வித்தகவிழையம்
Jump to navigation
Jump to search

வித்தகவிழையம்:கோதுமை மணி
வித்தகவிழையம் (endosperm) என்பது கருத்தரித்தலின் போது பெரும்பாலான பூக்கும் தாவரங்களின் விதைக்குள்ளே உற்பத்தியாகும் திசுவாகும். முளையத்தைச் சூழ்ந்திருக்கும் இத்திசுவில் எண்ணெய்சத்தும் புரதமும் இருந்தாலும், மாப்பொருள்(ஸ்டார்ச்) வடிவில் ஊட்டச்சத்தைக் கொண்டுள்ளது. இது மனித உணவுகளில் முக்கிய ஊட்டச்சத்து மூலமாகயிருக்கிறது. எடுத்துக்காட்டாக, பார்லி வித்தகவிழையம் பீர் உற்பத்தி முக்கிய ஆதாரமாகவும், கோதுமை வித்தகவிழையம், ரொட்டிக்கு மாவாகவும் பயன்படுகிறது. தேங்காய் மற்றும் சோளம் போன்றவற்றின் உண்ணப்படும் பகுதி வித்தகவிழையம் ஆகும். ஆர்க்கிட் போன்ற தாவரங்களில் வித்தகவிழையம் விதையில் இல்லாமல் இருக்கும்.