தாய்ப்பால்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மனிதத் தாய்ப்பாலின் இரண்டு 25-மில்லி மாதிரிகள் காட்டப்பட்டுள்ளன. இடது மாதிரி தாயால் உற்பத்தி செய்யப்பட்ட முதல் பால் ஆகும், இரண்டாவது மாதிரி அதே முறையில் பின்னர் சேகரிக்கப்பட்டது.

தாய்ப் பால் (breast milk) அல்லது தாயின் பால் (mother's milk) என்பது ஒரு மனிதப் பெண்ணின் மார்பகத்தில் அமைந்துள்ள பாற்சுரப்பிகளால் உற்பத்தி செய்யப்படும் பால் ஆகும். புதிதாகப் பிறந்த குழந்தைகளுக்கான ஊட்டச்சத்துக்கான முதன்மை ஆதாரமாகத் தாய்ப்பால் உள்ளது, இதில் கொழுப்பு, புரதம், கார்போவைதரேட்டுகள் (லாக்டோசு, மனிதப் பால் குறைசாக்கரைடுகள்) மற்றும் மாறக்கூடிய தாதுக்களும் உயிர்ச்சத்துகளும் உள்ளன.[1] தாய்ப்பாலில் ஒரு குழந்தையை நோய்த்தொற்று, மற்றும் அழற்சிக்கு எதிராகப் பாதுகாக்க உதவும் பொருட்களும் உள்ளன, அதே நேரத்தில் நோயெதிர்ப்பு அமைப்பு, குடல் நுண்ணுயிர்க்கட்டுகளின் ஆரோக்கியமான வளர்ச்சிக்கும் பங்களிக்கிறது.[2]

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=தாய்ப்பால்&oldid=3626574" இருந்து மீள்விக்கப்பட்டது