சூல்வித்து

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
பூவொன்றின் உள்ளே சூல்வித்துக்கள் காணப்படும் இடம்

சூல்வித்து என்பது வித்துத் தாவரங்களில் காணப்படும் பெண் இனப்பெருக்க உயிரணுக்கள் ஆகும். இவையே இனப்பெருக்க செயல்முறையின்போது, மகரந்தத்தில் உள்ள ஆண் பாலணுக்களுடன் இணைந்து கருக்கட்டல் நடைபெற்ற பின்னர், வித்தாக உருவாகின்றது.

பூக்கும் தாவரங்களில் இந்த சூல்வித்துக்கள் பூக்களின் உள்ளே காணப்படும் சூலகம் என்னும் பகுதியினுள்ளே அமைந்திருக்கும். சூலகத்தினுள்ளே, ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட சூல்வித்துக்கள் காணப்படலாம். அவை சூலகத்திலுள்ள சூல்வித்தகத்துடன், விலங்குகளில் உள்ள தொப்புள்கொடிக்கு இணையான, ஒரு காம்பு போன்ற பகுதியினால் இணைக்கப்பட்டிருக்கும். வெவ்வேறு தாவரங்களில் இவற்றை வெவ்வேறு வடிவங்களில் காணலாம்.

கருக்கட்டலின் பின்னர் உருவாகும் கருவணுவே, பின்னர் வித்தாக விருத்தியடையும். வித்தைச் சூழ்ந்திருக்கும் சூலகத்தின் ஏனைய பகுதிகள் பழமாக விருத்தியடையும்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=சூல்வித்து&oldid=2319481" இருந்து மீள்விக்கப்பட்டது