உள்ளடக்கத்துக்குச் செல்

சூலக அறை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இருசூலக அறை, பல்சூலக அறையுள்ள தக்காளிப் பழம்

சூலக அறை என்பது (Locule) ஓர் உயிரினத்தின் (விலங்கு, தாவரம், பூஞ்சை) ஒரு பகுதி அல்லது ஓர் உள்ளுறுப்புனுள் அமைந்த சிறு குழிவு[1] அல்லது பகுதியைக் குறிக்கும். "Locule" என்பது இலத்தின் மொழியில் "சிறிய இடம்" என்று பொருள்படும்.

பூக்கும் தாவரங்களில் இது, சூலகத்தினுள் (சூல்வித்திலை அல்லது சூல்வட்டம்) அமைந்துள்ள அறையாக இருக்கும். சூலக அறைகள் எண்ணிக்கையின் அடிப்படையில் ஒற்றைச்சூலக அறை, இருசூலக அறை, முச்சூலக அறை பல்சூலக அறை ஓரறைகள் கொண்டவை என்றமையும். எத்தனை சூலிலைகள் உள்ளதோ அத்தனை சூலக அறைகள் அல்லது அதற்கும் குறைவான அளவில் இருக்கும். சூலக அறையில் சூல்கள் அல்லது வித்துகள் காணப்படும்.

சூலகஅறை என்ற சொல்லானது, மகரந்தங்களைக் கொண்டுள்ள மகரந்தப்பைகளையும் குறிக்கலாம்.[2]

பைப்பூஞ்சைத் தொகுதிகளில், வித்துக்கலவை உருவாகும் இனபெருக்கக் பாகத்தினுள் சூலக அறைகள் உள்ளன.[3][4]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Loculus". Oxford Dictionaries. Archived from the original on 2016-06-02. பார்க்கப்பட்ட நாள் 2017-07-09.
  2. Hickey, M.; King, C. (2001). The Cambridge Illustrated Glossary of Botanical Terms. கேம்பிறிட்ஜ் பல்கலைக்கழகப் பதிப்பகம்.
  3. "Fungi Glossary". Palaeos.com. Archived from the original on 2015-11-18. பார்க்கப்பட்ட நாள் 2016-05-04.
  4. Palaeos: Life Through Deep Time, பார்க்கப்பட்ட நாள் 4 May 2016
"https://ta.wikipedia.org/w/index.php?title=சூலக_அறை&oldid=4045264" இலிருந்து மீள்விக்கப்பட்டது