் பிரேசின் என்ற இரண்டு வகையான இனிப்புப் புரதங்கள் இத்தாவரத்தின் பழத்திலிருந்து தயாரிக்கப்பட்டுள்ளன[5] and brazzein (in 1994).[6]. பிரேசின் புரதம் சர்க்கரையைவிட 2000 மடங்கு இனிப்புச்சுவையும் குறைவான கலோரி மதிப்பும் கொண்டதாக கூறப்படுகிறது.

பாரம்பரிய பயன்பாடு[தொகு]

காபோன் மற்றும் கமரூன் நாடுகளில் நீண்ட காலமாக இப்பழம் பூர்வகுடிகளாலும் மனிதக் குரங்குகளாலும் உண்ணப்பட்டு வந்தது. இப்பழத்தை சுவைத்த குழந்தைகள் தாய்ப்பாலின் சுவையையும் மறந்துவிடுவர் என்ற பொருளில் ஆப்பிரிக்க மற்றும் பிரெஞ்சு பழங்குடியினர் தங்கள் தாய்மொழியில் வெவ்வேறு சொற்களால் பெயரிட்டு அழைத்தனர்[7]

மேற்கோள்கள்[தொகு]

  1. Angiosperm Phylogeny Group (2009). "An update of the Angiosperm Phylogeny Group classification for the orders and families of flowering plants: APG III" (PDF). Botanical Journal of the Linnean Society 161 (2): 105–121. doi:10.1111/j.1095-8339.2009.00996.x. http://onlinelibrary.wiley.com/doi/10.1046/j.1095-8339.2003.t01-1-00158.x/pdf. பார்த்த நாள்: 2013-07-06. 
  2. "The Plant List: A Working List of All Plant Species". http://www.theplantlist.org/tpl1.1/record/kew-2409420. பார்த்த நாள்: 15 August 2015. 
  3. UW-Madison professor makes a sweet discovery 10:57 PM 11/04/02 Jason Stein For the State Journal[தொடர்பிழந்த இணைப்பு]
  4. Data Portal of the Global Biodiversity Information Facility (GBIF). Biodiversity occurrence data for Pentadiplandra brazzeana Baillon
  5. H Van der Wel, G Larcon, A Hladika, CM Hladik, G Hellekant and D Glaser. Isolation and characterisation of Pentadin, the sweet principle of Pentadiplandra-Brazzeana Baillon. Chemical Senses 1989, 14:75-79.
  6. D Ming and G Hellekant. Brazzein, a new high-potency thermostable sweet protein from Pentadiplandra brazzeana B. FEBS Lett 1994, 355(1):106-8.
  7. (பிரெஞ்சு) CM Hladik and A Hladik. (1988) Sucres et "faux sucres" de la forêt équatoriale : évolution et perception des produits sucrés par les populations forestières d'Afrique. Journal d'Agriculture Tropicale et de Botanique Appliquée (FRA), 1988. - vol. 35, n. spéc., p. 51-66. பரணிடப்பட்டது 2011-07-26 at the வந்தவழி இயந்திரம்
"https://ta.wikipedia.org/w/index.php?title=பென்டாடைப்ளான்ட்ரா&oldid=3583385" இருந்து மீள்விக்கப்பட்டது