சூல்வித்தடி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

சூல்வித்தடி பறவை, ஊற்வனவற்றின் முட்டை மற்றும் தாவர சூல்களில் காணப்படுகின்ற ஓர் அமைப்பு. இது கருவுணவு அல்லது மூலவுருபையகத்தை பெரிய அமைப்புகளுடன் இணைக்க அல்லது நிலைநிறுத்த உதவுகிறது.

விலங்குகளில்[தொகு]

பெரும்பாலான பறவைகள் மற்றும் ஊர்வனவற்றின் முட்டைகளில் சூல்வித்தடி திசு இரண்டு சுருள் பட்டைகளை கொண்டிருக்கும். இது முட்டையின் மஞ்சள்கருவை வெள்ளைக்கருவில் நிலைநிறுத்த உதவுகிறது. கருவை நிலை நிறுத்துவதே சூல்வித்தடியின் பணியாகும். சமையலில் முட்டைகளின் பயன்பாட்டினை பொறுத்தவரை குறிப்பாக அடுதலில் ஒரு சீரான தன்மையை பெறுவதற்காக சூல்வித்தடிகள் அகற்றப்படுகின்றன.

தாவரங்களில்[தொகு]

தாவர சூல்களில், சூல்வித்தடி சூலுறைகளிலுள்ள நுண்டுழை திறப்புக்கு எதிரே அமைந்துள்ளது. இது விதையுறைகளும் மூலவுருப்பையகமும் இணையும் இடத்தில் காணப்படும் திசுவாகும். தாவரத்திலிருந்து ஊட்டசத்துக்கள் சூல்காம்பு, சூல் வெளியுறை மற்றும் சூலடி வழியாக நியூசெல்லஸ்-க்கு செல்கிறது. ஒரு பூக்கும் தாவரத்தில் சூலக வளர்ச்சியின் போது சூல்வித்தடிப்பகுதியிலுள்ள மூன்று செல்கள் ஆன்றிபோடலாக ஆக மாறுகிறது.

சூலடி – கருவூறு[தொகு]

பெரும்பாலான பூக்கும் தாவரங்களில் கருவுறுதலின் போது மகரந்தகுழல் நுண்டுழை சூலுறையில் உள்ள நுண்டுழைத் திறப்பு வழியாக சூலினுள் நுழைகிறது. (புரைவழி – கருவூறு) சூல்வித்தடி - கருவுறுவில் மகரந்த குழாய் நுண்டுளைக்கு மாறாக சூல்வித்தடி வழியாக ஊடுருவுகிறது.[1] சூல்வித்தடி – கருவூறு முதலில் ஓரில்ல தாவர(ம்) சிற்றினங்களுள்ள கேசியோரைனேசி குடும்பத்திலும்; பின்னர் மற்ற தாவரங்களிலும் கண்டறியப்பட்டது. எடுத்துக்காட்டாக பிஸ்த்தா மற்றும் வாதுமை.

குறிப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சூல்வித்தடி&oldid=2321364" இருந்து மீள்விக்கப்பட்டது